ஐ.எஸ்.டி. அழைப்புகளைக் கட்டுப்படுத்தும் பி.எஸ்.என்.எல்.
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2013
00:00

என் நண்பர் ஒருவர், அமெரிக்காவில் வாழும் தன் ஒரே மகளுடன் நாள்தோறும் பேசுவதற்கு, தன் பி.எஸ்.என்.எல். ப்ரீ பெய்ட் இணைப்பினையே பயன்படுத்தி வந்தார். திடீரென ஒரு நாள், வெளிநாட்டு அழைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன என்ற செய்தி கிடைக்கவும். பதறிப் போய் என்னிடம் வந்தார். விசாரித்ததில், இந்தியாவில் இயங்கும் ட்ராய் அமைப்பின் உத்தரவுப்படி, பி.எஸ்.என்.எல். தன் ப்ரீ பெய்ட் இணைப்புகளுக்கு, வெளிநாட்டு எண்களை அழைத்துப் பேசும் வசதி தடை செய்திருப்பதாகத் தகவல் கிடைத்தது.
ட்ராய் விதிகளின்படி, தடை செய்யப்பட்ட இந்த வசதி, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், எஸ்.எம்.எஸ். மூலம் அறிவிக்கப்பட வேண்டும். ஆனால், பி.எஸ்.என்.எல். அவ்வாறு அறிவிக்காததால், பலரும் குழப்பத்திற்கு ஆளாகினார்கள். இறுதியில், வெளிநாட்டு எண்களை அழைக்கும் வசதியை மீண்டும் பெற, எந்த வழியைக் கையாள வேண்டும் எனத் தெரிந்து கொண்டு, அவ்வழியின் மூலம், ஐ.எஸ்.டி. அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி மீண்டும் பெறப்பட்டது.
எந்த சிம் கார்டுக்கு அந்த அழைப்பு வசதி வேண்டுமோ, அதிலிருந்து 53733 என்ற எண்ணுக்கு ACT ISD GÚ (Activate ISD) எஸ்.எம். எஸ். அனுப்பினால், உடனே நம் விண்ணப்பம் பெறப்பட்டதாகவும், முடிவு உடனே அறிவிக்கப்படும் எனவும் எஸ்.எம்.எஸ். பெறப்பட்டது. சில நிமிடங்கள் கழித்து, ஐ.எஸ்.டி. அழைப்பு வசதி தரப்பட்டுள்ளதாக எஸ்.எம். எஸ். கிடைத்தது.
இந்த வசதியை வேண்டாம் என எண்ணுபவர்கள், மீண்டும் ‘DEACT ISD’ என அதே எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rakesh Kumar - trichy,இந்தியா
25-ஜூன்-201309:10:30 IST Report Abuse
Rakesh Kumar airtel பூஸ்டர் pack 25/- வாங்கி போன் செய்யயும் , 50 paise for one minute ,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X