இந்த வார இணையதளம் ஆங்கிலச் சொல்லின் சரியான உச்சரிப்பு என்ன?
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2013
00:00

ஆங்கில மொழியைப் பயன்படுத்துவோர் அடிக்கடி சந்திக்கும் பிரச்னை, அதனை உச்சரிக்கும் விதம் குறித்துத் தான். தமிழ் மொழி போல, நாம் எழுதுவதனை உச்சரிக்கும் பழக்கம் ஆங்கிலத்தில் இல்லை. உச்சரிப்பு, இம்மொழியைப் பயன்படுத்துவோர் வெகுநாட்களாகப் பழகி வந்த விதத்திலேயே அமைந்துள்ளது. நம்மில் பலர், ஆங்கில மொழியை எழுதிப் பயன்படுத்தும் வகையில் நல்ல திறமை பெற்றிருந்தாலும், அதனை உச்சரிக்கும் வகையில் நல்ல வழி காட்டுதல் இன்றி உள்ளனர். இந்த குறையைத் தீர்க்கும் வகையில், இணையதளம் ஒன்று இயங்குகிறது. அதன் பெயர் Forvo. இது இயங்கும் தள முகவரி http://ww.forvo.com.
இதன் முகப்பு பக்கத்தில், அன்றாடம் ஆர்வமூட்டும் பல விஷயங்கள் கிடைக்கும். Language of the Day, latest popular pronunciations, the featured Hot Category எனப் பல பிரிவுகள் உள்ளன. இந்த வகைகளுக்கான டேப்களும் இணைய தளத்தில் தரப்பட்டு, அவற்றைப் பெற்றுப் பயன்படுத்துவதனை எளிமையாக்குகின்றன. Categories என்ற ஒரு பிரிவில், நாம் உச்சரிப்பு தேடும் சொற்களின் (food, medicine, people, music, holidays, and sports) வகையைக் காட்டுகிறது.
நீங்கள் குறிப்பிட்ட சொல் ஒன்றின் உச்சரிப்பினைத் தெரிந்து கொள்ள விரும்பினால், அச்சொல்லினைத் தேடிப் பெற, தேடல் கட்டம் ஒன்றும், மேலாக வலது பக்கத்தில் தரப்பட்டுள்ளது. இதில் சொல்லை டைப் செய்து, தேடிப் பெற்றவுடன், அருகில் உள்ள பிளே பட்டனை அழுத்தியவுடன் உச்சரிப்பு ஒலிக்கப்படுகிறது.
உங்களுடைய உச்சரிப்பினைப் பதிவு செய்து போட்டுப் பார்த்து ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுமா? இதற்கு நீங்கள் இந்த தளத்தில் பதிந்து கொள்ள வேண்டும். இது இலவசமே. யூசர் நேம், மின்னஞ்சல் முகவரி ஆகியனவற்றைக் கொடுத்துப் பதிந்து கொள்ளலாம். பச்சை நிறத்தில் உள்ள Join Forvo பட்டனைக் கிளிக் செய்து இந்தப் பணியினை மேற்கொள்ளலாம். தகவல்களைக் கொடுத்துவிட்டு Create Account பட்டனை அழுத்தியவுடன், உங்கள் அக்கவுண்ட் உருவாக்கப்படும். பின், எந்த நேரத்திலும், உங்கள் அக்கவுண்ட்டை நீங்கள் கையாளலாம்.
மொழியைச் சரியாக, அதுவும் அன்றாடம் நாம் புழங்கும் ஆங்கிலத்தினைச் சரியாக உச்சரிப்பதுதானே நல்லது. தளம் சென்று பார்த்து விடுங்கள்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X