சாஸ்திரத்தை அனுசரியுங்கள்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2013
00:00

வாழ்க்கையானது, தர்ம சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது போல் அமைய வேண்டும். அப்படி அமைத்துக் கொள்வது நம் கையில் தான் உள்ளது. உலகில் பல மதங்கள் உள்ளன; ஒவ்வொரு மதத்திலும், சில கோட்பாடுகள் உள்ளன. அவைகளில் கூறியுள்ளபடி, ஒவ்வொரு மதத்தினரும் நடந்து கொள்ள வேண்டும்.
இந்து மதத்தில் ஏராளமான சாஸ்திர சம்பந்தமான விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. எல்லாவற்றையும் அனுசரிக்க முடியா விட்டாலும், ஒரு சிலவற்றையாவது அனுசரிக்க வேண்டும். பூஜா நேரத்தில் பட்டு வஸ்திரம் உடுத்திக் கொள்வது நல்லது. அதிலும், கரை போட்டதாக இருக்க வேண்டும். கரையில்லாத வஸ்திரம் எப்போதுமே உடுத்தக் கூடாது. வஸ்திரங்களில் கிழிசல், தையல் இருக்கக் கூடாது; இவைகளைப் பயன்படுத்தக் கூடாது. பூஜைக்கு மடி வஸ்திரம் உபயோகிக்க வேண்டும். புது வஸ்திரம் நல்லது. பட்டு வஸ்திரம் நனைக்காததாக இருந்தால், திரும்பத் திரும்ப உபயோகிக்கலாம்.
பூஜை முடிந்து சாப்பிட ஆரம்பிக்கும் முன், கை, கால் அலம்பி, மந்திரம் உச்சரித்து, சாப்பிடுமிடத்தை சுத்தம் செய்து, வடக்கு, கிழக்கு முகமாக உட்கார்ந்து வாழை இலை அல்லது வெள்ளித் தட்டில் சாப்பிடலாம். தையல் இலை மற்றும் சில இலைகளில் சாப்பிடக் கூடாது.
சாப்பிடும்போது, வீண் வம்பு பேச்சு பேசாமல், அன்னத்தை நிந்திக்காமல், பகவத் தியானத்தோடு சாப்பிட வேண்டும். அந்த சமயத்தில், வீட்டில் அவசப்தம், அழுகைக் குரல் போன்றவை கூடாது. சாப்பிடுவது நம் சரீர பலத்துக்காக மட்டுமல்ல, நமக்குள் இருக்கும் பரமாத்மாவுக்கு, அர்ப்பணம் செய்யப்படுவதற்காகவும் தான்.
உத்தரீயம் இல்லாமல் ஒற்றை வேஷ்டியுடனோ, சட்டை அணிந்தோ, உடைந்த பாத்திரங்களிலோ, இலையின் பின்புறத்திலோ சாப்பிடக் கூடாது. சிலர் தாமரை இலையின் பின்புறத்திலும், வாழை மட்டையை சீவி பின்புறத்திலோ சாப்பிடுவதுண்டு; இது கூடாது. வெண்கலப் பாத்திரத்தில் சாப்பிடுவதோ, தண்ணீர் எடுத்து கை, கால் அலம்பவோ கூடாது.
"என்ன சார்... இவ்வளவு சாஸ்திரங்கள் சொல்கிறீர்களே... அனுசரிக்க முடியுமா...' என்று கேட்டால், சாஸ்திரத்தில் அப்படியுள்ளது என்ற பதில் தான் கிடைக்கும். முடிந்ததை அனுசரிக்கலாமே!
***

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்!
* சாமிக்கு படைத்த பிரசாதத்தை, முதலில் காக்கைக்கு வைத்து, அது சாப்பிட்ட பின்தான் நாம் சாப்பிடுகிறோம். இந்து தர்மப்படி, அதற்கு ஏதேனும் அர்த்தம் உண்டா?
உணவில் விஷம் கலந்திருக்கிறதா என்பதைச் சோதித்தறியவே முதலில் நாய்க்கோ, காக்கைக்கோ வைக்கும் பழக்கத்தை, நம் மூதாதையர் மேற்கொண்டனர். உணவில் விஷம் இருந்தால், அது காக்கையின் உடம்பில் தான் வெகு சீக்கிரம் பாயும்; காக்கை சுருண்டு விழுந்தால், அந்த உணவை யாரும் சாப்பிட மாட்டார்கள்.
