டப் எங்கல்பர்ட் (ஜனவரி 30, 1925-ஜூலை 2, 2013)
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2013
00:00

1925 ஆம் ஆண்டில், அமெரிக்காவில், ஆரகன் மாநிலத்தில் போர்ட்லேண்ட் என்னும் ஊரில், ரேடியோ ரிப்பேர் செய்திடும் தொழிலாளிக்கு மகனாகப் பிறந்த எங்கல்பர்ட், பின்னாளில், மனித இனத்தின் சிந்தனையையே மாற்றிய பல கணிப்பொறி கோட்பாடுகளின் தந்தையாக, விஞ்ஞானியாக, பொறியாளராக உருவெடுத்தார். ஆரகன் பல்கலைக் கழகத்தில், மின் பொறியாளராகக் கல்வி பயின்ற பின், இரண்டாம் உலகப் போரின் போது, ராடார் தொழில் நுட்ப பொறியாளராகப் பணியாற்றினார். பின்னர், இப்போதைய நாசா விண்வெளி மையத்தின் முந்தைய அமைப்பான, நாகாவில் (NACA) மின் பொறியாளராகப் பணியாற்றினார். பின்னர், ஆய்வு மேற்கொள்ள, பெர்க்லீயில் இயங்கும் கலிபோர்னியா பல்கலையில் சேர்ந்தார். கம்ப்யூட்ட ருக்கும் மனிதனுக்குமான உறவு குறித்து இவர் மேற்கொண்ட ஆய்வு, இவரை ஸ்டான்போர்ட் ரிசர்ச் மையத்திற்குக் கொண்டு சென்றது. அதன் பின்னர், அங்கேயே தன் சொந்த ஆய்வு மையத்தினை அமைத்தார். தனக்கு வாழ்நாள் விருது வழங்கிய கம்ப்யூட்டர் ஹிஸ்டரி மியூசியத்தில், எங்கல்பர்ட் தன் வாழ்நாளின் இறுதி நாட்களைக் கழித்தார்.
47 ஆண்டுகள் இவருடன் வாழ்ந்த இவர் முதல் மனைவி, 1997ல் இறந்தார். 2008ல் இரண்டாவது மனைவியாக கேரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு நான்கு குழந்தைகளும் ஒன்பது பேரக் குழந்தைகளும் தற்போது உள்ளனர். இவரது மகள் கிறிஸ்டினா, இவரின் மரணத்தை மின் அஞ்சல் மூலம் உலகிற்கு அறிவித்தார். சிறுநீரகக் கோளாறினால் அவதியுற்ற தன் தந்தை, மிக அமைதியாக மரணத்தைத் தழுவினார் எனக் கூறி உள்ளார். மனித குல மேம்பாட்டிற்கு உழைத்த அந்த விஞ்ஞானிக்கு நாம் என்றும் கடமைப் பட்டுள்ளோம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X