பெர்சனல் பிரேக்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2013
00:00

கூகுள் டாக் பைலை வேர்ட் பைலாக மாற்றும் பதில் வெகு பிரமாதம். பாடக் கட்டுரை போல பதில் தந்துள்ளீர்கள். நன்றி.
சீ. இலக்குவன், திருநெல்வேலி.

விண்டோஸ் 8 கம்ப்யூட்டரில் பெயர் மாற்றும் வழியினைப் படத்துடன் விளக்கியது நன்றாக உள்ளது.
கா. உத்தமராஜ், சின்னமனூர்.

எஸ்.டி. கார்ட் பயன்பாடு பெருகி வரும் வேளையில், அவற்றைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தும் வழிகளைத் தந்தது மிகவும் பயனுள்ள தகவலாகும். நன்றி.
ஆ. சிற்சபேசன், காரைக்குடி.

எங்கல்பர்ட் என்ற விஞ்ஞானி மறைந்த பின்னரே, அவரைப் பற்றிய பல வியத்தகு தகவல்கள் வருகின்றன. தயவுசெய்து, கம்ப்யூட்டர் உலகில் இது போன்ற மாற்றங்களைக் கொண்டு வந்தவர்களின் வாழ்க்கைக் குறிப்பு மற்றும் அவர்களின் சாதனைச் சிறப்புகளை, அவர்கள் தற்போது வாழ்பவர்களாய் இருந்தாலும், போட்டோக்களுடன் தருமாறு வேண்டிக் கொள்கிறேன்.
எஸ். சூர்ய பிரபா, சென்னை.

எங்கல்பர்ட் சாதனை போற்றத்தக்கது. நீங்கள் அளித்துள்ள தகவல்கள் வியப்பைத் தருகின்றன. அவருக்கு அஞ்சலி செலுத்துவோம்.
சா. லஷ்மணன், திண்டுக்கல்.

விண்கிளிப்பர் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. டெக்ஸ்ட் டாகுமெண்ட்களை அடிக்கடி உருவாக்கு பவர்களுக்கு இது நல்ல பயனுள்ள புரோகிராம்.
-கி.சந்தியா ராணி, புதுச்சேரி.

இணையம் மற்றும் சோஷியல் வெப்சைட்டுகளில், நம் மாணவர்கள் பயன்பாடு அதிகரிப்பது நல்லதுதான். இருப்பினும் இது அவர்களின் அறிவுத் தேடலுக்காக இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்றாகும்.
பேரா. ஆர். சிவநேசன், சென்னை.

எக்ஸெல் பங்சன்கள் தந்தது போல வேர்ட் புரோகிராமிலும் நாம் பயன்படுத்தக் கூடிய பங்சன் மற்றும் பார்முலாக்களைப் பட்டியலாகத் தரவும்.
என். கிளாடிஸ் மேரி, தூத்துக்குடி.

கூகுள் இந்தியக் கிராமங்கள் அனைத்தையும், தன் இணைய பலூன்கள் மூலம் இணைத்திட்டால், அது நிச்சயம், நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை புரியும். இளைஞர்கள் அதிகம் பயனடைவார்கள். அரசு இதற்கு ஊக்கம் அளிக்க வேண்டும்.
என். பிரதீப் ராஜன், கோவை.

கேள்வி பதில் பகுதியில், சென்னை மேகலா என்பவர் கேட்டிருந்த கேள்வியில் உள்ள பிரச்னையை நானும் பல ஆண்டுகள் எதிர் கொண்டு வந்தேன். தங்கள் பதில் விளக்கமாகவும், தீர்வு தருவதாகவும் உள்ளது. மிக்க நன்றி.
எஸ். கே. இருதயசாமி, காஞ்சிபுரம்.

வாட்ஸ் அப் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மலைக்க வைக்கிறது. மின் அஞ்சல், இணையதள வழி என தகவல்கள் மற்றும் ஆப்ஜெக்ட்களை அனுப்பும் வேகத்தில், இதனை மிஞ்ச எதுவும் இல்லை. எனவே தான், வாட்ஸ் அப் இன்று பலரின் இனிய ஸ்பீட் போஸ்ட் நண்பனாக உருவெடுத்துள்ளது.
என். சுரேந்திரன், மதுரை.

எஸ்.டி. கார்ட்கள் குறித்து எழுதிய நீங்கள், அவற்றின் விலை பற்றி எதுவும் சொல்லவில்லை. உத்தேசமாகக் கூறி இருந்தால், எங்களுக்கு வழிகாட்டியாக இருந்திருக்கும்.
செ.விஜயராணி, திருச்சி.

எப்படியும் விண்டோஸ் 8 சிஸ்டத்தினை மக்களிடம் பெரிய அளவில் கொண்டு செல்ல, தன் ஸ்டோரில் லட்சக் கணக்கில் புரோகிராம்களை அடுக்குகிறது மைக்ரோசாப்ட். இதனால், வாடிக்கையாளர்கள் நிச்சயம் பயனடைவார்கள். விண்டோஸ் 8 அல்லது 8.1 சிஸ்டத்திற்கு மக்கள் மாறுவார்கள்.
கா.அருண்குமார், இராமநாதபுரம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X