அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2013
00:00

நண்பர் ஒருவரது கெஸ்ட் ஹவுஸ்... இளம் தொழிலதிபர்கள் சிலர், வருமான வரித்துறை அதிகாரிகள் இருவர், வங்கி அதிகாரி ஒருவர் என, ஒரு சிறு கூட்டம்; பொழுதுபோக்கான, "கெட் டு கெதர்' அபீஷியலான பேச்சுக்கள் எதுவுமே கிடையாது...
அனைவரும் நண்பர்கள் என்பதால், வீட்டு நடப்பு, நாட்டு நடப்பு, பொழுதுபோக்குச் சமாசாரங்களைப் பேசிக் கொண்டிருந்தோம்.
தொழிலதிபர்களில் ஒருவர் விழுப் புரத்துக்காரர்; 40 வயதை நெருங்கிக் கொண்டிருப்பவர். அவரது மூத்த மகன், இந்த வருடம் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகிறார். தேர்வுக்குப் பின், சென்னையில் உள்ள புகழ்பெற்ற பள்ளி ஒன்றில் பிளஸ் டூ சேர்க்க எண்ணியுள்ளார்.
அப்பள்ளியில் படித்தால் அதிக மதிப்பெண்கள் பெற முடியும் என்றும், அதனால், என்ஜினியரிங் படிப்பில் சேர்ப்பது எளிது என்றும் நினைத்து, சென்னையில் உள்ள அப்பள்ளியை அணுகிய போது, அதற்கான தேர்வுகள் முடிந்து விட்டதென மொட்டையாகக் கூறி, கதவை அடைத்து விட்டனர்.
பணம் படைத்தவர், தொழிலதி பராயிற்றே... பிடிக்க வேண்டியவர்களைப் பிடித்து, அணுக வேண்டியவர்களை அணுகி, அவரது மகனுக்கென்று விசேஷ தேர்வு நடத்த வைத்து விட்டார்.
அவர் கூறினார்:
அந்தப் பள்ளியில், இந்த கல்வியாண்டில் பிளஸ் 1க்கு உள்ள காலியிடங்கள் மொத்தமே இருபது தான். இது நன்கு தெரிந்துமே, மொத்தம் 4,000 விண்ணப்பங்களை பெற்றுள்ளனர். ஒரு விண்ணப்பப் படிவத்தின் விலை, 500 ரூபாய். அப்ளிகேஷன் பாரத்தை விற்றதன் மூலமே, 20 லட்ச ரூபாய் சம்பாதித்து விட்டனர். கல்வி சிறந்த வியாபாரமாகி விட்டது, என்றார்.
"எல்.கே.ஜி., முதல் பிளஸ் டூ வரை பள்ளி நடத்துவதென்றால் பெரிய தொல்லையாக உள்ளது... நிறைய இடம், கட்டடம், ஆசிரியர்கள் தேவை என்பதால், இப்போது பிளஸ் டூ வகுப்புகளுக்கு மட்டுமே பள்ளிகள் ஆரம்பிக்கப்படுகின்றன தெரியுமா...' எனக் கேட்டேன்.
"இது பழைய சமாச்சாரங்க... அப்போல்லாம் இந்த மாதிரி பள்ளி ஆரம்பிக்க ஐம்பது ஆயிரம் ரூபாய், "அன்பளிப்பு' கொடுத்தா போதும்...' என்றவர் இடையே நிறுத்தி, ஒரு வெண்குழல் வத்தியை பற்ற வைத்தார்; கல்வித் துறையில் உள்ள என் அறியாமையை எண்ணி நொந்தபடி, நண்பரின் வாய் பார்த்தேன்...
"இப்போ, இதே அன்பளிப்பு 75 ஆயிரமாயிடுச்சு... அப்புறம் என்ன... பள்ளி ஆரம்பித்து, கூடையில் பணத்தை அள்ளிச் செல்ல வேண்டியதுதான்,' என்றார் சேலத்தில் தொழிலதிபராக இருக்கும் இன்னொரு நண்பர்... இவ்வளவுக்கும் அவர் ஆளும்கட்சி அனுதாபி!
