அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2013
00:00

அன்புள்ள அக்கா —
நான் மிகவும் அழகாக இருப்பேன். கல்லூரியில் படிக்கும்போதே எனக்கு திருமணமாகி விட்டது. சில வீணான வதந்திகள் காரணமாக, முதல் நாளிலிருந்து, என் கணவருக்கு என் மீது சந்தேகம். என்னுடன் பேசவே மாட்டார்.
இரண்டு வருடங்கள் என் அப்பா வீட்டிலேயே இருந்தேன். பின், ஒரு வழியாக சமரசம் பேசி கணவர் வீட்டிற்கு அனுப்பி விட்டனர். வந்தபின் தான் தெரிந்தது அவருக்கும், அவரது அண்ணிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று.
இவ்வளவு படித்துப் பெரிய பதவியில் உள்ளவர் இப்படி செய்கிறாரே என்று வேதனைப்படுவேன். இந்நிலையில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயானேன். குழந்தை பிறந்ததிலிருந்து எங்களுக்குள் தாம்பத்திய உறவே கிடையாது.
என் அப்பா மிகப்பெரிய செல்வந்தர். நான் அழகுடன் கூடிய புத்திசாலிப் பெண். இதனால், அவருக்கு தாழ்வு மனப்பான்மை அதிகம். எனக்கோ என் மேல் சந்தேகப்படுவதால் அவர்மீது தாளாத கோபம். ஆனால், குழந்தைகள் மீது இருவருமே மிகவும் அன்பு செலுத்துவோம்.
குழந்தைகளுக்கும், வெளியில் இருப்பவர் களுக்கும் எங்கள் பிரச்னை தெரியாது. நான் மிகவும் வசதியான சூழலில் பொத்திப் பொத்தி வளர்க்கப்பட்டதால், செக்ஸ் இல்லாதது எனக்கு பெரிய குறையாகத் தெரியவில்லை.
இந்நிலையில் ஒரு வருடத்திற்கு முன், நான் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. அவரும் ஒரு அரசு அதிகாரி. அவருடன் அடிக்கடி போனில் பேச வேண்டி வந்தது. மனம் விட்டு பேசிய பின் தான் தெரிந்தது, அவர் வாழ்வும் என்னுடையதைப் போல் சோகம் நிறைந்தது என்று. போனில் பேசினோமே தவிர, நேரில் அடிக்கடி பார்க்க முடியாது.
அவருடைய டிரைவருக்குத் தெரியாமல் அவரோ அல்லது என்னுடைய டிரைவருக்குத் தெரியாமல் நானோ சென்று பார்க்க முடியாது. எப்போதாவது தாங்க முடியாமல் அவர் என்னைப் பார்க்க வந்தால், அவர் நடுங்கிக் கொண்டிருப்பார். என் நிலைமையும் இதுவே.
என் மீது உயிரையே வைத்திருக்கிறார். ஒரு குழந்தையைக் கொஞ்சுவதைப் போல் என்னைக் கொஞ்சுவார். ஒரு கணவரின் அன்பு என்பது என்னவென்றே தெரியாத எனக்கு இது புதிது. ஆறு மாதங்களுக்கு முன் அவர் வேறு ஊருக்கு மாறுதலாகி சென்று விட்டார்.
அன்று நான் அழுதது போல் என் வாழ்க்கையில் என்றுமே நான் அழுததில்லை. தினமும் ஒருமுறை என்னுடன் போனில் பேசி விடுவார். சில நாட்கள் இரண்டு, மூன்று முறை கூட பேசி விடுவார்.
இந்த ஆறு மாதத்தில் இரண்டு முறை என்னைப் பார்க்க வந்தார். என்னைப் பார்க்கும் போதெல்லாம் என்னிடம் கேட்பது, "இவ்வளவு அழகாகவும், இன்டலிஜென்ட்டாகவும் இருக்கும் நீ, எப்படிடா இப்படியொரு வாழ்க்கை வாழ்ற?' என்பதுதான்.
அக்கா, என் வாழ்க்கையில் இப்படியொரு குழப்பம் வரும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. முன்பெல்லாம் எனக்கு துரோகம் செய்யும் கணவருக்கு, பதிலுக்கு நானும் துரோகம் செய்ய வேண்டுமென நினைத்திருக்கிறேன். ஆனால், நிஜமாகவே நடக்கும் போது குற்ற உணர்வில் துடிக்கிறேன்.
நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ முடியாது என்று இருவருக்குமே தெரியும். ஆனாலும், அவருடன் பேசாமல் என்னால் இருக்க முடியவில்லை. அவருக்கோ நான்தான் உலகம். என் கையில் ஒரு சிறு காயம் ஏற்பட்டாலும், அடுத்த முறை போன் செய்யும்போது மறக்காமல் விசாரிப்பார்.
அன்பேயில்லாத கணவர், அன்பே உருவான என்னவர்... இருவருக்குமிடையே சிக்கித் தவிக்கிறேன். அக்கா நான் என்ன செய்ய வேண்டுமென தயவு செய்து சொல்லுங்கள். அவரை மறந்துவிடு என்று மட்டும் சொல்லாதீர்கள். அதற்குப் பதில், செத்து விடு என்று சொல்லுங்கள், சந்தோஷமாக செத்து விடுகிறேன். என் குழந்தை களை என் அம்மா வளர்த்து விடுவார்.
எங்கள் இருவருக்கும் இடையே உள்ள உறவு காதல் அல்ல; அதையும் தாண்டி புனிதமானது! "விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்த உறவு அது!'
ஒரு வருடமாக என் இதயத்தில் பூட்டி வைத்துள்ள எனது உணர்வுகளை இன்று உங்களிடம் கொட்டி விட்டேன். எனக்குத் தயவு செய்து உங்கள் ஆலோசனைகளைக் கூறவும்.
இப்படிக்கு,
உங்கள் அன்புச் சகோதரி.


அன்பு சகோதரி —
மிக நீளமானக் கடிதத்தையும் எழுதி, "அவரை மறந்து விடு' என்று மட்டும் சொல்லாதீர் எனக் கட்டளையும் போட்டிருக்கிறாய்...
சரி, இப்போது நீ இருக்கும் நிலையில் நான் என்ன சொன்னாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பக்கு வம் உனக்கில்லை. நிதானமாக யோசித்துப் பார்; புரியும்.
"சில வீணான வதந்திகள் காரணமாக முதல் நாளிலிருந்தே என் கணவருக்கு என் மீது சந்தேகம்' என்று கடிதத்தின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தாய்...
அது என்ன சந்தேகம்? அப்படியொரு சந்தேகத்தை வளர விட்டிருக்கலாமா நீ? இரண்டு வருடங்கள், அவர் அழைக்கவில்லை என்று நீ பிறந்த வீட்டில் உட்கார்ந்து விட்டதன் பலன் - அவருக்கும், அவரது அண்ணிக்கும் அங்கே உறவு பலப்பட்டு விட்டது. இந்த ஒரு விஷயத்தில் மட்டும் பெண்கள் விட்டுக் கொடுக்கவே கூடாது.
