ஆகாஷ் டேப்ளட் பிசியில் அழைப்பு வசதி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2013
00:00

மாணவர்களுக்கு டேப்ளட் பிசி வழங்கும் அரசின் குறைந்த விலை டேப்ளட் பிசி திட்டத்தில் உருவான ஆகாஷ் டேப்ளட் பிசியில், இனி அழைப்பு வசதியும் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டேப்ளட் பிசியில் போன் அழைப்பிற்கான ட்ரைவர் புரோகிராம் பதியப்படும். போன் அழைப்பிற்கான சாதனம் வெளியாக இணைக்கப்பட்டு, அழைப்புகளை ஏற்படுத்தலாம். இதே போல, 2ஜி, 3ஜி அல்லது 4ஜி டேட்டா பரிமாற்றத்திற்கும் வெளி இணைப்பு சாதனம் தரப்படும்.
இப்போது தகவல் தொலை தொடர்பு துறை அமைச்சராகச் செயல்படும், கபில்சிபல், மனிதவளத்துறை அமைச்சராகச் செயல்பட்ட போது, உருவான அவரின் திட்டமே ஆகாஷ் டேப்ளட் பிசி. மலிவான விலையில், இணைய இணைப்பினைப் பெறும் வசதியை மாணவர்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்ற இலக்குடன் ஆகாஷ் டேப்ளட் பிசி உருவாக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. முதன் முதலில், 2011 ஆம் ஆண்டு அக்டோபர் 5ல் இந்த டேப்ளட் பிசி வெளியானது. முதலில் வெளியான டேப்ளட் பிசி, சில அடிப்படை கம்ப்யூட்டிங் வசதிகளை மட்டுமே கொண்டிருந்தது. பின்னர், படிப்படியாகக் கூடுதல் வசதிகள் தரப்பட்டன. தொடக்கத்திலேயே, அரசுக்கு ஒரு டேப்ளட் பிசியை உருவாக்க ரூ.2,276 செலவானது. கூடுதல் வசதிகளைத் தந்த போதும், அரசு இதன் விலையை அதிகப்படுத்தாமல் இருந்தது. இப்போது இன்னும் அதிகமான வசதிகள் தரப்படுவதை ஒட்டி, விலையில் மாற்றம் இருக்குமா என்பதனை அரசு இன்னும் அறிவிக்கவில்லை.
புதிய டேப்ளட் பிசியில் புளுடூத் வசதி உள்ளாக அமைத்தவாறு வழங்கப்படும். இந்த வசதி ஏற்கனவே வந்த மாடல்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
guruswamy thangavel - fahaheel,குவைத்
10-ஜூலை-201319:23:59 IST Report Abuse
guruswamy thangavel ஆகாஷ் பீசி டாடாவிண்ட் கம்பனியின் தயாரிப்பு.அவர்கள் ஒரு வருடம் முன்பு ஆகாஷ் பீசீக்கு என்று புக்கிங் பண்ணி ரூ 2999 வாங்கிகொண்டு இன்றுவரை அனுப்பவில்லை.கேட்டால் பதிலும் இல்லை.அது ஒரு டுபாக்கூர் கம்பனி.கபில்சிபல்,பிரணாப் அதன் விளம்பர தூதர்கள்.யாரும் என்னைப்போல் ஏமாற வேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel
Mani Pangan - Obajana,நைஜீரியா
08-ஜூலை-201320:50:26 IST Report Abuse
Mani Pangan இரண்டு நாட்களுக்கு முன் என் மகன் படிக்கும் பள்ளியில் கேம்பஸ் டே / பெற்றோர் - ஆசிரியர் தினம் நடை பெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியை, மாணவர்கள் கைபேசிகளை கொண்டுவருவதைப்பற்றியும், பென் டிரைவ் கொண்டுவருவதைப்பற்றியும் சரமாரியாக குறைகூறித்தீர்த்தார். இப்போது SD கார்டு + அழைப்பு வசதியோடு மாணவர்களுக்கு ஆகாஷ் அளிக்கப்படும்போது என்ன ஆகும்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X