இயற்கை அழகு கொஞ்சும் வென்னீர் ஊற்றுகள்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2013
00:00

இயற்கை, எத்தனையோ அற்புதங்களை உள்ளடக்கியுள்ளது. சுவிட்சர்லாந்து, குளிர்ந்த சீதோஷ்ண நிலைக்கு பெயர் பெற்ற நாடு. ஆனால், அங்கும் ஒரு சில இடங்களில், வென்னீர் ஊற்றுகள் உள்ளன. பேட்ராக்ஸ் என்ற இடத்தில், ஏராளமான வென்னீர் ஊற்றுகள் உள்ளன. பேட்ராக்ஸிலிருந்து, 45 நிமிட நேரத்தில் தமினா கார்ஜ்ஜை என்ற இடத்தை அடையலாம். இங்கு, 300 ஆண்டுகளாக ஸ்பாக்கள் இயங்குகின்றன. முதல் ஸ்பா...1700ம் ஆண்டுகளின் துவக்கத்தில் இயங்க ஆரம்பித்தது.
உடலில் கைகள், கால்கள் செயல் இழந்து போனவர்கள், மூட்டு வலி உள்ளவர்கள் மற்றும் உடல் சார்ந்த பல வலிகளுக்கு வென்னீர் சிகிச்சை அருமருந்தாக உள்ளது.
அதனால், மேற்கண்ட நோயாளிகளை நகரும் சேரில் உட்கார வைத்து, இந்த வென்னீர் ஊற்றுகளில், பல நாட்கள் குளிக்கச் செய்கின்றனர் மருத்துவர்கள்.
தமினா தெர்மே என்ற இடத்தில், நான்கு நீச்சல் குளங்கள் உள்ளன. ஒவ்வொன்றும், வெவ்வேறு சீதோஷ்ண நிலை கொண்டவை. தேவைக்கு ஏற்ப, அந்தந்த நீச்சல்குளத்தில் இறங்கி குளிக்கலாம். இங்கு, சராசரி வெப்பம் 36 டிகிரி செல்சியஸ். கைகால் இயங்காமல் இருப்பவர்கள், படுத்து அனுபவித்து குளிக்க ஏதுவாய், தனித்தனி டப் வைத்து பைப் மூலம் அதில் வெந்நீர், ஊற்றுநீர் விழும்படி செய்துள்ளனர். இரண்டு மலைகளின் குறுகிய பாதை வழியே தண்ணீர் வருவதால், மூலிகை குணங்களுக்கும் பஞ்சமில்லை. நம் நாட்டு பிரபல தொழிலதிபர்களின் மனைவியர், இங்கு அடிக்கடி வந்து தங்கி குளிப்பதுண்டு. முகேஷ் அம்பானியின் அம்மா, டென்னீஸ் வீரர் பெடரர் உட்பட பலர், இங்கு மாமுலாக வந்து குளித்துச் செல்கின்றனர்.
ஜோல்னா பையன்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
devarajan ramakrishnan - Chennai,இந்தியா
05-ஜூலை-201319:53:39 IST Report Abuse
devarajan ramakrishnan டெல்லிஇல் இருந்து மனாலி செல்லும் வழியில் மணிக்கரன் என்னும் இடத்தில் வெந்நீர் ஊற்று உள்ளது. மிகவும் இதமான வெப்பத்தில் பல மினரல்ஸ் மற்றும் மூலிகை கலந்த நீரில் குளிப்பது உடலுக்கு நல்லது.- Devarajan, Chennai
Rate this:
Share this comment
Cancel
anandhaprasadh - Bangalore,இந்தியா
01-ஜூலை-201312:26:56 IST Report Abuse
anandhaprasadh சில வருடங்களுக்கு முன் இந்தோனேசியா சென்றிருந்தபோது அங்கிருந்த இயற்கையாக அமையப் பெற்ற வெந்நீர் ஊற்றுக்களில் குளித்து அதன் அருமையை உணர்ந்தேன்... அந்தப் பகுதியில் உருவாகும் ஊற்றுக்கள் எரிமலைப் பகுதியிலிருந்து வருவதால் இயற்கையாகவே வெப்பமாக இருப்பதாகக் கூறினார்கள்.. மேலும் அந்த நீருக்கு மருத்துவ குணங்களும் இருப்பதாகக் கேள்விப்பட்டேன்... ஸ்விட்சர்லாந்துக்கு நாம் செல்ல முடியாவிட்டாலும் இதைப் படிக்கும் வாசகர்கள் முடிந்தால் ஒருமுறை இந்தோனேசியா சென்று வாருங்கள்.. பயணச் செலவும் குறைவு, இது போன்ற இயற்கையாக அமையப் பெற்ற அற்புதங்களும் அதிகம்...
Rate this:
Share this comment
rangabashyam - singapore,சிங்கப்பூர்
02-ஜூலை-201311:14:20 IST Report Abuse
rangabashyamcan you pls inform the location in indonishya...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.