"அதெல்லாம் தூக்கி ஒடப்புல போடுங்க சாமியோவ்... என் பொண்ண எல்.கே.ஜி., யில சேர்க்கப் போனேன்... என்னையும், என் சம்சாரத்தையும் பரீட்சை எழுத சொல்லிப் போட்டாங்க....'என்றார் அந்த மது ரைக்கார நண்பர். அவரது இரண்டாவது குழந்தையின் வயது 12... எக்குத் தப்பாக வந்து சேர்ந்து விட்டது இந்தக் குழந்தை. அவர் ஒரு லாரி பிளீட் ஆபரேட்டர் - மிகப் பெரிய லாரி, "மந்தை' யின் அதிபர்.
"க்ளுக்' எனச் சிரிப்பு வந்தது எனக்கு... அடக்கிக்கொண்டு, "சொல்லுங்க, மொதலாளி... என்ன நடந்திச்சு?' எனக் கேட்டேன். அவரது பதிலுக்கு முன், லாரி அதிபரை பற்றி விவரிப்பது அவசியம்...
பாரம்பரியம் மிக்க குடும்பத்தை சேர்ந்தவர், குடும்பத்தினர் அனைவருமே காங்கிரஸ்காரர்கள். நண்பரின் தகப்பனார், நேருவுடன் மாஸ்கோ சென்ற பெருமை பெற்றவர். அனுபவச் செல்வம் தான்; அவரிடம் கல்விச் செல்வம் பெரிதாகக் கிடையாது. தான் பெறாத செல்வத்தை தன் மகன், தவமிருந்து பல வருடங்கள் காத்திருந்து பெற்ற பிள்ளையாவது பெறட்டு@ம என்று எண்ணினார். பிள்ளையை ஊட்டியில் உள்ள புகழ்பெற்ற ஆங்கிலப் பள்ளியில் சேர்த்தார்.
"நம்ம ரத்தத்துல வீச்சருவா இல்ல ஓடுது.... நமக்கு எங்க படிப்பு ஏறும். அழுது, அடம் புடிச்சு மதுரைக்கே திரும்ப வந்து சேர்ந்துட்டேன். எங்க லாரி எல்லாம் ஒரு பெரிய கம்பெனியில பாடி கட்டுவோம்... அந்தக் கம்பெனி ஒரு ஸ்கூல் நடத்துது... அந்த ஸ்கூல்ல சேத்துவிட்டுது எங்க பெரிசு (அப்பா).
"அப்படியிப்படி பத்தாப்பு (பத்தாம் வகுப்பு) வந்துட்டேன். அப்பமே எனக்கு காதல் வந்திருச்சு... கூடப் படிச்சபுள்ள ஒன்னை லவ்வு பண்ணேன்... நான் மைதானத்துல (விளை யாட்டு) பஸ்டு... அந்த புள்ள பாடத்துல பஸ்டு...
"ஒரு நாளு, பள்ளிக் கூடத்துப் பக்கத்துல இருக்கற ரயில்வே தண்டவாளத்துல ரெண்டு பேரும் நடந்துகிட்டு இருக்கம்... இப்பம் போலவே, அப்பமும் எனக்கு பின் பாட்டு தேவை... பின்னாலேயே பள்ளித் தோழன் நடந்து வந்துக்கிட்டு இருந்தான்...
"அந்த நாள் வரையில நானும், அந்த புள்ளயும் ஒருத்தர ஒருத்தர் காதலிக்கிறதா சொல்லிக்கிட்டது கிடையாது... அன்னைக்கு, எங்கிட்ட, "ஐ லவ் யூ'ன்னு அந்தப் புள்ள சொல்லிச்சு... எனக்கு இங்கிலீசும் வெளங்காது...ஒரு மண்ணும் வெளங் காதுல்லா... "என்ன... என்ன சொல்றே?'ன்னேன்.
