பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2013
00:00

விண்டோஸ் 8 முற்றிலும் புதிய தொழில் நுட்பத்தில் உருவான ஓ.எஸ். என்றாலும், மக்களின் சில விருப்பங்களுக்கு எதிராக, நிறுவனங்கள், தங்கள் எண்ணங்களை வற்புறுத்த முடியாது என்பதை, விண்டோஸ் 8.1 சிஸ்டம் வெளியீடு காட்டியுள்ளது. உங்கள் கட்டுரை இதனை நன்றாக விளக்குகிறது.
டாக்டர் என். நமசிவாயம், கோவை

விண்டோஸ் 8 சிஸ்டத்தில், ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களை, மிக அழகாகவும் தெளிவாகவும் விளக்கித் தரப்பட்டுள்ள கட்டுரை சிறப்பான வழி காட்டியாக உள்ளது.
கே.எஸ். சிதம்பரம், திண்டுக்கல்.

ஆண்ட்ராய்ட் சிஸ்டம் மிகவும் வளைந்து கொடுக்கும் தன்மை உடையது. எனவே, ஆப்பிள் நிறுவனத்தின் மினி ஐ பேடினை பின்னுக்குத் தள்ளுவதில் ஆச்சரியமில்லை.
என். உமா ராணி, சென்னை.

மால்வேர் பாதிப்பு எனத் தெரிந்தவுடன் எல்லாரையும் ஒருவிதமான பதற்றம் பற்றிக் கொள்ளும். அப்படிப் பட்டவர்கள் உங்கள் வழி காட்டும் கட்டுரையைப் படித்து, அதில் தரப்பட்டுள்ள வழிகளைப் பின்பற்றினால், டேட்டா இழக்காமல் தப்பிக்கலாம்.
எஸ். சுகன்யா, திருப்பூர்.

யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவில், ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்களைப் பதிவு செய்து, அவற்றின் துணை கொண்டு, மீண்டும் பதிவது, நம் வேலையினை மிச்சப் படுத்துகிறது. இது போன்ற மைக்ரோசாப்ட் தரும் வசதிகளை படிப்படியாக விளக்கும் கட்டுரை
களைப் படங்களுடன் தரவும்.
ஜ. அப்துல் சமது, உத்தமபாளையம்.

சிஸ்டம் மீட்டுப் பதிவது என்பது மிகச் சிக்கலான ஒன்று. எங்கேயாவது பிரச்னை ஏற்பட்டால், பாதிப்பு ஏற்படும். இருப்பினும், உங்கள் யு.எஸ்.பி வழி சிஸ்டம் அமைக்கும் கட்டுரை, இந்த வழிகளை, அதற்கான எச்சரிக்கைகளுடன், ஒரு பாடம் போலத் தந்துள்ளது.
எஸ். ஆனந்தராஜ், பழநி.

சிறப்பு வகுப்புகள் சென்று படித்தால் தான், விண்டோஸ் 8 சிஸ்டத்தின் செயல்முறையினைப் புரிந்து கொள்ள முடியும் என பலரும் கருத்து தெரிவித்த நிலையில், அதன் பல்வேறு திரைகள் குறித்த வழிகாட்டுதல்கள், மிகப் பயன் தரும் வகையில் உள்ளன.
ஆ.ரதிப் பிரியா, சிவகாசி.

ஸ்டார்ட் ஸ்கிரீன் மற்றும் லாக் ஸ்கிரீன் குழப்பம் விண்டோஸ் 8 சிஸ்டம் நிறையவே தருகிறது. நீங்கள் தந்துள்ள குறிப்புகள், சிலவற்றை தீர்த்து வைப்பதாக தெளிவாக உள்ளன. நன்றி.
கா. ஜெயப்பிரகாசம், கல்லிடைக் குறிச்சி.

கிட்ரெக்ஸ் இணைய தேடல் தளம், முதல் பார்வையிலேயே, குழந்தைகள் விரும்பும் வகையில், அவர்கள் மனதினை ஈர்க்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது. இதில் தரப்பட்டுள்ள வசதிகளும், குழந்தைகளின் நலனை மனத்தில் கொண்டே உள்ளது. பாராட்டத்தக்க சர்ச் இஞ்சின்.
கே.கிருஷ்ணராஜ், சென்னை.

சிறுவர்களின் எண்ணங்களுக்குப் பாதுகாவலனாக இயங்குவது மட்டுமின்றி, முழுமையான தேவைப்படும் தகவல்களை, சிறுவர்களை இலக்காகக் கொண்டு தரும் வகையில், கிட் ரெக்ஸ் செயல்படுவது, அதன் சிறப்பு அம்சமாகும். இதனைச் சுட்டிக் காட்டிய தங்களுக்கு நன்றி.
ஆர். காந்திமதி நாதன், காரைக்கால்.

பட விளக்கத்துடன், என் வேர்ட் டெக்ஸ்ட் மறைப்பது குறித்த கேள்விக்கு அளித்த பதில், எனக்கு மிகவும் உதவியது. வேர்டில், இது போல, டெக்ஸ்ட் சார்ந்து தரப்பட்டுள்ள செயல்பாடுகளுக்கான டிப்ஸ் அதிக அளவில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
எஸ்.மகேஸ்வரி, காரைக்கால்.

பி.எஸ்.என்.எல்.நிறுவனம் என்னதான் இலக்கு வைத்து மொபைல் சேவை வழங்கினாலும், அதன் வாடிக்கையாளர் நல மையங்களுடன், அக்கறையுடன் செயல்பட்டால் மட்டுமே, இலக்கை அடைய முடியும்.
கே. சித்தார்த், மேடவாக்கம், சென்னை.

வைரஸ் அல்லது எந்த மால்வேர் பாதிப்பு நிகழ்ந்தாலும், இணையத்தில் அது போன்ற நிகழ்வுகளைத் தேடி அறிவது, இதன் தாக்கத்தினையும் தீர்வையும் அறியும் நல்ல வழியாகும். இதனைச் சுட்டிக் காட்டி எழுதியுள்ள தங்கள் ஆசிரியருக்கு என் பாராட்டுகள்.
டாக்டர் எஸ்.சுகவனேஸ்வரன், கம்பம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X