"ஹைடெக்' விவசாயி!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2013
00:00

"விவசாயம் செய்வது, சிரமமாக இருந்தால் விவசாயிகள் வேறு தொழிலை பார்ப்பது நல்லது' என்று, விரக்தியாக நம் பிரதமர் மன்மோகன் சிங் பேசியது அண்மையில் சர்ச்சையை கிளப்பியது. விவசாய, விளைநிலங்கள் பிளாட்டுகளாக மாறி வருகின்றன. விவசாயிகள் பிழைப்பு தேடி நகரங்களுக்கு இடம் பெயர்கின்றனர். மகாராஷ்டிராவிலும், ஆந்திராவிலும் விவசாயி கள் தற்கொலை செய்தது, நீங்காத தேச அவமானம்.
இப்படி, விவசாயம் என்றாலே எல்லாரும் ஓடி ஒளியும் போது, அமெரிக்காவில் இன்ஜினியரிங் பட்டமேற்படிப்பு படித்து, ஐ.டி.,தொழில் நுட்பத்துறையில் லட்சம் லட்சமாக சம்பாதிப்பதை விட்டு விட்டு, தமிழகத்தின் குக்கிராமத்திற்கு வந்து விவசாயம் செய்து கொண்டிருக்கிறார் இளைஞர் ஒருவர். ஆச்சரியமாக இருக் கிறதா? அவர்தான் கஸ்தூப் ஜோரி.
இந்த இளைஞரின் பூர்வீகம் உத்தரபிர தேசம்; வசிப்பது சென்னையில். அப்பா என்.கே.ஜோரி, இன்டீரியர் டெக்கரேஷன் தொழில் செய்கிறார். பிரபலமான டூன் பள்ளியில் படிப்பு, பின் அமெரிக்காவில் ஜார்ஜியா பல்கலையில் பி.எஸ்.இ.இ., எலக்ட்ரிடிகல் இன்ஜினியரிங், தொடர்ந்து அமெரிக்க டியூக் பல்கலையில் எம்.எஸ்., இன்ஜினியரிங் மேனேஜ்மென்ட் படிப்பு.
இத்தனை படித்தும், பன்னாட்டு நிறுவனங்களில், "ஏசி' அறையில் அமர்ந்து சம்பாதிக்காமல், இவர் சிவகங்கை மாவட்டம், பேச்சாத்தக்குடி அருகே வெட்டிக்குளம் என்ற குக்கிராமத்தின் கரிசல் காட்டில், வெயிலில் காய்ந்து விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்.
ஏன்...விவசாயத்தின் மீது இத்தனை காதல்?
அவரே கூறுகிறார்:

அமெரிக்காவில் பத்தாண்டுகள் வசித்தேன். ஓர் அறைக்குள் அமர்ந்து பணி செய்ய எனக்கு விருப்பம் இல்லை. எனவே, ஐ.டி., நிறுவன வேலையை உதறினேன். எதாவது புதிதாக செய்ய வேண்டும், பெரிய அளவில் விவசாயம் செய்ய வேண்டும், பண்ணை அமைக்க வேண்டும் என்பது என் மனதில் தீராத ஆசை. படிப்பு முடிந்ததும், அப்பாவிடம் சொன்னேன். அவர் மறுக்காமல் எனக்கு ஊக்கமளித்தார். அதற்கான நிலம், குறைந்தது 100 ஏக்கராவது வேண்டும். தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில், நிலம் தேடி அலைந்தோம். பிரச்னை இல்லாத நிலம், மொத்தமாக கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன், இந்த கிராமத்தில் 145 ஏக்கர் நிலம் வாங்கினேன். "வறண்ட பூமி' என முத்திரை குத்தி, யாரும் விவசாயம் செய்யாத பகுதி இது.
இந்த, "நெகட்டிவ்' விஷயத்தை, எனக்கு "பாசிட்டிவாக' மாற்றினேன். ஆம்...யாரும் விவசாயம் செய்யவில்லை என்றால், நிலத்தடி நீர் தாராளமாய் நமக்கு கிடைக்கும் என்று முடிவு செய்தேன். 200 அடி ஆழத்தில், ஆழ்குழாய் போட்டதில், தண்ணீர் எளிதாக கிடைத்தது. அப்படி எட்டு எட்டுபோர்வெல் @பாட்டு. 30 ஏக்கரில் சொட்டுநீர் பாசனம் அமைத்தேன்.
என் முதல் திட்டம், "பயோமாஸ்'(உயிரி எரிபொருள்) மூலம் மின்சாரம் தயாரிப்பது. அதற்காக, 7,000 நிலவேம்பு மரம் வளர்க்கிறேன். 9,000 உயர்ரக குட்டை மாமரக் கன்றுகள், 800 முருங்கைச் செடிகள் நட்டுள்ளேன். தர்பூசணி, கத்திரி பயிரிட்டுள் ளேன். புல் ரகங்கள் வளர்க்கிறேன்; சிறிய ஆட்டுப் பண்ணையும் வைத்துள்ளேன். மொத்தம் 90 ஏக்கரில், பல வகை விவசாயம் நடக்கிறது.
இங்கேயே வீடுகட்டி தங்க போகிறேன்.
விரைவில் பதப்படுத்தும் யூனிட் துவங்க உள்ளேன். இடைத்தரகர்களிடம் விவசாயிகள் சிக்கி உள்ளதால், விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இதனை மாற்ற, "விவசாயிகள் குழு' அமைக்க விரும்புகிறேன். குழுவாக இணைந்தால், நிறைய தொழில் நுட்பங்களை அறிந்து, விவசாயிகள் செயல்பட முடியும்.
தொழில்நுட்ப உதவியுடன், இன்னும் நிறைய பயிரிட வேண்டும். இந்த வறண்ட நிலத்தை வளமாக்க வேண்டும். சில ஆண்டுகள் கழித்து தான் வருமானம் கிடைக்கும்; பரவாயில்லை. நான் சோர்வடைய போவது இல்லை. என் குடும்பத்தில் யாரும் விவசாயி இல்லை; எனவே, நான், "முதல் தலைமுறை' விவசாயி.
இன்ஜினியர் என்பதை விட விவசாயி என்பதே எனக்கு பெருமை. ஏனென்றால், விவசாயம் எனக்கு உயிர். என்னை பார்த்து, சில இளைஞர்களாவது விவசாயத்திற்கு வந்தால் அதுவே சந்தோஷம், என்கிறார் இந்த, "ஹைடெக் விவசாயி!'
தொடர்புக்கு 94450 76595.
***