"பின்னாலேயே வந்த பையன், "அண்ணே... அக்கா உங்களை காதலிக்குதாம்... அதத்தான் இங்கிலீசுல சொல்லிச்சு...' என்றான். இத எதுக்கு சொல்லுதேமுன்னா, நம்ம இங்கிலீசு அறிவு அவ்வளவு தான்...' என்று முன்பு எப்போதோ கூறியிருக்கிறார். இப்போது, அவர் மகளை அதே பள்ளியில் சேர்க்கச் சென்றபோது, அவருக்கே பரீட்சை என்றதும் வந்தது, "க்ளுக்!'
கம்மிங் பேக் டு த பாயின்ட் - லாரி அதிபரே தொடர்ந்தார்...
"நா பரீட்சை எளுத முடியாதுன்னு பேப்பரை தூக்கிப் போட்டுட்டேன்... மொத்தம் 28 கேள்வி... அதுவும் இங்கிலீசுல... எவனுக்கு எழுதத் தெரியும்... எம் பொண்டாட்டி கெஞ்சிக் கூத்தாடுனா... "ஏங்க... நம்ம கொளந்த எதிர்காலம்...' அது, இதுன்னு கெஞ்சுனா... "அடி போடி களுதை!'ன்னுட்டேன்.
"இருந்தாலும் மனசு கேக்கலே... என் புள்ள யாச்சே... இப்படியெல்லாம் நடக்குமுன்னு தெரிஞ்சு, கூடவே ஒரு, "சாமி'யார கூட்டிப் போயிருந்தேன். அவரு வெளியே காருல உக்காந்து இருந்தாரு... அவரக் கூப்புட்டு பரீட்சை எழுதச் சொன்னேன்.
"அப்புறம், ஸ்கூல் பிரின்சுபால் நேர்முகம் வச்சாங்க... அப்ப அவங்கள்ட்ட கேட்டேன்... "ஏங்க... நாங்க தான் படிக்காத முண்டங்களா போயிட்டோம்... எங்க புள்ள குட்டியாவது நாலு எழுத்து படிக்கட்டுமேன்னு தானே பெரிய ஸ்கூல்ல சேக்க ஆசப்படுறோம். படிக்காத பெத்தவங்களுக்கு பரீட்சை வச்சு, புள்ளகள வெளிய தள்ளுனா, எங்க புள்ளைங்களும் மூடங்களாயிடுமே...' எனக் கேட்டேன்... வெத்து சிரிப்பு ஒண்ணு தான் பதிலா கெடச்சுது...' என்று முடித்தார்.
சேர்வராயன் மலையில் இருந்து சிலு சிலு வென காற்று வந்து முதல் மாடியில் இருந்த அந்த சிட் - அவுட்டைத் தழுவ, ஏலகிரிக்குச் செல்லும் வாகனங்களின் விளக்கொளி அவ்வப்போது மினுக், மினுக் என்று தெரிவதை ரசித்தபடி அமர்ந்து சிந்தித்தபோது, லாரி அதிபரின் வாதத்தில் இருந்த உண்மையைப் புரிந்து கொள்ள முடிந்தது!
***

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mainarkunju16@gmail.com - india,இந்தியா
16-ஜூலை-201313:08:16 IST Report Abuse
mainarkunju16@gmail.com ஒரு விழிப்புணர்வு கட்டுரை....
Rate this:
Share this comment
Cancel
Manian - Chennai,இந்தியா
16-ஜூலை-201302:09:28 IST Report Abuse
Manian சிந்திக்க வேண்டிய விஷயம்தான். ஆனால் நல்ல ஆசிரியர்களை ஜாதி, மதம் என்ற பேரால் கோபாலபுரம் கொள்ளை காரர்கள் விரட்டிவிட்டார்கள். அப்போது இந்த மாதிரி யானவர்கள் அதை எதிர்க்கவில்லை. இப்போது அதன் பலனை அனுபவிக்கிறார்கள். பரம்பரையாக ஏழையாக இருந்தாலும் ஆசிரியர்களாக இருந்தவர்கள் இப்போது தங்களது திறமையை தொழில்கள் மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள். பம்பாய், கல்கத்தா, டில்லி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று ஓடிவிட்டார்கள். லஞ்சம் கொடுத்து பட்டம் பெற்றவர்கள் கல்வி ஆசிரியர்களாக இன்று வேலை செய்கிறார்கள். அதனால், சிறந்த கல்விகூடங்களில் கல்வி சூழ்நிலை இல்லாத வீடுக்குழந்தைகளுக்கு இடம் கிடைப்பதில்லை. அந்த தொழில் அதிபரே ஏன் ஒரு நல்ல பள்ளியை கட்டி தன் குழந்தைகள் போன்ற மற்ற குழந்தகளுக்கு உதவி செய்யக்கூடாது? புலம்புவதால் பயன் இல்லை.