***

வைரம் ராஜகோபால்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
காயத்ரி - Chennai,இந்தியா
14-ஜூலை-201308:07:16 IST Report Abuse
காயத்ரி எந்த ஒரு விஷயத்தைக் கடைபிடிப்பதாக இருந்தாலும், நம்மைப் பற்றிய தெளிவு வேண்டும். விரத அனுஷ்டானங்கள் எல்லாம் நம்மை மேம்படுத்தத் தானே ஒழிய, சிரமத்தை ஏற்படுத்த அல்ல. மேலும், உடலை வருத்தும் விரதங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. உள்ளத்தில் நல்ல எண்ணங்களை விதைத்து, பிறருக்கு நன்மை செய்வதே உண்மையான விரதம். பிறருக்குச் சேவை செய்வதையே இறைவன் சிறந்த விரதமாக ஏற்றுக்கொள்வான்
Rate this:
Share this comment
Cancel
காயத்ரி - Chennai,இந்தியா
14-ஜூலை-201307:47:40 IST Report Abuse
காயத்ரி காக்கைக்கு உணவு வைப்பதற்கு வேறு சில காரணங்கள் இருக்கின்றன. காக்கையிடம் உள்ள தந்திரம் வேறு எந்தப் பறவைகளிடமும் காண முடியாது. அதிகாலையில் எழுந்து கரைதல், உணவினை உடனே உண்ணாமல் தன் கூட்டத்தினரை அழைத்து பகிர்ந்து உண்ணல், உணவு உண்ணும் போதே சுற்றும் முற்றும் பார்த்தல், பிறர் காணாமல் ஜோடி சேர்ந்து இணைதல், மாலையிலும் குளித்தல், பிறகு தங்குமிடத்திற்குச் செல்லுதல் போன்றவற்றை வழக்கமாகக் கொண்டவை. தங்கள் இனத்தில் ஏதாவது ஒரு காக்கை இறந்து விட்டால் அனைத்து காக்கைகளும் ஒன்று கூடி கரையும் தன்மையையும் காணலாம். இது அஞ்சலி செய்வதற்குச் சமமாகக் கருதப்படுகிறது.எமதர்மராஜன் காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம். அதனால் காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வாராம். எமனும் சனியும் சகோதரர்கள் ஆவர். அதனால், காக்கைக்கு உணவிடுவதால் ஒரேசமயத்தில் எமனும் சனியும் திருப்தியடைவதாகக் கருதப்படுகிறது.தந்திரமான குணம் கொண்ட காக்கை மனிதர்களுக்கு சில அறிகுறிகளைத் தெரிவிப்பதாகச் சொல்லப்படுகிறது. யாராவது விருந்தினர் வருவதாக இருந்தாலும் நல்ல செய்திகள் வருவதாக இருந்தாலும் முன்கூட்டியே காகம் நம் வீட்டின்முன் உள்ள சுவரில் அமர்ந்து... "கா...கா...' என்று பலமுறை குரல் கொடுக்கும். இந்தப் பழக்கம் இன்றும் உண்டு. காலையில் நாம் எழுவதற்குமுன், காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கிக் கரைந்தால் நல்ல பலன் உண்டு.வீடு தேடி காகங்கள் வந்து கரைந்தால் அதற்கு உடனே உணவிட வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். காக்கை வழிபாடு செய்வதால் சனி பகவான், எமன் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தினைப் பெற்று மகிழ்வுடன் வாழலாம்
Rate this:
Share this comment
Cancel
S.Ravi - Brisbane,ஆஸ்திரேலியா
14-ஜூலை-201304:33:44 IST Report Abuse
S.Ravi இரண்டு விஷயங்கள் மனதை உறுத்துகின்றன. பட்டு வஸ்திரம் என்பது ஆயிரகணக்கான பட்டு பூச்சிகளை கொன்றபின் வருவது. பஞ்சினால் செய்த ஆடை அணிந்து பிற உயிர்களுக்கு துன்பம் கொடுக்காமல் பூஜை செய்யலாமே? அதேபோல சாப்பிடும் உணவில் விஷம் கலந்திருக்குமோ என்று - மனநோயாளிபோல - நினைப்பதே தவறு, அதற்காக காக்கையோ, நாயோ அந்த விஷ (?) உணவை தின்று இறந்தபின் தான், பிழைத்ததை எண்ணி சந்தோஷப்படுவது அர்த்தமுள்ள செய்கையா?