வி.ஆர். குமார்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LAX - Trichy,இந்தியா
20-ஜூலை-201314:41:08 IST Report Abuse
LAX என்னே ஆச்சர்யம். வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
16-ஜூலை-201313:42:26 IST Report Abuse
N.Purushothaman இந்த கட்டுரையை படித்து ஒரு நெகிழ்ச்சியான தருணம்.....விவசாய நிலம் வைத்து இருப்பவர்கள் நிலத்தை விற்று வெளி நாடு சென்று சம்பாதிக்க வேண்டும் என்கிற மன நிலையில் தான் இருக்கின்றனர்....ஏனெனில் அந்த அளவிற்கு அவர்களுக்கு விவசாயத்தின் மீது வெறுப்பு வந்து விட்டது...நவீன சிந்தனையுடன் விடாமுயற்ச்சி கடின உழைப்பு இருந்தால் கண்டிப்பாக விவசாயத்தில் சாதிக்கலாம்...
Rate this:
Share this comment
Cancel
Mrs Shankar - Kuwait,குவைத்
16-ஜூலை-201311:18:55 IST Report Abuse
Mrs Shankar its indeed an eye er for our youngsters who keep running behind the city lights - is this organic farming ? usage of fertilizers and pesticides will poison the land and water - it will do very good if Mr.Kastoob Johari also educate the locales on his farming methods especially the younger generation and serve as a role model and mentor for them to take agriculture as a serious business and teach them about rain water harvesting and other techniques which will serve this nation well. Hats off to mr.johri for treading this path - let him be the catalyst that this nation needs.
Rate this:
Share this comment
Cancel
suresh kumar.D - salalah,ஓமன்
16-ஜூலை-201309:03:47 IST Report Abuse
suresh kumar.D Hates off brother. farmers group and train them with benefits of drip irrigation as we are running short of ground water.best regards,suresh kumar, Sultanate of Oman
Rate this:
Share this comment
Cancel
Murugan - Bandar Seri Begawan,புருனே
14-ஜூலை-201320:38:58 IST Report Abuse
Murugan Well done...
Rate this:
Share this comment
Cancel
Rajah - salmiya,குவைத்
14-ஜூலை-201314:11:39 IST Report Abuse
Rajah படித்ததும் நெகிழ்ந்து விட்டேன் .....hats off bro வாழ்க உங்கள் பணி வளர்க உங்கள் பயிர்
Rate this:
Share this comment
Cancel
Rajan Iyer - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜூலை-201310:46:19 IST Report Abuse
Rajan Iyer All the Best And Good luck.,You w'l be an examble for everybody. B.regrds. Rajan - Dubai
Rate this:
Share this comment
Cancel
Nallavan - Chennai,யூ.எஸ்.ஏ
14-ஜூலை-201310:03:11 IST Report Abuse
Nallavan I was really very happy while reading this post. Good luck for your success.
Rate this:
Share this comment
Cancel
DHANASEKARAN DEVARAJ - newcastle,ஆஸ்திரேலியா
14-ஜூலை-201307:33:52 IST Report Abuse
DHANASEKARAN DEVARAJ விரைவில் சந்திப்போம் . வாழ்த்துக்கள் . முயற்சி நல்ல பலன் தரும்
Rate this:
Share this comment
Cancel
jeyamurugan - singapore  ( Posted via: Dinamalar Android App )
14-ஜூலை-201305:34:49 IST Report Abuse
jeyamurugan வாழ்த்துக்கள் சகோதரரே....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.