பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2013
00:00

ஆகாஷ் டேப்ளட் பிசி யில் அழைப்பு வசதி தரப்படுவது நல்ல முன்னேற்றமே. ஆனால், மாணவர்கள், அதனை மட்டும் பயன்படுத்தி, வெட்டிப் பேச்சு மேற்கொள்வதனைத் தவிர்க்க வேண்டும்.
கா. சுப்புராஜ், தேனி.

இந்தியாவில் ஐபோன் 5 கிடைப்பது மகிழ்ச்சி. இதன் சிறப்பம்சங்கள், பயன்படுத்தும் விதம் குறித்த டிப்ஸ்களையும் தரவும். மேலும், மற்ற சில மொபைல் போன்களின் தனித் தன்மை குறித்தும் எழுதினால், மொபைல் வாங்குகையில் அதனையும் வழிகாட்டியாகக் கொள்வோம்.
என். வசந்தா, பழநி.

விண்டோஸ் 8.1 பிரிவியூ சிஸ்டத்தினை இயக்கி, அதன் சிறப்பம்சங்களைப் பட்டியலிட்டதன் மூலம் கம்ப்யூட்டர் மலர் வாசகர்களுக்கு, புதிய சிஸ்டத்தினை அறிமுகம் செய்துள்ளீர்கள். இருப்பினும், இதனை நம் கம்ப்யூட்டரில் பயன்படுத்துகையில் வரக்கூடிய ஆபத்துக்களையும் தெரிவிக்கவும். நம் கம்ப்யூட்டரை எப்படி தயார் செய்திட வேண்டும் என்ற தகவல்களையும்
தரவும்.
என்.சிராஜுதீன், கோவை.

என்னைப் பொறுத்தவரை, விண்டோஸ் 8.1 சிஸ்டம் மொபைல் ஹாட் ஸ்பாட்டினைத் தருவதுதான் சிறந்த அம்சமாக உள்ளது. அடுத்ததாக, ஒரே நேரத்தில், பல புரோகிராம்களின் விண்டோக்களை அமைத்து இயக்குவது. தொடர்ந்து இதன் சிறப்பம்சங்களைத் தரவும்.
என். ஞானசேகரன், திருச்சி.

அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் குறித்த விளக்கம் என் பல சந்தேகங்களை நீக்கியதுடன், சில தர்ட் பார்ட்டி புரோகிராம்களை எப்படி இயக்குவது என்று தெரிந்து கொண்டு இயக்க முடிந்தது. நன்றி.
இரா. சம்பந்தன், திருப்பூர்.

இன்னும் பெரும்பாலான மாணவர்கள், விண்டோஸ் 7 தான் பயன்படுத்துகிறோம். எனவே, விண்டோஸ் 8 பற்றி எழுதினாலும், விண்டோஸ் 7 டிப்ஸ்களும் தொடர்ந்து கொடுக்கவும்.
ஆர்.நிர்மலா, சென்னை.

வேர்டில் இலக்கண சோதனை குறித்து ஒருநாளும் கவலைப் பட்டதில்லை. தங்களுடைய டிப்ஸைப் படித்த பின்னரே, இதனை மிஸ் செய்தது தவறு என்று தெரிந்தது. அதே போல, இலக்கணச் சோதனை குறித்த டிப்ஸும் பயன் தருகிறது.
என். கலாராணி, விழுப்புரம்.

செல்களில் அமைக்கப்படும் அண்டர்லைன் கோடுகளில் இத்தனை வகைகளா! ஏதோ கோடு போட்டோம், ஒர்க்ஷீட் அமைத்தோம் என்று இருக்கையில், இந்த வேறுபாடுகள் புதியதாய் கிடைத்தன. தந்ததற்கு நன்றி.
ஆர்.எஸ். திருவடியான், மதுரை.

கம்ப்யூட்டர் உலகில் எப்போதும் புதுமையைப் புகுத்தும் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டோர், இயக்கத்திற்கு வந்த நாள் முதல், மக்களுக்கு சேவையையும், தனக்கு நல்ல வர்த்தகத்தினையும் கொண்டுள்ளது. மற்றவர்கள் இதனைப் பின்பற்றி ஸ்டோர் அமைத்ததே, இதன் வெற்றிக்கு அடையாளம் ஆகும்.
பேரா. எஸ். சத்தியநாதன், மதுரை.

பலவகைகளில், விண்டோஸ் 8.1 சிஸ்டத்தை நம் வசதிக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம் என்பது இது குறித்த உங்கள் கட்டுரையிலிருந்து தெரிய வருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் தங்கள் வசத்திற்கு மாற்றி விட்டது நுகர்வோருக்கு வெற்றி என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
டாக்டர் என். தேவசகாயம், சென்னை.

ஒரு சில புரோகிராம்களின் ஐகான்களில் ரைட் கிளிக் செய்திடுகையில், அட்மினிஸ்ட்ரேட்டர் இயக்கத்திற்கான (Run as Administrator) பிரிவு கிடைப்பதில்லை. உங்கள் டிப்ஸ் கட்டுரையில் இதற்கான விளக்கம் இல்லை. தந்திடக் கேட்டுக் கொள்கிறேன்.
-கே. எம். சூர்யா, சோழவந்தான்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X