மாணவ - மாணவியருக்கு ஆர்வமூட்டும் இசை விழா
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2013
00:00

கே.பி.எஸ்., இன்கல்கேஷன் அமைப்பு, அதன் நிறுவனர் கிருஷ்ணபாபு, தங்களது ஆண்டு விழாவில், சங்கீத பூஷணம் எம்பார் எஸ்.சடகோபனின் நினைவு சிறப்பு விருதை அளித்தனர். இது, 2012-13க்கு உரியது. எம்பார் எஸ்.சடகோபன், மிக எளிமையான, பழகுவதற்கு இனிமையான நிறைகுடம் தளும்பாத இசை ஆசிரியர். அடிதட்டு மக்களின் குழந்தைகளுக்கு இசையை கற்பித்து, அவர்களை பாட வைத்தது, இவரது தனிச் சிறப்பு ஆகும்.
இவரது மகன் எம்பார் எஸ்.கண்ணன் மிகச் சிறந்த வயலின் வித்வான். மகள் கீதா பாடகி. மற்றொரு மகள் லலிதா திரைப்பட பின்னணி பாடகி. இவரது மகன் சத்ய நாராயணன் உலகப் புகழ் பெற்ற பாடும் கீ-போர்ட் கலைஞர். இவர்கள் பங்கேற்கும் கே.பி.எஸ்., இன்கல்கேஷன் அமைப்புடன் நாதஸ்வர வித்வான் அடையாறு டி.பாலசுப்ரமணியன் இணைந்திருக்கிறார்.
இந்த அமைப்பில் பயிற்சி பெறும் மாணவ, மாணவியரைக் கொண்டு இன்னிசை நிகழ்ச்சியை மயிலை பாரதிய வித்யா பவன் அரங்கில் நடத்தினர். இந்நிகழ்ச்சி, ரசிகர்களுக்கு மிக வித்தியாசமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மொத்த நிகழ்ச்சியின் சிறப்பு அம்சம் சாகித்யத்தை பாடிக் கொண்டே தாளம் போட்டுக் கொண்டும், லாவகமாக கீ-போர்டில் சிறந்த வாசிப்பு முறையை முத்திரையாக கொடுத்த சத்யநாராயணன் செயல் பாராட்டிற்குரியது. தலைமையை ஏற்ற, மாணவ, மாணவியருக்கு இசையின் சிறப்பு இது.
நாத சுதாவின் தலைவர் பாலசுப்ரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தலைசிறந்த பாடகர் ஓ.எஸ்.அருண் கலந்து கொண்டு, நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைத்து கலைஞர்களையும் பாராட்டினார். சங்கீத பூஷணம் எம்பார் எஸ்.சடகோபன் நினைவு சிறப்பு விருதை, முரளி பெற்றார். அடுத்து பரத்வாஜ், அகிலேஷ் ஆகியோர் அடுத்த நிலை பரிசுகளை பெற்றனர்.
-ரசிகப்ரியா.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.