கேன்பின் ஹோம்ஸ் நிறுவனத்தில் அதிகாரி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2013
00:00

வீட்டு வசதிக் கடன் தருவதில் இன்று பல்வேறு நிறுவனங்கள் சிறப்பு பெறுகின்றன. இந்தியாவில் இந்த துறை கடந்த சில ஆண்டுகளாக நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. பொதுத் துறை வங்கியான கனரா வங்கியின் சிறப்பு வீட்டு வசதி நிறுவனம்தான் கேன்பின் ஹோம்ஸ் ஆகும். இந்த நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஒரு வருட காலத்திற்கு அதிகாரிகளைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது. ஒரு வருட ஒப்பந்த காலம் பணிபுரியும் திறனைப் பொறுத்து நீட்டிக்கும் வாய்ப்புகளும் உள்ளன.
தேவைகள்: கேன்பின் ஹோம்ஸின் இள நிலை அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். ஏதாவது ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். இத்துடன் கம்ப்யூட்டர் தொடர்புடைய திறனும் கட்டாயம் தேவைப்படும். விண்ணப்பிக்கும் மா நிலத்தின் ஆட்சி மொழியில் எழுத, படிக்க மற்றும் பேசத் தெரிந்து இருக்க வேண்டும். அதே போல் இருசக்கர வாகனம் ஓட்டுவதும் தேவை.
மற்றவை: இந்தப் பதவிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டால் முதல் ஆண்டு மாதம் ரூ.15 ஆயிரத்து 200ம், 2ம் ஆண்டு நீடிப்பு பெற்றால் மாதம் ரூ.18 ஆயிரமும், 3ம் ஆண்டு மாதம் ரூ.23 ஆயிரமும் ஊதியமாக வழங்கப்படும். இந்தப் பணி இடங்களுக்கு நேர்காணல் முறையில் தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான படிவங்களை இணையதளத்திலிருந்து டவுன்லோடு செய்து பெற வேண்டும். பின்னர் அதனை நிரப்பி, ரூ.100/-க்கான டி.டி.,யை CANFIN HOMES LTD., என்ற பெயரில் பெங்களூருவில் மாற்றத்தக்கதாக எடுத்து இணைக்க வேண்டும். முழுமையான தேவைகளை இணையதளத்திலிருந்து அறியவும். விண்ணப்பங்களை பின்வரும்முகவரிக்கு 29.06.2013க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
முகவரி:
The Asst. General
Manager & HRM,
CanFin Homes Ltd.,
Registered Office: No.29/1, Ist Floor, Sir.MN Krishna Rao Road, Basavangudi,
Bangalore - 560 004
இணையதள முகவரி : www.canfinhomes.com/juniorofficers/TERMS%20&%20CONDITIONS.pdf

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X