"புருஷன் வந்து கூப்பிடட்டும். அப்புறம் உன்னை அனுப்பி வைக்கிறேன்' என்று உன்னைப் பெற்றவரே சொன்னாலும் நீ கேட்டிருக்க கூடாது. "இதுதான் என் வீடு... இங்கிருந்து என்னை யாரும் துரத்த முடியாது' என்று அழுத்தமாய் உட் கார்ந்திருக்க வேண்டும்!
உனக்கு, "செக்ஸ்' தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால், உன் குழந்தைகளுக்கு அப்பாவின் அன்பு வேண்டும். அதை வேறு எந்த ஆண்மகனாலும் தர முடியாது; தந்தாலும் குழந்தைகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
"அந்த அரசு அதிகாரியிடம் மனம் விட்டுப் பேசின பிறகுதான் தெரிந்தது... அவர் வாழ்வும் என்னுடையதைப் போல சோகம் நிறைந்தது...'- நீ எழுதிய வரிகள் தான் இது...
யாருடைய வாழ்க்கையில் தான் சோகம் இல்லை தங்கச்சி? உன்னைப் பற்றி யாரோ எதையோ சொன்னதைக் கேட்ட உன் கணவரின் மனதிலிருந்த சோகம், அண்ணியிடம் போய் விழ வைத்தது...
கொஞ்சம் யோசித்துப் பாரம்மா...
அப்படியாவது நீ ஆசைப்படும் மனிதர் - அவரை, நீ, "என்னவர்' என்று கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறாய் - அவர் எப்படி, "உன்னவர்' ஆவார் தங்கச்சி? ஒரு சில முத்தங்களுக்காகவும், அன்பான வார்த்தை களுக்காகவும், இன்னொருத்தியின் சொத்துக்கு நீ ஆசைப்படலாமா?
ஒரு பெண்ணுக்கு நல்ல, அன்பான புருஷன் தேவைதான். ஆனால், இறைவன் - அப்படிப் பொருத்தம் பார்த்து ஜோடி சேர்த்து விடுவதில்லை.
கணவன் நடத்தை கெட்டவராகவோ, திருத்தவே முடியாத சமூக விரோதியாய் இருந்தாலோ, "அவனுடைய சகவாசமே உனக்கு வேண்டாம்; விவாகரத்து வாங்கு' என்று நானே உனக்கு சொல்லிக் கொடுப்பேன்.
ஆனால், உன் கணவரைப் போல மனதால் வக்கரித்துப் போய் பிறன் மனை விழைகிறவனுக்கும், குடிகாரனுக்கும் திருந்துவதற்கு ஓரிரு சந்தர்ப்பங்கள் கொடுத்துப் பார்க்கலாம். உனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
இவர்களைப் பெற்றுக் கொள்வதற்கு முன், என்னை நீ கேட்டிருந்தால் கூட - "வேண்டாம் இந்த உறவு; வெட்டிக் கொண்டு வா' என்று சொல்லியிருப்பேன். இப்போது நீ அவர்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டாமா?
கண்டிப்பாய் காதலனுடன் போக முடியாது என்ற பட்சத்தில், அவனுடன் ரகசிய உறவு வைத்துக் கொள்வது கேவலமில்லையா சகோதரி? நாளை, இந்த இரட்டை வாழ்க்கையின் பொறி - உன் குழந்தைகளுக்குத் தெரிய வந்தால் - அவர்கள் குன்றிப்போய் விட மாட்டார்களா?
எப்போதுமே - அப்பா சரி இல்லை என்றாலும் பிள்ளைகள் சகித்துக் கொள்வர். காரணம், "அம்மா' என்கிற மகத்தான சக்தி அவர்களுடன் இருப்பதால். ஆனால், அம்மாவுக்கு வேறொரு துணை இருக்க முடியும் என்பதை விவரம் புரியாத வயதில் அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாது...
ஒருவேளை - குழந்தைகள் பெரியவர்களாகி, "பாசமில்லாத அப்பாவுடன் வாழ்ந்த அம்மா - இன்னொருவரை விரும்பியதில் என்ன தவறு' என்று நினைக்கலாம். மிகவும் அபூர்வமாய் அப்படி நினைக்கிற குழந்தைகளும் இருக்கின்றனர்.
ஆனால், படிக்கிற வயசில் - இதெல்லாம் அந்த சின்னஞ்சிறு இதயங்களில் மிகப் பெரிய பாதிப்பை உண்டு பண்ணும். படிப்பு, கேரக்டர், மன வளர்ச்சி எல்லாமே பாதிக்கப்படும்...
வாழ்க்கையில் 35, 38 வயசு வரைக்கும் தான் பெண்கள், புருஷனின் அன்பையும், அரவணைப்பையும் வேண்டி ஏங்குவர்.
அதன் பிறகு - அவள் நிமிர்ந்து நின்று விடுவாள். கணவருக்கே பக்க பலமாகி விடுவாள். கம்பீரமாய், லட்சுமிகரமாய், உயர்ந்து ஓங்காரமாய் நிற்கும் அவளைப் பார்க்கையிலேயே - பார்க்கிறவர்களின் மனசிலுள்ள மாசெல்லாம் பொசுங்கி விடும். அது ஓர் உன்னதமான நிலை. அந்த நிலைக்கு வெகு சமீபத்தில் நீ நிற்கிறாய். உன் குழந்தைகளின் நினைவில் நீ என்றென்றும் தூய்மையான தாயாக இருக்கப் போகிறாய்...
உன் காலத்துக்குப் பிறகு, உன் வம்சம் உன்னை தெய்வமாக்கி கும்பிட வேண்டும்; அதற்கேற்ற முயற்சிகளில் இறங்கப்பார்; மற்றவை உன் காலடி தூசு என நினை!
அன்புடன்
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (81)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balagiri - Chennai,இந்தியா
06-ஜூலை-201316:27:33 IST Report Abuse
Balagiri பிற வாசகர்கள் ஒரு வரி எழுதினால் இவர் நூறு வரி எழுதி, கிழவியை தூக்கி மனையில் வை என்ற கதையாக குழப்புகிறார். அதற்கு மறுப்பு தெரிவித்தால் ' நீர் எந்த கட்சி? என்று வகை தொகை இல்லாமல் ஒரு கேள்வி?' இவர் பதிலை படித்தபோது தோன்றியது வீதி முனைகளில் மனம் நலம் குன்றியவர்கள், தன நிழலையே பார்த்து டாய் யார் டா நீ? செல்லும் வாகனகளை பார்த்து திட்டுவது, துரத்துவது, காம்பௌண்டு சுவர் மற்றும் குப்பைதொட்டிகளிடம் பேசுவது போன்றவர்கள் நினைவிற்கு வருகின்றனர்.
