அவசர காலப் பாதுகாப்பு தரும் ஜிவி மொபைல்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2013
00:00

ஜிவி 2010 (Jivi 2010) என்ற பெயரில், புதுமையான வசதியுடன், மொபைல் போன் ஒன்று விற்பனைக்கு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு கூடுதல் வசதி உள்ள மொபைல் போன். இதில் அவசர காலத்தில் உதவி கேட்டு அழைக்கவென பட்டன் (SOS button) ஒன்று தரப்பட்டுள்ளது. பெண்களுக்கு உதவுவதனை இலக்காகக் கொண்டு இந்த மொபைல் போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆபத்தினை எதிர்நோக்கும் காலங்களில், இந்த பட்டனை அழுத்தினால் போதும். ஏற்கனவே இந்த போனில் பதிந்து வைக்கப்பட்டுள்ள ஐந்து எண்களுக்கு அழைப்பு தானாகச் செல்லும். ஏதேனும் ஒரு எண்ணுக்குரியவர், அழைப்பினை எடுக்கவில்லை என்றாலோ, அல்லது மற்றவரிடம் பேசிக் கொண்டிருந்தாலோ, உடன் அந்த போனுக்கு மெசேஜ் ஒன்று அனுப்பப்படும். பின்னர், அடுத்த எண்களை இதே போல அழைக்கும்.
இதன் திரை 2.4 அங்குல அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு சிம்களை இந்த போன் இயக்குகிறது. பெரிய அளவில் ஸ்பீக்கர் தரப்பட்டுள்ளது. MP3, MP4, AVI or 3GP ஆகிய பார்மட்களில் உள்ள பைல்களை இயக்குகிறது. பதிவு செய்திடும் வசதியுடன் கூடிய எப்.எம். ரேடியோ இயங்குகிறது. 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது. இதில் ஜி.பி.ஆர்.எஸ்., புளுடூத் வசதிகள் உள்ளன. சார்ஜ் செய்வதற்கும், டேட்டா மாற்றுவதற்கும் மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் தரப்பட்டுள்ளது. இவற்றுடன் மொபைல் ட்ரேக்கர், பிளாஷ் லைட், போல்டர் லாக், ஆட்டோ கால் பதிவு போன்ற வசதிகள் உள்ளன. மைக்ரோ எஸ்.டி. கார்ட் உதவியுடன் இதன் மெமரியினை 32 ஜிபி வரை அதிகரிக்கலாம்.
Jivi 2010 கருப்பு, வெள்ளை மற்றும் சிகப்பு வண்ணங்களில் கிடைக்கிறது. ஸ்டைலாக மெட்டலிக் மற்றும் குரோம் பூச்சு இதனைச் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.1,699 என்றாலும், கடைகளில் ரூ.1,350க்குக் கிடைக்கிறது.
Infibeam, gadgets.in, ebay.in, shopclues.com, and Tradus.com ஆகிய இணைய தளங்கள் வழியாகவும் இதனைப் பெறலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X