அன்னமாச்சார்யாவின் இசை அழகாக பாடினார் நிஷா
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2013
00:00

லலித கலா வேதிகா கலை அமைப்பு, முழுக்க முழுக்க சிறந்த கலா அபிமானி, அமரர் பி.வி.எஸ்.எஸ்., மணியினால் துவக்கப்பட்டு, தற்போது சிறப்பாக இயங்கி வருகிறது. அண்மையில், லலித கலா வேதிகா அமைப்பு ஏற்பாடு செய்திருந்த, கலைநிகழ்ச்சி, மயிலை ஆர்.கே.சுவாமி கலையரங்கத்தில், வெகு சிறப்பாக நடைபெற்றது.
ரசிகர்களை கவரும் விதத்தில், இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அம்சமாக, டாக்டர் பப்பு வேணுகோபால ராவ், தெய்வகவி அன்னமாச்சார்யாவின் கீர்த்தனங்களின் உயர்வை, மிக அழகாக ரசிகர்களுக்கு எடுத்துக் கூறினார். அன்னமாச்சார்யாவின் கீர்த்தனைகளை, இரு வகைகளாக பிரிக்கலாம். ஒன்று ஆத்யாத்மிக கீர்த்தனம், மற்றது சிருங்கார கீர்த்தனங்கள். எல்லா சுவைகளிலும், தலை சிறந்தது உவகை. ரசங்களுள் சிறந்தது சிருங்காரம்.
சிருங்காரம் இல்லாவிட்டால், இந்த உலகமே இல்லை. இதில் கூடல், பிரிவு என்று இரு வகைகள் உள்ளன. கூடலை விட பிரிதல் பற்றிய பாடல்களே கேட்க, இனிமையாக இருக்கும். இந்த கூடல் பிரிவு, சங்கீர்த்தனங்களுக்கு வடமொழியில், ஸ்ரீ ஜெயதேவர் இயற்றிய, அஷ்டபதியே முழு உதாரணம்.
அன்னமாச்சார்யாவின் பாடல்களிலும், நாயகன் - நாயகி உணர்ச்சிகள் ததும்பும் வரிகள், பக்தி சிருங்கார உயர்வை பறைசாற்றும் வகையில் உள்ளன.
"ப்ரும்மம் ஒகடே' பாடல் மூலம், பிறப்பால் அனைவரும் ஒரே இனத்தைச் சேர்ந்த, உயர்ந்த விஷயத்தை எழுதிய தெய்வீக கவி அன்னமாச்சார்யா, "தாசுகோ' என்னும், தன் கடைசி பாடலை திருவேங்கடவன் பாதத்தில் அர்ப்பணித்து, அவருடன் இரண்டறக் கலந்ததாக, இசை வரலாறு மூலம் அறியப்படுகிறது.
இந்த சிறப்பு நிகழ்ச்சியில், இளம் நிஷா ராஜகோபாலன் அன்னமாச்சார்யா இயற்றிய சில கீர்த்தனங்களை, பக்தி ததும்ப பாடியது மனம் கவர்ந்தது. குறிப்பாக, பாரத ரத்னா எம்.எஸ்., பாடி பிரபலப்படுத்திய "வந்தே வாசுதேவம்' (ஸ்ரீ ராகம்), தேவ தேவம் பஜே (இந்தோளம்) ஆகிய கீர்த்தனங்களை, கடும் உழைப்புடன் சிட்டைஸ்வரம் மற்றும் மதுர சங்கதிகளுடன் பாடியது, சிறப்பாக இருந்தது.
இளம் ராஜீவ் வயலினில், மிகச் சிறப்பாக வாசித்தது பாராட்டும்படி இருந்தது. கலைமாமணி, கன்யாகுமரியின் அருமை மாணவர் இவர். இளம் சாயி கிரிதரும் மிருதங்கத்தில், சிறப்பாக அனுசரணையுடன் வாசித்தது கேட்க, ரம்மியமாக இருந்தது லயம். அன்னமாச்சார்யாவிற்கு பொருத்தமான இசையஞ்சலி இது.
-மாளவிகா

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.