Rate this:
Share this comment
Cancel
Balagiri - Chennai,இந்தியா
05-ஜூலை-201313:51:19 IST Report Abuse
Balagiri திரு ராமன் அவர்களுக்கு, உங்கள் வாய் சவுடால் மற்றும் பிளைட்டில் இருந்து எழுதுகிறேன், நான் உயர் வகுப்பு பிளாட்டில் வசிக்கிறேன் என்ற பந்தா..... மூலம் நன்கு வாழ்ந்து முடித்த கிழவிகளையும் மாற்றி விடாதீர்கள்? கஷ்டமோ நஷ்டமோ, பிடித்ததோ, பிடிக்காமலோ அவர்கள் அது அதை ஏற்றுக்கொண்டு வாழ்ந்ததினால் தான் உங்களுக்கு சமமான குடியிருப்பில் , ஒரு உயர் அரசு அதிகாரியின் அம்மாவாக கவுரவமாக உள்ளார், நீங்களும் அவர்களை மதித்து பேசுகின்றீர், எவளாவது ஓடி வந்தவள் இருந்தால் போய் பேசுவீரா? கர்மம் கர்மம், இந்த ஊரில் லா அண்டு ஆர்டர் சரியில்லை, கவெர்மெண்ட் சரியில்லை, பிளாட் ஓனர்ஸ் சரியில்லை, போலிஸ் சரியில்லை என்பீர். இந்த உலகில் யாருக்குதான் குறை இல்லை, உதாரணத்திற்கு உங்களுக்கு இந்த பகுதி வாசகர் புரிதல் பற்றி குறை போகட்டும். செக்ஸ் பிரச்னை தவிர, வேறு ஒரு உதாரணம் சொல்கிறேன், டாக்டர்கள் தவிர்க்க சொன்னாலும் வெளியே, சாப்ட்டி ஐஸ் கிரீம் மற்றும் ஜன்க் புட் சாப்பிடுகிறோம், நல்ல இருக்கு என்று இன்னொனொன்று என்று மனம் கேட்க்கும், சில சமயம் இன்னொன்று என்று கேட்டு விரும்பி சாப்பிடும் போதே அது பிடிக்காமல் போய், முதலில் கிடைத்த சந்தோசம் மற்றும் சுவையை தொலைத்து விடுகிறோம். காசை குடுத்து தேளை கொட்டிண்ட கதை. பேல் பூரி, வெரி குட் ஒன் மோர்? என்று நாக்கையும் மனதையும் அடக்காமல் வாழ்ந்தால் பின் நாளில் அல்லது உடனே புட் பாய்சன் மற்றும் நிரந்திர உடல் பாதிப்புகள் என்று வரலாம், இந்த தவறுக்கு சரி செய்ய மருந்து உள்ளது, சமூக அங்கிகாரம் உள்ளது, சுற்றம் உறவும் உதவி செய்யும். ஆனால் எவளாவது அல்லது எவனாவது நியாயமான மறுமணம் செய்யும்போது ஊரை கூட்டி பெருமையாக சொல்லமுடியுமா? அதுவும் கள்ளகாதல் திருமணம்? குடி இருக்க ஒரு வீடு கிடைக்குமா? கடை கன்னி என்று போக முடியுமா? எந்த உறுதியில் அல்லது எந்த அடிப்படையில் வாழ முடியும்? இருவரும் ஒருவர் பற்றி ஒருவர் சந்த்கதுடன், யார் எப்போ அப்ஸ்கான்ட் ஆவார் என்ற பயத்துடன் வாழ்ந்து சாக வேண்டியது தான். திருமணமே ஆகாதவர்கள் கூட கள்ளக்காதலில் ஈடுபட்டு கொலை தான் செய்யபடுளனர், மேலை நாடுகளில் துப்பாக்கி இங்கு அருவா. மற்றபடி கள்ள காதல் உலகம் பூராவும் மறுக்கப்பட்ட ஒன்று.
Rate this:
Share this comment
Raman - Chennai,இந்தியா
05-ஜூலை-201319:56:41 IST Report Abuse
Ramanஎன் வாய் சவடால் இருக்கட்டும். உங்களது - "நான்தான் மேல் என் எண்ணபடி இரு இல்லையேல் .." என்ற மிரட்டல் எந்த விதமாம்? ஒரு பிரபல கட்சி தலைவரின் ஆலோசகரா என்ன நீர்? ஊர் கூடி பிரித்தது யாரையாம்? கள்ள காதல் என்று இருந்தவர்கள் யார் என்று அறிய இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு நேரம் இல்லை - அதனை அறிய மறுக்கும் உங்களை போன்றோர்கள் தான் இந்த ஆதிக்க வாதிகள். ஆக திருமணம் என்பது சிறைவாசம் - கணவன் (மனைவி) அப்ஸ்காண்ட் ஆகாமல் இருக்க ஒரு வழி என்பதா வாதம். உங்கள் பாஷையில் கேட்பது என்று இறங்கி வந்தால் (புனை பெயர் மகான்கள் போல) உங்கள் (உங்களது அல்ல - உங்களை போன்றோர், விரும்பினாலும் தனி மனித தாக்குதலில் இறங்க முடியவில்லை) திருமணங்கள் காதல் சார்ந்து இல்லை - ஓடி விடாமல் இருக்க ஏற்பட்ட ஒரு பந்தம் ஒரு பிணைப்பு ஆ ?ஆஹா அருமை. ஓடி வந்தவள் இல்லை - அப்படி தர குறைவாக சொல்லவும் மாட்டேன். தன புது வாழ்வை நோக்கி வந்தவள். அப்படி செய்தவர்களை அறிவேன். அவர்கள் என்ன பாவம் செய்தார்கள் - ஓடி வந்தவள் என்று ஸ்டாம்ப் குத்தி அவர்களை என்னமோ குற்றவாளிகள் போல புறம் தள்ள. இது என்ன பண்டைய கால மேலை நாடா Scarlet letter, தேவதாசி என்று பிரித்து வைத்து உங்களை போன்றோர் மகிழ்ந்து இருக்க. அந்த பெண்கள் சம்பாதித்தால் போதுமே எல்லா தவறுகளும் மறக்கப்பட்டு விடுமே. அதனால்தான் சொல்லி வந்து இருக்கிறேன். என்று அவர்களை பொருளாதார சுதந்திரம் பெற்று சாராமல் இருகிறார்களோ அன்று அன்று கணவன் என்ற ஆணாதிக்கத்தில் வளர்ந்த மனிதன் அழிகிறான், அந்த கோட்பாடுகளில் வளர்ந்த 'ஓடி வந்தவள்', 'கற்பு கெட்டவள்', 'வேசி', அவள் இவள் எல்லாம் மறையும். உங்களை போன்றோர் மற்றும் பல வித்யாகளை உருவாக்க முடியாது. அந்த பயம் உங்களை - நாங்கள் நல வழி படுத்துகிறோம் என்று ஆரம்பித்து பதற வைக்கிறது. அந்த அடுத்த வீட்டு அம்மையார் - என்ன கூண்டு கிளியா ? உங்களை (உங்கள் போன்றவர்களை) 50 வருடம் சிறையில் அடைத்து மூன்று வேளை சோறு போட்டால் போதும் என்று