Rate this:
Share this comment
Raman - Chennai,இந்தியா
14-ஜூலை-201320:03:52 IST Report Abuse
Ramanரவி, இன்று போல அன்று குளிர்சாதன வசதிகள் கிடையாது. உணவு பண்டங்கள் கெட்டு போய் இருக்க கூடும். அதனால்தான் இறந்த விலங்குகளை மற்ற புலால் உண்ணும் விலங்குகள் சீண்டுவது கிடையாது. ஆகவே அது மன நோய் இல்லை, எச்சரிக்கை. பறவை, நாய் என்றும் சக உயிராக கருதப்பட்டது கிடையாது. அவை அந்த தகுதியை பெற்றது சென்ற நூற்றண்டில் . அதனால்தான் ஆபத்தை நோக்கி அவை - ஏன் இன்றும் (ஒரு இடிபாடு இடையே தேட, ஒரு வெடிகுண்டு sniff பண்ண என்று) - செலுத்தப்படுகின்றன. இந்து மதம் மனித உயிரை மேம்பட்ட உயிராக கருதியது / கருதுகிறது. அது விலங்கின பிரியர்களுக்கு ஏற்பு இல்லாதாக இருக்கலாம். ஆனால் அது எங்கும் ஏற்கப்பட்ட ஒன்று. இது தீர்வில்லாத விவாதம். எலிகளை கொல்லாது பல மருந்துகள் கிடையாது. அதற்காக நாம் இறந்தாலும் சரி எலிகள் வாழ வேண்டும் என்றா சொல்கிறோம். வைரஸ் என்பது ஒரு உயிரே - இப்படி (விதண்டா) வாதம் செய்யலாம். எங்களுடன் பயணித்த ஒரு சுத்த சைவ பெண்மணி (சைவம் அவர்கள் ஏற்று கொண்ட வாழ்க்கை) நாங்கள் பனி புயலில் மாட்டி கொண்ட பொழுது பட்டினி இருக்கவில்லை ( முடியவில்லை ) - எங்களிடம் இருந்த மாமிச உணவை சாப்பிட்டார். ஆக social norms, values vanish in extreme conditions. ஏன்? ஏன் எனில் மனித உயிர் முக்கியம் என்ற ஒரே காரணம்....
Rate this:
Share this comment
S.Ravi - Brisbane,ஆஸ்திரேலியா
19-ஜூலை-201314:42:22 IST Report Abuse
S.Raviராமன் அவர்களே உங்கள் கருத்தை பதிவு செய்ததற்கு நன்றி. புலால் உண்பது சரியா அல்லது சைவ (மரக்கறி ) உணவு சரியா என்று உங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட விரும்ப வில்லை. இந்த விஷயம் அவரவர் விருப்பு வெறுப்பை பொருத்தது. சாதாரண மனிதன் சாப்பிடும் உணவு தன் மனைவியோ, குடும்பத்தினரோ, உறவினரோ, செய்த உணவாக இருக்கலாம் (தானாகவும் சமையல் செய்திருக்கலாம்) அல்லது உணவகத்திலோ அல்லது ஒரு கல்யாண விருந்திலோ சாப்பிட நேரலாம். என்ன சொல்லவருகிறேன் என்றால் , தான் சாப்பிடும் உணவில் விஷம் கலந்திருக்குமோ என்று யாரும் (generally) காக்கைக்கும், நாயிக்கும் உணவிடுவதில்லை (எதிரிகள் மிகுந்த ஒரு அரசனோ அல்லது ஒரு பணக்காரனோ தான் எப்போது கொலை செய்யபடுவோமோ என்று ஒவ்வொரு நிமிஷமும் உயிருக்கு பயந்து உணவை சாப்பிடும் முன் சோதனை செய்து பார்க்கக் கூடும்) எனக்கு தெரிந்தவரை சாதாரண மனிதர்கள் ( general public) தான் உணவு உண்ணும் போதோ, உண்ணுவதற்கு முன்போ காக்கைக்கும் நாய்க்கும் உணவளித்தால் அது வாயில்லா பிராணிக்கு உணவு போடுகிறோம் என்ற சந்தோஷத்திற்காக மட்டுமே. கண்ணதாசன் அவர்கள் கவிதை புனைவதில் மிகுந்த புலைமை பெற்றவர், அதில் ஒரு சந்தேகமும் இல்லை, அனால் அவருடைய இந்த விளக்கம் எனக்கு ஏற்புடையதில்லை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.