"குழந்தைகள் முதல் சிறுவர்கள் வரை பாடகர் அருணின் பரம ரசிகர்கள்'
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2013
00:00

கர்நாடிகா, பார்த்தசாரதி சுவாமி சபா இணைந்து, சன்கார் அமைப்புடன் தரப்பட்ட, "பக்தி சங்கீத உத்சவம்-2013' நாரத கான சபாவில் நடைபெற்றது. ஆறு நாட்கள் மிக கோலாகலமாக நடைபெற்ற விழாவில், ரசிகர்கள் கலந்து கொண்டனர். இவ்வாண்டு, பக்தி கலா சாரதி விருதை, ஓ.எஸ்.அருணுக்கு, பிரேமா பாண்டுரங்க் வழங்கினார். அருண், கர்நாடக இசைக்காகவும், பக்தி இசைக்காகவும், பல விருதுகள் பெற்றவர்.
பஜன் சாம்ராட் முதல், கலைமாமணி வரை, தலைநகர் டில்லி முதல் கன்னியாகுமரி வரை தொடர்ந்து, இசைக் கச்சேரிகள் செய்த வண்ணம் இருக்கும் கலைஞர். இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகளில் நமது இசைச் சேவையை செய்து வருபவர். இசையால் அனைவரையும் கவர்பவர். ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு, நிகழ்ச்சியை கொண்டு செல்வதில் வல்லவர். தான் பாடுவதால் ஏற்படும் சுகஅனுபவத்தை, ரசிகர்களும் உணர வேண்டும் என்பதில், மிக கவனமாக அவர்களையும், சேர்த்து பாட வைத்து, கச்சேரி கேட்ட ஒவ்வொருவரையும் மனதாலும், பாட்டாலும் கவர்ந்து, அன்பு பந்தத்தை இசையின் மூலம் ஏற்படுத்தி விடுவார்.
மேலும் எந்த ஒரு கலைஞரானாலும், இன்றைக்கு எந்த பாடல்கள் பாட வேண்டும் என்பதை, ஓரளவுக்கு பட்டியலிட்டு, தயாரித்துக் கொண்டு வருவது வழக்கம். அருண் விஷயத்தில் இது தலைகீழ்.
ரசிகர்கள் முன்கூட்டியே, எஸ்.எம்.எஸ்., இ-மெயில், தொலைபேசி, சீட்டு எழுதி கேட்பது, இன்னும் ஒரு படி மேல் சென்று, அவர் ஒரு பாடலை பாடி முடித்தவுடன், அடுத்த பாடலை அரங்கில் இருப்பவர்கள் மாறி மாறி கேட்க, "ஓ, பாடுகிறேன்' என்று சளைக்காமல் பாடுகிறார். இவருக்கு மட்டும் பலவிதமான ரசிகர்கள் உள்ளனர். குழந்தைகள் முதல் நிறைய இளைஞர்கள் இவரது இசை நிகழ்ச்சியை கேட்கின்றனர். நடுத்தர வயது, வயதானவர்கள் சிலர் இவருடைய அனைத்துக் கச்சேரிகளுக்கும் வருபவர்களாக இருந்து, தங்களின் நேயர் விருப்பத்தை கேட்டு, அவர் அதைப் பாடியவுடன் கிளம்புகின்றனர்.
இதனால், இவரது நிகழ்ச்சிக்கு இரண்டரை மணி நேரமே போதவில்லை. அதனால் தான், சில சபாக்கள் மூன்று முதல் நான்கு மணி நேரம் இவரது கச்சேரியை ஏற்பாடு செய்கின்றன. குறிப்பாக, பக்தி இசை, மராத்தி அபங், சூர்தாஸ், கபீர்தாஸ், துக்காராம் பஜன்ஸ், இந்துஸ்தானி இசையில், துல்லியமாக பாடும்போது, கேட்கும் மனங்கள் துள்ளிக் குதிக்கின்றன. அன்றைய அவரது நிகழ்ச்சியும் அப்படி, ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புடன் துவங்கியது. கண்ணனின் பாலமுகுந்தாஷ்டகத்தை அவர் பாட, மனத்திரையில், கண்ணனை சிலை வடித்தனர் ரசிகர்கள். அப்படி உருகி உருகி பாடுகிறார்.
அடுத்து, அபங் ஒன்றை பாடி, நம்மை பக்தி ரசத்தில் மூழ்கச் செய்து விட்டு, சிவரஞ்சனி ராகத்தில், "கண்ணா கண்ணா என்று அழைத்தேன், யமுனை நதியே கண்ணனைக் கண்டாயோ, கார்மேக வண்ணன் ஏன் இங்கு வரவில்லை? வேய்ங்குழலோசையில் என்னை நான் மறந்தேன். உலகம் தன்னை மறந்தது, ஆயர்பாடியின் அற்புத செல்வனே பொற்பாதம் போற்றி பூஜிக்க வந்தோம்' என்று அவர் பாட, கேட்ட நம் காதுகள், இசை வயப்பட்டு மகுடிக்கு கட்டுண்ட பாம்பாய் மனத்தை அடக்கியது.
அடுத்து ஷியாம் கல்யாணி ராகத்தில், இன்னும் ஒருபடி மேல் சென்று ச்யாமு, ஷியாமு என்று "கண்ணனை இன்று, வருவாயா என்னுடன் விளையாட' என்று கேள்வி கேட்கும் விதத்தில், பாடிய அபங்கில் மனம் கரைந்து போய்விட்டது. ஷியாம், பீமஹா மாருதி, பல பீமஹா மாருதி பாடலுடன் நிறைவு செய்ய, அரங்கமே எழுந்து நின்று கை தட்டியது. அவர் பாடுவதற்கு சளைக்காமல், பக்க வாத்தியத்தில் காரைக்கால் வெங்கட சுப்ரமணியம், வயலினில் வெங்கட சுப்ரமணியம், மிருதங்கம் - கணபதி, தபலா - சந்திரசேகர், ஹார்மோனியம் - கலை செல்வம், குழித்தாளத்தில் மிக அனுசரணையாக ஒத்துழைத்து சிறப்பித்தனர்.
-ரசிகப்ரியா

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.