இருப்பீர்களா என்ன? மறுமணம் செய்தால் "பெருமையாக சொல்ல முடியுமா" வா? எந்த காலத்தில் ஐயா இருகிறீர்கள். நான் தான் உதாரணமே தந்தனே - எப்படி மணமாலையில் (அல்லது திருமண மாலை) நடந்தது என்று - அது ஒரு பிரபல வார பத்திரிக்கையில் கூட வந்ததே. ஆமாம் அது ஒரு உதாரணமே. உங்களை போன்றோர் அவர்களை வாழ விட்டால் (அதான் எல்லா வீடுகளையும் வைத்து கொண்டு மனிதம் கூட தெரியாது - வீடு வாடகைக்கு கிடையாது என்று அவர்களை கிரிமினல் கள் போல நடத்தும் பயங்கரவாதிகள்) அவர்கள் உங்களை விட அருமையான வாழ்க்கை வாழ்வார்கள். அந்த பயம் எங்கே அவர்கள் ஜெயித்து விட்டால் உங்கள் கோட்பாடுகளை மக்கள் எதிர்த்து கேட்க ஆரம்பிப்பார்களே என்ற பயம். நாம் இருப்பது 2013 - 21 ஆம் நூற்றாண்டு - உங்கள் 14-15 ஆம் நூற்றாண்டு கோட்பாடுகளை கழட்டி வைத்து விட்டு வாருங்கள். அதற்கு முன் பெண்கள் சுதந்திராமாக இருந்தனர் போற்றபட்டனர் - அவர்கள் தங்கள் கணவரை தேர்ந்து எடுக்க முடிந்தது - ஏன் உங்கள் (என்னதும் என் பெயரே ராமன்) ராமாயணம், பாரதம் தராத சுதந்திரமா? அதில் இல்லாத அத்து மீறல்களா? காரணம் சொன்னாலும், justify பண்ணாலும் விதுரன் செய்யாததா? கள்ள காதல் என்பது துரோகம் - ஆனால் மனதுக்கு பிடித்தவனுடன் வாழ்வது கள்ள காதல் அல்ல. திருமணம் செய்த பெண் அந்த திருமண பந்தத்தை உதறிவிட்டு மற்றவனுடன் செல்வது கள்ள காதல் - அல்ல அதற்கு மணமுறிவு, விவாக ரத்து என்று சட்டமே வழி வகுத்து தந்து இருக்கிறது. அது போல பலர், பலர் செய்து உள்ளனர் செய்து விட்டு மறுமணம் செய்து நலமாக உள்ளனர். உங்களை போன்றோர் தான் - கீப் ஆக வருகிறாயா, செட் அப் ஆக வருகிறாயா என்று (இது உங்கள் இடத்தில வந்ததே ஒரு கடிதம்) என்று மட்ட ரகமாக (அதான் பாத்ரூம் மனநிலை ஆயிற்றே) கேட்பார்கள். அதற்காக வாழ் நாள் முழுக்க ஒரு பிடிக்காதவனின் பிடியில் அடிமையாக வாழ வேண்டும் என்ற தண்டனையா? அதனை மாற்றுங்கள் என்கிறேன். இன்று வாடகைக்கு தராதவர்கள் நாளை தருவார்கள். அதனை செய்யுங்கள். பெண்களை படிக்க வைத்து பொருளாதார சுதந்திரம் அடைய வழி செய்யுங்கள். ஒரு சின்ன ஸ்டேப். ஒவ்வொரு மனிதராக மாற்றுங்கள். அது பிரளயமாக வரும். வந்தே ஆகும். உங்கள் போன்றோர்களை மூழ்க அடிக்கும். அது நகரங்களில் நடக்க ஆரம்பித்து விட்டது. அவர்கள் தம் சுதந்திரந்தை உணர ஆரம்பித்து விட்டார்கள் - வித்யா போன்றோர் மட்டுமே இன்னமும் மாட்டி கொண்டு உள்ளார்கள். அதான் சொன்னேனே இவர்கள் விழித்து எழ ஆரம்பித்து விட்டனர். கல்வி செல்வம் அவர்களை தங்கள் சுதந்திரத்தை உணர செய்து உள்ளது. அதனை உங்களால் நிறுத்த முடியாது. அந்த கல்வி, அறிவு, பொருளாதர சுதந்திரத்தை தர அரசும் தயார் . 33% இட ஒதுக்கீடு என்பது ஏன் தடை செய்யபடுகிறது. பயதினால்தானே? ஒரு பெரிய புகழ் பெற்ற பெண் தன் காதலரை விட்டு (அவர் இன்று ஒரு பெரிய கட்சி தலைவர்), பின்னர் மற்றவரை மணந்தார் - அதுவும் ஒரு வளர்ந்த பெண் இருந்த ஒருவர் (அவரும் ஒரு கட்சி தலைவர்). இந்த சமூகம் அவர்கள் இருவரையும் ஆதர்ஸ தம்பதியாராக பெருமையுடன் சித்தி என்று உறவு முறை வைத்து பாராட்டியது. நிராகரிக்க வில்லை. அத்தகைய சமூகம் வீடு தராது நிராகரிக்கும் என்றால் அது ஏன்? அவர்கள் கடை கண்ணி மட்டும் இல்லை பெருமையாக மேடை ஏறுகிறார்கள். அது இந்த நடுத்தர குடும்பங்களிலும் வர வேண்டும். வரும். வருகிறது, அன்று நீங்கள் காணாமல் அடிக்க படுவீர்கள். அதுவரை இங்கு என்ன வேண்டுமானலும் பதியுங்கள். நாளை தலிமுறையினருக்கு இது ஒரு வரலாற்று உதாரணம் - எப்படி பழமை வாதிகள் இருந்தனர் - எப்படி பயமுறுத்தினர் எப்படி அடக்கி ஆள துடித்தனர். எப்படி இயற்கை சீற்றம் முதல் கடை கண்ணி வரை தங்கள் defense க்கு பயன்படுத்தினர என்பதற்கு அத்தாட்சி. இதனை படிக்கையில் தங்கள் தாயார்கள் மீது மரியாதை வரும் - எத்தனை இன்னலுக்கு எத்தனை அடக்குமுறை பயங்கரவாதிகள், அருவா கத்தி துப்ப்பாக்கி இவற்றின் நடுவே தங்கள் சுதந்திரத்திற்கு பாடுபட்டனர் என்பதை எண்ணீ மரியாதை வரும். எப்படி இது போன்ற பழமை வாதிகளின் ஆதிக்க விரும்பிகளின் வாதம் இருக்கும் என்பது தெரியும்....
Rate this:
Share this comment
Cancel
Siva Ramasamy - Bangalore,இந்தியா
05-ஜூலை-201313:33:56 IST Report Abuse
Siva Ramasamy இந்த பெண்ணுக்கு கணவனை பிடிக்க வில்லை, இவருடைய ஆசை நாயகனுக்கு மனைவியை பிடிக்க வில்லை எதற்கு கள்ள தொடர்பு ரெண்டு பெரும் விவாகரத்து வாங்கி, மீண்டும் திருமணம் செய்து கொள்ளுங்கள். மனம் உறுத்தாது இல்லையா ? குழந்தைகளை பற்றி என்ன கவலை, நமக்கு நம்ம சந்தோசம் தான முக்கியம் இல்லையா??? ராமன் ....