Rate this:
Share this comment
Jegan - chennai,இந்தியா
17-ஜூலை-201301:05:44 IST Report Abuse
Jeganசரியான கருத்து. இதை அந்த நபருக்கு தெரிவித்தால் நன்று....
Rate this:
Share this comment
Cancel
Uma - Connecticut,யூ.எஸ்.ஏ
16-ஜூலை-201301:11:05 IST Report Abuse
Uma பிள்ளைங்களை படிக்க வைக்க நல்ல பள்ளி, கல்வி அவசியம், ஆனா பெரிய பள்ளினு முட்டி மோதி சேர்க்கிற பள்ளி பிள்ளைங்கள விட கிராமங்கள், சாதா பள்ளிகள்ல சேர்த்த பிள்ளைங்க நல்ல மார்க் வாங்கி நல்ல நிலைமையில இருக்கிறத கண்கூடா பார்க்கிறோம், பின்னே எதுக்கு அதிக பீஸை கட்டி பந்தாவா நடக்கணும், படிக்கிற பிள்ளைங்கள நல்லா கவனிச்சா எங்க இருந்தாலும் நல்லா படிப்பாங்க......பிரஷர் இல்லாம வீட்டுலே ஆக்கப்படுத்தி பாருங்க, பிள்ளைங்க நல்லா வருவாங்க.
Rate this:
Share this comment
Cancel
King Ashoka - Madras nalla Madras,இந்தியா
14-ஜூலை-201312:07:53 IST Report Abuse
King Ashoka பள்ளிகள் காசு பண்ணும் வியாபாரக் கூடங்களாக ஆகிவிட்டன என காட்டுக் கத்தல் கத்துவதால் என்ன பிரயோஜனம். எங்கே பிள்ளைகளை கை நீட்டி வரவேற்கிறார்களோ அங்கே சேர்க்க வேண்டியது தானே. பிள்ளைகளின் அறிவைப் பெருக்க இன்று கம்யூட்டரும் இண்டர்நெட்டும் இருக்கும் போது என்ன கவலை.......
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
14-ஜூலை-201307:14:24 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே எனது நண்பர் ஒருவர் பள்ளிகளின் ஆசிரியருக்கு வைத்த டெஸ்டில் அந்த பள்ளியின் ஆசிரியர்கள் அனைவரும் பைல், இத்துணைக்கும், அந்த ஆசிரியர்களின் சுப்ஜெக்ட், பொது அறிவு என்று வைத்திருந்ததில் பல ஆசிரியர்கள் ஒற்றை இலக்கத்தில் மார்க் பெற்றிருந்தனர், அவர் அதனை கூறி எப்படியாகிலும் எனது மகனுக்கு, நான்தான் கல்வியறிவு கொடுக்க வேண்டும், நீங்கள் ஒன்றும் செய்ய போவது கிடையாது, வெறும் பிராண்ட் நேமுக்கு செலவழிக்க விரும்பவில்ல என்று கூறி அன்பளிப்பு மற்றும் இதர தொகைகளை வெட்டி விட்டார், ஒட்டுமொத்தத்தில் இலவசமாக அவரது மகனுக்கு கல்வி கிடைக்கிறது இந்த ஹைதராபாத் மாநகரின் நாராயணா பள்ளியில்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.