பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2013
00:00

கூகுளின் இன்டர்நெட் வேறு எந்தப் பத்திரிக்கையும் தராத செய்தி. வழக்கம்போல நீங்கள் தான் விலாவாரியாகத் தந்துள்ளீர்கள். உலகம் முழுவதையும் இன்டர்நெட் குடையின் கீழ், அதுவும் இலவச இன்டர்நெட் குடையின் கீழ் கொண்டுவந்துவிட்டால், தகவல் தொடர்பு மட்டுமல்ல, மக்களின் மனிதநேயமும் வளரும். மிக்க நன்றி.
-தி.இளந்திரையன், திருநெல்வேலி.

உலகின் மூலை முடுக்கெல்லாம் இன்டர்நெட் தரும் தகவலை, என் வகுப்பில் இன்றைய தகவல் நேரம் என்பதாகக் கூறிய போது யாருமே நம்பவில்லை. பின்னர், அனைவரும் என்னைப் பாராட்டினார்கள். தங்களின் அரிய தகவல் தொண்டிற்கு மாணவர்களாகிய நாங்கள் கடமைப் பட்டிருக்கிறோம்.
-என்.கிறிஸ்டோபர் ஜேசுதாஸ், ஸ்ரீவில்லிபுத்தூர்.

விண்டோஸ் சிஸ்டத்தினை ஸ்டார்ட் செய்து இயக்கியதோடு நாம் அப்ளிகேஷன் புரோகிராம்களுக்குச் சென்றுவிடுகிறோம். நமக்குத் தேவையான இவ்வளவு புரோகிராம் டூல்ஸ்களை விண்டோஸ் நமக்குத் தருகிறது என்பது பயனுள்ள செய்தி. குறிப்பாக, கூடுதலாக ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமைத்துச் செயல்பட உதவிடும் விர்ச்சுவல் மெஷின், நமக்கு ஓர் அரிய உதவியாகும்.
-எஸ்.கே. கமாலுதீன், புதுச்சேரி.

கற்றுக் கொள்ள என நீங்கள் தந்த தளங்களில், ஹவ் ஸ்டப் ஒர்க்ஸ் மற்றும் கான் அகடமி தளங்கள் நாம் அன்றாடம் சந்திக்கும், ஆனால் அவ்வளவாக நாம் அறியாத செயல்முறைகளைத் தெளிவாக விளக்குகின்றன. தமிழிலும் இது போன்ற தளங்கள் இருந்தால், நம் வருங்காலச் சந்ததியினருக்கு பயனுள்ளதாக இருக்கும்.
- ஆர். நாராயண மூர்த்தி, திருப்பூர்.

ஸ்டிக்கி நோட்ஸ் விளக்கமும், அதற்கான படமும் மிக அருமை. இதே போல விண்டோஸ் 7 தரும் அனைத்து வசதிகளையும் வாரம் ஒன்றாகத் தரவும்.
-என். கமலேஷ் சம்பத், திருநின்றவூர்.

விண்டோஸ் 8 தொடர்வதா? விண்டோஸ் 7 க்கு மீண்டும் செல்வதா? என்ற குழப்பத்தில் இருக்கும் எனக்கு, இரண்டு சிஸ்டம் குறித்தும் தாங்கள் தரும் குறிப்புகள், இரண்டையுமே பயன்படுத்துமாறு தூண்டுகின்றன.
-எஸ். சுகுமாரன், திருப்பூர்.

தலைப்பைப் பார்த்தவுடன், 20 நொடியில் மொபைல் சார்ஜா? சான்ஸே இல்லை என்று எண்ணியபடி, தகவலைப் படித்தேன். அந்த மாணவியின் கூரிய கண்களும், சிந்தனை குடி கொண்ட முகமும், தங்கள் தகவல் குறிப்பும், எதுவும் சாத்தியமே என்பதை உறுதி செய்தன. அந்த மாணவி போற்றப்பட வேண்டியவர். பாராட்டுக்கள்.
-கா.செந்தாமரை, ஆப்பக்கூடல்.

டெரா காப்பி குறித்துத் தெரிந்திருந்தாலும், இதுவரை பயன்படுத்தாமல் இருந்தேன். உங்களுடைய குறிப்புகளைப் படித்த பின்னர், டவுண்லோட் செய்து பயன்படுத்தி வருகிறேன். மாற்றம் நன்றாகவே உள்ளது.
-ஆ. சிவத்தம்பி, திண்டுக்கல்.

கம்ப்யூட்டரும் இணையமும் பல சொற்களை, அந்த அந்த நாட்டு மொழிகளுக்குத் தந்துள்ளன. அந்த வகையில் ட்வீட் என்னும் சொல்லை ஆக்ஸ்போர்ட் அகராதியில் இணைத்தது காலத்தின் வளர்ச்சி மாற்றமே. யாரேனும் இந்த புதிய சொற்களை மட்டும் கொண்டு ஒரு கலைச் சொல்லகராதி தமிழில் தயாரிக்கலாம்.
-டாக்டர் சி. எம். தாஜுதீன், சென்னை.

விண்டோஸ் டூல்ஸ்களில், பார்ட்டிஷன் மேனேஜர், மல்ட்டிபிள் மானிட்டர் ஆகியவை விண்டோஸ் தொகுப்பிலேயே கிடைக்கிறது என்பது புதிய செய்தி. இந்த செயல்பாடுகளுக்காக, இதுவரை தர்ட் பார்ட்டி புரோகிராம்களையே பயன்படுத்தி வந்திருக்கிறேன். சிலவற்றில், மற்ற நிறுவனங்கள் தரும் புரோகிராம்கள், கூடுதலாகப் பயன்களைத் தருகின்றன என்பதே உண்மை.
-ஆ.வேல் முருகன், சென்னை.

Advertisement

 

மேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X