Rate this:
Share this comment
Raman - Chennai,இந்தியா
05-ஜூலை-201320:03:19 IST Report Abuse
Ramanஅதே blackmail. குழந்தை பெற்று கொண்டவர்களுக்கு இல்லாத கவலை (அதுவும் தாய்க்கு ) நமக்கு ? நம்ப சொல்லுகிறீர்கள்? குழந்தை அதனால் சிறை வாசம்? மீண்டு வாருங்கள். தனியாளாக குழந்தைகளை வளர்த்து பெரிய ஆளாக்கிய பல பெண்கள்/ஆண்கள் உள்ளனர். உறையூரில் தனி ஆளாக தன பெண்ணை +2 ல் அதிக மதிப்பெண் எடுக்க வைத்த ஆண் லாரி டிரைவர், சென்னையில் தன பெண்ணை அதிக மதிபெண் எடுக்க வைத்த பெண் - இவர்களை பற்றி அவள் விகடனில் படிக்கவும். அவர்கள் தன துணை இல்லை என்று குழந்தைகளை நிராகரிக்கவில்லை - குழந்தைகள் என்றுமே பாரம் இல்லை - தடை இல்லை....
Rate this:
Share this comment
Cancel
John Johnson - coimbatore,இந்தியா
05-ஜூலை-201310:16:59 IST Report Abuse
John Johnson குடும்பம் ஒன்ன சேர வழி sollunga
Rate this:
Share this comment
Cancel
JOY - Chennai,இந்தியா
04-ஜூலை-201321:22:53 IST Report Abuse
JOY எங்கள் இருவருக்கும் இடையே உள்ள உறவு காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது "விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்த உறவு அது'ஹ ஹ ஹ ,வாய் விட்டு சிறிது ரொம்ப நாள் ஆச்சு...சரியான ஒரு காமெடி .
Rate this:
Share this comment
Cancel
Raman - Chennai,இந்தியா
04-ஜூலை-201308:35:51 IST Report Abuse
Raman என்னை கரித்து கொட்டும் எல்லோருக்கும் சொலுவது இதுதான். அது என்னை பாதிக்கும் என்று நினைத்து நீங்கள் எழுதினால் அது உங்கள் தவறே. உண்மை சுடும். LOTUS அவர்களே என் கருத்துக்கள் நல்வழி படுத்த இல்லை. அந்த அளவு என்னை உன்னதமானவாக எண்ணி கொள்ள விழாவும் இல்லை. அத்தனை தலைக்கனம் எனக்கு இல்லை (அதனால்தான் உண்மை பெயரில் எழுத முடிகிறது). மற்றவர் கருத்தை "சப்தம் போட்டு" அடக்கும் மனப்பான்மை கிடையாது - அது இணையத்தில் முடியாது (டேய் - பேசினது போதும் உட்காருடா என்று கூச்சல் போட்டு பேசுவதை தடுக்க - என்ன கீழ்தரமாக எழுதி - அதனை மரண அடி என்று பெருமையாக வேறு எண்ணி கொள்ளலாம். பாத்ரூம் சுவர்களில் கருத்து எழுதும் பழக்கம் உள்ளவர்கள் போலும் - குணத்தை மாற்ற இயலுமா என்ன - அதுவும் புனை பெயரில் எழுதுபவர்கள்) அந்துமணி கட்டுரையில் கூட கருத்து பதித்து இருந்தேன். ராமாயணத்தை பாராட்டும் அதே கூட்டம் S&M என்று சுதந்திரமாக எதனை வேண்டுமானாலும் செய்யும். அதே நாட்டில் ஒரு 14 வயது சிறுவன் தந்தையாகலாம். ஆகி இருக்கிறான். அதனை பின்பற்ற முயலுபவர்கள் அந்த நாட்டினரை பின்பற்றி வருகிறார்கள் என்று பாராட்டும் எண்ணம் உடையவரா என்ன? வெள்ளை தோல் உடையவன் என்ன சொன்னாலும் வேத வாக்கு என்று எண்ணும் அடிமை கூட்டத்தின் தலைவர்களில் ஒருவர் போலும் நீங்கள். என்றுமே ஆல்கஹால் என்று இருப்பவர்கள் என்று இங்கிலாந்து நாட்டவரை இத்தனை மட்டம் தட்டி இருக்க வேண்டாம் - பாவம் உங்கள் வெள்ளை தோல் எஜமானர்கள் வறுத்த படுவார்கள். இயற்கை சீற்றதை கண்டு பயப்பட்ட காலம் பழங்காலம். அது எதனால் உருவாகிறது என்பதை துல்லியமாக அறியும் திறன் படைத்தவர் நாம். நாம் மிருக ஜாதிதான். வேற்று கிரக வாசிகள் (இந்திரன் என்று மேலுலக வாசி வந்து நம்மை உருவாக்கவில்லை) நம்மை இங்கு கொண்டு வந்து விட வில்லை. சயிண்டாலாஜி ஆசாமி போலும். ஆக இந்த இயற்கை உக்கிரங்க்களை வைத்து ஐயகோ இது எல்லாம் இந்த பெண் மாற்றானை விரும்பி தேர்ந்து எடுத்ததால் என்று நீங்கள் வேண்டுமானால் நம்பலாம். அதற்காக பரிதாபடுகிறேன். உங்களது அவா - இப்படி எதையாவது கூறி ஒருவரை எப்படி guilty ஆக உணர வைத்து இன்னமும் அடிமையாக அடக்கி வைக்கலாம் என்ற ஜெமீந்தார் காலத்து சிந்தனை. ஆனால் அந்த காலம் மலையேறி விட்டது. அதனால்தான் ராமதாஸ் பொன்ற நீங்கள் எல்லாம் என்னதான் கத்தினாலும் அடுத்த தலைமுறையை அடிமையாக வைக்க முடியாது. அந்த கை விட்டு போகும் அதிகாரம், அதனால் உண்டாகும் பயம் உங்கள் போன்றோர்களை இன்னமும் ஆக்ரோஷமாக - மரண அடி தரும் பாத்ரூம் வாசகங்களுடன் - இங்கு பதிவு செய்ய சொல்லுகிறது. பொறுமையாக கேட்டால் சொல்கிறேன். வாழ்வது ஒரு முறை. அதிலும் நிதமும் சேர்க்கும் நினைவுகள் என்ற சொத்துதான் பெரும் சொத்து. மறதி தோன்றும் முன் அதனை கொண்டுதான் நாம் நம்மை அனுமானிக்கிறோம். அத்துடன் வாழ்க்கை என்பது நல்ல மன நலத்துடன் இருப்பது அவசியம். என்றும் துன்பப்பட்டு, மற்றவருக்காக வாழ்வது என்பது பேச நன்றாக இருக்கலாம் - அந்த அறிவுரை வழங்கும் பலரும் அதனை பின்பற்றுவது இல்லை என்பதே உண்மை. ஏன் ஐயா உங்களால் செய்ய முடியாதைதை மற்றவரை செய்ய சொல்லுகிறீர்கள்? டாஸ்மாக் கை புள்ளி விவரத்துடன் கண் சிவக்க விமர்சிக்கும் வி.