அபிஷேக் ரகுராமின் அபார இசை ஞானம்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2013
00:00

கர்நாடக சங்கீதம் பாடுவதில், பல வகை உத்திகள் உள்ளன. வெறும் மெலடியை, பிரதானமாக வைத்து பாடி, புகழ் பெறுவது ஒரு வகை. ஜுகல் பந்தி போல, வெரைட்டியாக பாடல்களை பாடி புகழ் பெறுவது, மற்றொரு வகை. ஆனால், சங்கீதத்தை சீரியசாக அணுகி, அதன் ஆழங்களை வெளிப்படுத்திப் பாடுபவர்கள் ஒரு சிலரே.
அண்மையில், கர்நாடக இசைக் கச்சேரி ஒன்றில், இளம் இசைப்புயல் அபிஷேக் ரகுராம் பாடிய விதம், செவிகளுக்கு மட்டுமின்றி சிந்திக்கவும் வைத்த, ஒரு இனிய அனுபவம் ஆகும். ரசிகர்களுக்கு, புரிய வைக்கும் புத்திசாலித்தனம் அவரிடம் உள்ளது. அவர் கையாண்ட சாரங்கா, சாருகேசி, பிரதானமாக கையாண்ட கரஹரப்ரியா ராகங்களின், விரிவான ஆலாபனை, தெள்ளத் தெளிவாகஅமைந்தன . ராகங்களின் ஜீவனை முதலில், அதன் அனுஸ்வரங்களாக நிழல்களைத் தொட்டு விரிவுபடுத்தி, பின், ஜீவ மூர்ச்சனைகளின் நிஜங்களை அணுகிப் பாடினார்.
எப்போதோ, அமரர் கே.பி.சுந்தராம்பாள் பாடிக் கேட்ட, "ஞானப்பழத்தைப் பிழிந்து' பாடல், பளிச்சென்று இந்நிகழ்ச்சியில் நினைவு வந்தது. அபிஷேக் ரகுராம் இசை, ஞானத்தைப் பிழிந்து ரசிகர்களுக்கு பருக தந்தார். ராக ஆலாபனை, நிரவல் மற்றும் ஸ்வரப்ரஸ்தாரங்களின் அட்சரம், புள்ளி தள்ளிப் போட்டு, கணக்குகளுடன் கோர்வைகளை பாடிய திறமை ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
கல்யாணியின் ராக முன்னோடியும், தொடர்ந்த வனஜாட்சி வர்ணமும், நிகழ்ச்சியில் களைகட்ட வைத்தது. நிறைவு பகுதியில், முருகனின் வேலின் மகிமை பற்றியும், மாய வாழ்வினைப் பற்றியும், ராகமாலிகை வருத்தத்துடன் மனதை உருக்கி தொடர்ந்து, தஞ்சாவூர் சங்கரய்யர் இயற்றிய, "மனத்திற்குகந்தது முருகனின் நாமம்' (சிந்து பைரவி) படு சுகமான உணர்வை ஏற்படுத்தியது. அபிஷேக் சங்கீதத்தில், சாகசங்கள் செய்து, சாதனை படைக்கும் திறமை உள்ளவர் என்பதை, உணர வைத்தது இந்நிகழ்ச்சி.
தாத்தா பாலக்காடு ரகுவிடம் இருந்து, லய ஞானம் பெற்றதை இதில் வெளிப்படுத்தினார். கொரட்டூர் டாக்டர் நல்லி விவேகானந்தா பள்ளி திறந்தவெளி கலையரங்கத்தில், திரண்டு வந்திருந்த நல்ல சங்கீதம் கேட்கும் ரசிகர்களின், பலத்த வரவேற்பு அபிஷேக்கிற்கு இந்நிகழ்ச்சியில் கிடைத்தது.
பக்கப்பலமாக வயலினில் இனிமை, கச்சிதம், அனுசரணை ததும்ப வாசித்த விட்டல் ராமமூர்த்தி அமரர் லால்குடியின் சீடர். சங்கர நாராயணனின் லயம் செவிகளுக்கு நாதமே அலாதி, சுகமாக இருந்தது. கச்சேரி முழுவதும் படுஅனுசரணை. மெருகான வாசிப்பு பாராட்ட வைத்தது.
- மாளவிகா

Advertisement

 

மேலும் கலை மலர் செய்திகள்:Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.