காந்த - அதற்கு அடிமையாக இல்லாமல் இருந்திருந்தால் அவரை நம்பலாம் அது போல .. நம் குழந்தைகளுடன் - படிக்க ஆனந்தமாக இருக்கிறதா என்று கேட்டு இருக்கிறீர்களே - இதே தமிழ்நாட்டில் தன தாயாருக்கு கணவன் (மணமாலை - மூலம்) தேடி தந்த ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். அதுவும் குழ்னதையுடன் இருந்த ஒரு கணவனை. அவர்களுக்கு குழந்தை பிறக்கும் சமயம் இப்படிதான் சொல்லுவார்கள். ஆக உங்கள் தியரிபடி அந்த பெண்ணும் (குழந்தையும்) தனியாக கஷ்டப்பட்டு சீதை போல தீ குளிக்கலாம் ஆனால் திருமணம் செய்ய கூடாது? அந்த நிகழ்ச்சியில் இவர்களை பாராட்டி பலர். ஆக உங்களை போன்றோர் நிராகரிக்கப்படுகிறார்கள் - அல்லது பாத்ரூம் சுவருக்கு ஓரங்கட்டப்படுகிறார்கள். இந்த பெண் தன கணவனை மறுத்து தன மனதுக்கு பிடித்தவரை கைபிடிக்க என்ன தடை? அடுத்த பெண்ணின் வாழ்க்கையை பறிக்கிறாயா என்று சொல்பவர்களே - அந்த அடுத்த பெண்ணுக்கு துரோகம் பண்ணிய அதே கணம் அந்த ஆண் மகன் அந்த பெண்ணின் கணவனாக இருக்கும் தகுதியை இழந்து விட்டானே? பின் அவள் (அந்த பெண்) அந்த ஆண் மகனை மறுத்து விரட்டுவது எவ்விதம் தவறாகும். இந்த வாழ்க்கை இருவருக்கும் மன நிம்மதி தரும் எனில் அதனை தடுப்பது (நீங்கள் நினைத்தாலும் கூட) முடியாத காரியம். என்ன சாபம் தருவீர்கள். நல்லா வருவியா என்று - தீய எண்ணத்துடன் இருப்பவர்கள் தான் சாபம் இடுவார்கள். எங்கோ படித்தது - திட்டும் பொழுது கூட - நல்லா இருப்பே - என்று திட்டும் (பாஸிட்டிவாக) வழாக்கம் உடைய தமிழ் நாட்டுள் தீய குணம் உடையவர்கள் பட்டுமே நாசமாக போவே என்று திட்ட தொடங்குவார்கள். இது நடைமுறை உண்மை. அப்சர்வ் பண்ணி பாருங்கள். இந்த திருமணம் போல ஒன்றல்ல பல கதைகள் - நிஜங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. விழித்து கொள்ளுங்கள். என்ன தூங்குபவரை கூட எழுப்பலாம் ஆனால் தூங்குவதை போல நடிப்பவரை ...? ஏன் இவ்வளவு விவரமாக பதில் எழுதினேன் என்றால் இது என்னை பாதிக்கும் ஒரு முக்கியமான விஷயம். பெண்கள் விடுதலை என்று மேல் தட்டு பெண்கள் மட்டும் அல்லாது - மத்திய தர வர்க்கமும் விடுதலை பெற உதவ எண்ணும் மற்றும் ஒரு சாதாரண ஜீவன். கல்வி சொல்லி தருகிறேன், உதவி செய்கிறேன். அது போல இதனை படித்து ஒருவர் சற்று யோசிக்க தொடங்கினால் அது போதும் - Chaos theory படி ஒரு வண்ணத்து பூச்சியின் சல சலப்பு நாளை ஒரு பிரளயத்தை உருவாக்கி இது பொன்ற சாக்கடை ராம்தாஸ்களை (என்னமோ தம் நல்லது செய்கிறோம் என்று கர்வத்துடன் திரயும் இவர்களை) அடித்து செல்ல வாய்ப்பு உண்டு என்ற ஒரு அதீத நம்பிக்கையே காரணம்.
Rate this:
Share this comment
LOTUS - CHENNAI,இந்தியா
04-ஜூலை-201310:36:55 IST Report Abuse
LOTUSஅக்மார்க் பேத்தல்........
Rate this:
Share this comment
LOTUS - CHENNAI,இந்தியா
05-ஜூலை-201309:21:19 IST Report Abuse
LOTUSஎந்த மதமானாலும் ........நரசிம்மர் ஸ்லோகம் சொல் .....உருப்படுவாய் என்று அந்த பெண்ணிற்கு நான் சொன்ன adviceற்கு... தங்களின் university இல் எனக்கு கொடுக்கப்பட்ட பட்டம்..." பாத் ரூமில் கிறுக்குபவன் " என்று..............மேலே இருப்பவனே ... யாருக்கு நல்ல அறிவை தர வேண்டுமோ.... அவர்களுக்கு நல்ல அறிவை தரட்டும்...............
Rate this:
Share this comment
sunil - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
05-ஜூலை-201310:38:34 IST Report Abuse
sunilராமன் என்ற சிங்கத்தை சீண்டியது யார் நண்பர்களே......... ராமன் ஒரு சின்ன விஷயம் நீங்கள் கட்டுரை எழுதவேண்டுமானால் தனியாக எழுதி வார பத்திர்கிக்கைகளுக்கு அனுப்புங்கள், சன்மானம் கிடைக்கும், இப்படி பக்கம் பக்கமாக கருத்து என்ற பெயரில் எழுதி நீங்களும் குழம்பி வாசகர்களையும் குழப்பி...... நல்லாவா இருக்கு இதெல்லாம்....
Rate this:
Share this comment
JOY - Chennai,இந்தியா
05-ஜூலை-201313:11:42 IST Report Abuse
JOYஇந்த விளக்கம் உங்களுக்கு புரிய வில்லை எனில் எது புரியும் உங்களுக்கு சுனில்...
Rate this:
Share this comment
JOY - Chennai,இந்தியா
05-ஜூலை-201314:09:37 IST Report Abuse
JOYஎங்கள் இருவருக்கும் இடையே உள்ள உறவு காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது "விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்த உறவு அது'சாலமன் பபயாஹ் ஸ்டைல்ல சொலனும்ன அருமை அருமை..புனிதம்..இதன் அர்த்தம் தான் என்ன ?பரிசுத்தமானது ..காதலர்களை உங்களை கெஞ்சி கேட்டுகொலுகிரைன்..யாருமை இனி என் காதல் புனிதமானது எண்டு சொலதிர்கள்..காதலின் அடிப்படை காமம் ,அப்படி இருக்க காதல் எப்படி புனிதம் ஆகும்..கொபபடதிர்கள் ,உங்களை நான் காதலிகாதிர்கள் எண்டு சொல்ல வரவில்லை அனால் அதனை புனிதம் எண்டு சொல்வதை விடு விட தான் சொல்கிறேன்..நான் physical relationship kurai kurupavan அல்ல..மனித valvirku மிகவும் அவசியமானது அது...அனால் அதற்கு புனித பட்டம் சுடுவது தான் கொடுமை ...நிங்கள் காதலியுங்கள் ,இல்லை கள்ள காதல் செய்யுங்கள் அனால் அதற்கு புனித விளக்கம் தரதிர்கள் ப்ளீஸ் சகிக்கல ..சிலர் சொல்லாம் நாங்கள் தொடுவது இல்லை ,தவறாக பேசுவது இல்லை ஆதனால் நாங்கள் புனிதமாக காதலிக்கிறோம் ...காலத்துக்கு முன்பு நிங்கள் துணை தேடுவது ஊடல் அல்ல அது புனிதமை எண்டு சொல்விர்கலாகில் மாடவர்களை முட்டாள் எண்டு எனுவதிற்கு சமம்..ஆரம்பத்தில் ஒருவளை நிங்கள் soluvathu போல் இருந்தலும் ஆது(காதல் ) தோண்டுவதை மனிதனுக்குள் இறக்கும் காமத்தால் தான்...ஆதலால் புனிதம் என்கிற கவிதையை காதலில் தவிர்போமா ப்ளீஸ்.....
Rate this:
Share this comment
Raman - Chennai,இந்தியா
05-ஜூலை-201320:13:08 IST Report Abuse
Ramanசுனில், நான் குழம்பவில்லை குழம்ப தேவை இல்லை. இந்த பகுதியில் என் கருத்தை முதல் கருத்தை படிக்கவும். இது ஒரு Opinion Poll ஆ என்று கேட்டு இருந்தேன். வித்யா (தருமபுரி நிகழ்வு) என்னை பாதித்த ஒரு விஷயம். இதுவும் அது போல ஒரு பெண்ணை அடிமைபடுத்தும் விதமான செய்தி என்பதால் சற்று ஆவேசுதுடன் பதில் அளித்தேன். @LOTUS - என்னை பெயர் சொல்லி விளித்தது நீங்கள் அல்ல. அப்படி சொல்ல நினைக்கவில்லை. அப்படி வெளிப்பட்டு இருந்தால் அதற்கு வருந்துகிறேன். ஆனால் என்னை தனிப்பட்ட முறையில் தாக்கிய ஒருவரை நீங்கள் பாராட்டி இருந்தது சரி என்று நீங்கள் வாதாடினால் என்ன செய்வது ? இங்கு நான் யாரையும் தனிப்பட்ட முறையில் தக்க முயல மாட்டேன். முயலவில்லை. என்றும் உங்கள் என்று அவர்கள் சார்ந்த கூட்டம் தான் என்று தான் குறிப்பிட முயலுவேன். என் கருத்து பிடிக்கவில்லை என்றால் அதனை தாக்குங்கள் என்னை அல்ல, என் குடும்பத்தை அல்ல...
Rate this:
Share this comment
Cancel
Balagiri - Chennai,இந்தியா
04-ஜூலை-201301:31:45 IST Report Abuse
Balagiri அம்மாடியோவ் இதனை அலாபனைகளா? தலை சுத்துது. புல்லெட் பாயிண்ட் போல் கருத்து தெரிவியுங்களேன். இந்த பெண் கள்ளக்காதலை விரும்புகிறாள், அதற்கு இன்ன பிற காரணங்கள். குழந்தைகள் உள்ள குடும்பத்தில் அதுவும் படித்த குடும்பத்தில்,தந்தையானவன் மனைவியிடம் பேசாமல் இருப்பது நம்பமுடியவில்லை, பேசாமல் எனபது எந்த பேசாமை? என் கணவர் கிரியிடம் கருத்து என்ன எழுதாலாம் என்று கேட்டேன், தலைவலி தைலம் தடவியபடியே, திருமணம் ஆனபிறகு ஆணோ பெண்ணோ மாற்று உறவு தேடி போவது தண்ணி அடித்த பின் வரும் ஹாங்ஓவர் போல் சே இதுவே கடைசி என்று ஆனால் மீள முடியாதாம்?. என்ன தத்துவம், சாருக்கு நல்ல முன் அனுபவமா என்றேன்? ஏண்டி ராட்சசி ஜி பி ஆர் எஸ் கண்டுபிடிக்கும் முன்பே, புருஷனை நொடிக்கு நொடி ட்ராக்கில் வச்சுண்டு ஏண்டி இப்படி சித்ரவதை பண்றே என்று கத்தியது,. நேத்து சாருக்கு போனஸ் வந்தது, ஐ டி பீல்ட் வேறையா? பீர் சகவாசம் எப்பவும் உண்டு, (வித் மை பெர்மிஷன் வாரம் இருமுறை இரண்டு பாட்டில் மட்டும்), அதனால் நேத்து தண்ணி போட்டு ராத்திரி மட்டை, கலையில் வாமிட், தலைவலி. ஆனால் என்னிடம் எதையும் மறைக்காது என் செல்லம். தலைவலி போன பின் என்னை காக்கா பிடிக்க சிங்க்கில் நான் போட்ட பாத்திரம் அத்தனையும் தேய்துகோடுக்கும், நான் இதுதான் சாக்கு என்று இழுப்ப்சட்டி மற்றும் கனமான பாத்திரங்களை போட்டு விடுவேன், பாவம் மாங்கு மாங்கு என்று தேய்த்து கொடுக்கும், அதற்கு நான் ரகசிய பரிசு கொடுத்து தேங்க்ஸ் சொல்லுவேன். இதை எதற்கு சொல்கிறேன் என்றால் இது மாதிரி (அது இது என்று நாங்கள் சொல்ல்வது மாதிரி) நீயும் உன் புருஷனை புரிந்து நடந்துகொண்டால் ஏதோ ஒரு சினிமாவில் வரும் வடிவேலு போல் மாறிவிடுவார் உன் கணவர். அப்புறம் உனக்கு எதற்கு மாற்றான்? வம்பு? வாழ்க்கை எனபது ஒருமுறை தான், விட்டு கொடுத்து உங்களவர் மேல் அன்பை பொழியுங்கள். என் கணவர் குழந்தைகளோடு குழந்தையாக குழைவார் ஆனாலும் நான் என் குழந்தைகளை டாடிக்கு அதை எடுத்துவை, இதை குடு, அப்படி செய்தால் டாடிக்கு பிடிக்காது, டாடி பெர்மிஷன் கொடுத்தால் தான் ஓகே என்று கட்டளையிடுவேன், காரணம் அவர்கள் பின்நாளில் தந்தைக்கு தகுந்த மரியாதையை அளிக்க வேண்டும் அல்லவா?. நீங்களும் உங்கள் கணவரை நெருங்க, அன்பை பெற உங்கள் குழந்தைகள் மூலம் முயற்சிசெய்யலாமே? வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Sumasri - Kadalore,இந்தியா
06-ஜூலை-201301:15:07 IST Report Abuse
Sumasriஹலோ பாலா அக்கா நீங்க கொடுத்த அட்வைஸ் சூப்பர். ஆனா நீங்க உங்க புருஷன் கிட்ட பாத்து பதவிசா நடந்துகூங்கக்கா. களம் கெட்டு கெடக்குது , நாளைக்கு உங்களுக்கு யாராச்சும் இதே அட்வைஸ் கொடுதுரகூடாதுல அதான் சொல்றேங்க்கா -மாமா வ ஜாகிரதியா பாத்துக்குங்க. யாரோ ஒருத்தர் சொன்னாரு. ஒரு ஆண் தன் மனைவி கிட்ட ரொம்ப அன்பா இருக்கான்னா அவன் கல்யாணத்துக்கு முன்னாடி பின்னாடி நெறைய பெண் தொடர்பு இருக்கணும் அதை மறைகதான் இப்படி வேஷம் போடுவாங்கலாமாம். அதான் சொன்னேன் ஜாக்கிரதை. உங்கள மாமா சின்ன குழந்தையா நெனச்சிட போறாரு. உங்க அன்பு பிரியமுள்ள தங்கை -...
Rate this:
Share this comment
Balagiri - Chennai,இந்தியா
06-ஜூலை-201316:50:20 IST Report Abuse
Balagiriஅன்புள்ள தங்கைக்கு, நீ சொல்வது பத்து பிள்ளை பெற்றவளுக்கு தலச்சன் பிள்ளைக்காரி தைரியம் சொன்ன மாதிரி உள்ளது. நன்றி. அதே சமயம் உன்னை தேடிவந்து யாரோ ஒருத்தர் (?) சொன்னது உன் புருஷன்னுக்கு தெரிந்தால், நீ எழுதிய இதே அட்வைசை நீயே படித்து கொள்....
Rate this:
Share this comment
Cancel
GURU.INDIAN - beiruth,லெபனான்
03-ஜூலை-201316:26:56 IST Report Abuse
GURU.INDIAN இந்த மாதரி நாங்கள் பணக்காரன் என்று சொல்லும் எல்லா வீட்டிலும் இந்த அட்டூழியம்தான் நடக்கிறது .உனக்கு நீயே நான் அழகானவள் அறிவானவள் என்று வடிவேலு மாதரி பட்டம் கொடுக்கக்கூடாது. அடுத்தவர் போற்ற வேண்டும், அதுதான் ஒரு நல்ல மனிதருக்கு அழகு. அவரு வாரத்தில் இரண்டுமுறை வருவாராம் இவுக பேசுவாகலாம் ஆனால் ஏதும் நடக்கலயாம். கேக்குறவன் கேணயனா இருந்தா எருமைமாடு ஹெலிகாப்ட்டர் ஓட்டுதுன்னு சொல்லுவானுக . அதுபோல் இருக்கு. உனக்கும் உன் கணவருக்கும் கல்யாணம் ஆனவுடனே பிரிந்து இருந்தாய் என்கிறாய். அவர் அவர் அண்ணியுடன் இருந்தார் என்கிறார். நீ யாருடன் இருந்தாய் ? அதையும் சொல்லிவிடு . 2 குழந்தை எப்படி பிறந்தது ? கலப்படமா ? தனிபடமா ? என்னமா கதை உடுராளுங்க ? சுஜாதாவே தோத்து போய்விடும் அளவுக்கு அள்ளி விடுறாளுங்க .
Rate this:
Share this comment
Cancel
sadiks - chennai,இந்தியா
03-ஜூலை-201312:30:21 IST Report Abuse
sadiks நான் மிகவும் அழகாக இருப்பேன் என்று நீங்கள் தான் கூறுகிறீர்கள் - காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு - அதைப்போல கண்ணாடி முன் நிற்கும்போது அது யாரையும் அசிங்கமாக காட்டுவதில்லை - உண்மையில் அழகு என்பது பிறர்தான் கூறவேண்டும் - சரி அது போகட்டும் - 2 வருடம் தாய் வீடு வசம் - தந்தைக்கு தெரியாதா இது எவ்வளவு பெரிய தவறு என்று - 2 வருடத்திற்கு பிறகும் - தாலிகட்டிய ஒரே காரணத்திற்காக உங்களை அனுமதித்ததே பெரிய மனது உங்கள் கணவருக்கு - உங்கள் அழிவில் உங்கள் பெற்றோரும் உடந்தை - "விட்டுகொடுப்பவன் கேட்டுபோவதில்லை -கேட்டுபோகிறவன் விட்டுகொடுப்பதில்லை" உங்கள் கணவர் நினைத்திருந்தால் வேறொரு பெண்ணை மனம் முடித்திருக்கலாம் - ஆனால் அவர் செய்யவில்லை உங்கள் குறை. 1. தான் வசதி படைத்தவள் என்ற எண்ணம் -(கர்வம்) 2. தான் அழகு நிறைந்தவள் என்ற எண்ணம் (-) 3. கொஞ்சும் வார்த்தைகளை வீசிய அந்நியன் உங்கள் வாழ்க்கை துணை என்று முடிவு செய்தது (உங்கள் வெகுளித்தனம்) - கோழி குருடா இருந்தாலும் கொழம்பு ருசியா என்று பார்பவர்கள் அதிகம் - ஏமாந்திடாதிங்க. 4. கணவரை பற்றி கவலை இல்லை - ஆனால் குழந்தைகளை பற்றியுமா கவலை இல்லை - இது உங்கள் சுயநலத்தை காட்டுகிறது . பழமொழி - "அரசனை நம்பி புருஷனை விட்டேன்". தன சொந்த உழைப்பால் வந்த செல்வமே நிற்கும் - பிறர் கொடுப்பது உதவியாகத்தான் இருக்குமே தவிர நிலைக்காது - நண்பர்கள் பலர் வேண்டும் ஆனால் வாழ்க்கைதுணை ஒன்றே ஒன்றுதான் வேண்டும் - வாழ்க்கை துணை என்பது புனிதமானது (நட்பைவிட) அனுபவமே வாழ்க்கை - வாழ்ந்துபார் தோழி - வாழ்க்கை உனக்கு வெளிச்சம் தரும்
Rate this:
Share this comment
Cancel
Nangil Tamilan - Nagercoil,இந்தியா
02-ஜூலை-201312:08:04 IST Report Abuse
Nangil Tamilan ஒரு சிறுவன் தனக்கு பலவிதமான செருப்பு வாங்கவேண்டும் என்று நினைத்து தனது தந்தையை கஷ்டபடுத்தினான், ஒருசமயத்தில் அந்த சிறுவனின் தந்தை தொந்தரவு தாங்கமுடியாமல் ஒரு கடை தெருவிற்கு கூட்டிகிட்டு போனார், அப்போது அந்த கடைதெருவில் இரண்டு கால்களும் இல்லாமல் ஒரு பூ கடை நடத்தி கொண்டு இருந்தார். அதை பார்த்ததும் அவரது மகனிடம் சொன்னார் , உனக்கு விதம் விதமாக செருப்பு வேண்டும் என்கிறாயே பார் அவருக்கு இரண்டு கால்களும் இல்லை, உனக்கு கால்கள் இருக்கிறது அதை நினைத்து இருப்பதை வைத்து சந்தோஷ படு என்றார். அதே போல் தான் இங்கே இந்த பெண்ணிற்கு சரியான நேரத்தில் அறிவுரை கூறி கணவருடன் சென்றிந்தால் அண்ணியுடன் தவறான தொடர்புக்கு வழி கிடைதுருக்காது , அதே சமயம் உனக்கும் இப்படி ஒரு கீழ்த்தரமான தொடர்ப்பும் கிடைதுருக்காது. இப்போது நீ உன்னவர் உடன் சென்றால் உனது குழந்தையின் நிலைமை நினைத்து பார். உன் பெற்றோர் பார்த்துகொண்டு இருப்பார்களா , அவர்கள் என்ன இளமையுடன் தான் உள்ளார்களா. அவர்கள் நாள்களை எண்ணிக்கொண்டு தானே இருப்பார்கள். உன் சொந்தங்கள் உன் குழந்தை சொத்துக்காக பார்த்தால் உன் குழந்தையின் நிலைமை . ? யோசி பெண்ணே யோசி .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.