ஆலயதரிசனம் செய்வது எதற்கு?
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2013
00:00

"ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்றனர் முன்னோர். தினமும் ஆலயம் சென்று, கடவுளை வணங்கி வருவது ஒரு நல்ல பழக்கம் என்பதோடு, புண்ணியமும் கிடைக்கிறது. ஆலய பிரதட்சணத்துக்கு பெரிய புண்ணியம் உண்டு. ஏதோ ஒரு காரணத்துக்காக, ஆலயத்தை சுற்றி வர நேர்ந்தால் கூட, ஆலய பிரதட்சண பலன் கிடைத்து விடும்.
சந்தியா காலத்தை பிரதோஷ காலம் என்பர். இந்த பிரதோஷ காலத்தில் சிவ தரிசனம் செய்வோருக்கு கைலாசத்தில், "ஒரு சீட்' ரிசர்வ் செய்து வைக்கப்படுகிறதாம். காலை, பகல், இரவு வேளைகளில் சிவ தரிசனம் செய்வோருக்கு ஆயுள், ஆரோக்கியம், செல்வம், முக்தி என அனைத்தும் கிடைத்து விடுகிறது. அதனால் தான், "ஆலய தரிசனம்' அவசியம் என்று கூறுகின்றனர்.
"என்ன சார்... கோவிலுக்கு வாங்களேன், சுவாமி தரிசனம் செய்து விட்டு வரலாம்...' என்று கூப்பிட்டால், "நான் தான் அடிக்கடி போயிட்டு வர்றேனே... நீங்க போயிட்டு வாங்க...' என்று சொல்லி, திண்ணையில் உட்கார்ந்து விடுகிறார். தினமும், கோவிலுக்கு போவது, சுவாமி தரிசனம் செய்வது இவருக்கு அலுத்து விடுகிறதாம். தினமும் ஓட்டலுக்கு போய் இரண்டு இட்லி, வடை, வெங்காய சாம்பார் சாப்பிடுவார். அது, இவருக்கு அலுக்கவில்லை.
இதுவே, தினமும் இவர்கள் கோவிலுக்கு போனால், அர்ச்சகர் தீர்த்தமும், பிரசாதமும் கொடுப்பர். இந்த தீர்த்தத்திலும், பிரசாதத்திலும் தெய்வீகம் உள்ளது. அதற்காகவாவது, கோவிலுக்கு போக வேண்டும். சில கோவில்களில், சுண்டல் கொடுப்பர். அந்த சுண்டலுக்காகவாவது கோவிலுக்கு போனால், புண்ணியம் கிடைக்கும். எப்படிப் பார்த்தாலும் கோவிலுக்கு போவது, தொழுவது எல்லாமே நம்முடைய நன்மைக்குத் தான்.
அதனால் தான், ஒரு நாளைக்கு ஒரு முறையாவது, ஆலய தரிசனம் செய்யச் சொன்னார்கள் முன்னோர்.
நாட்களை வீணாக்கலாமா?
***

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்!
* ஒருவன் மற்றவனுக்குத் தீங்கு செய்யும் போது, தீங்கு செய்தவன் தண்டனை பெறுவது நியாயம்தான். இருந்தாலும், இவன் தண்டனை பெறுவதால், தீங்கினால் பாதிக்கப்பட்டவனுக்கு என்ன லாபம்? பாதிக்கப்பட்டவன், பாதிக்கப்பட்டவன்தானே?
வஞ்சம் தீர்த்தல், பழிவாங்குதல் என்கிற அளவில் இந்த நியாயம் முடிந்து விடுகிறது. இழந்தவனுக்கு நஷ்ட ஈடு தரப்படுமானால் நியாயம் முழுமை பெறும்.
***

வைரம் ராஜகோபால்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anandhaprasadh - Bangalore,இந்தியா
28-ஜூலை-201306:43:54 IST Report Abuse
anandhaprasadh அருமையான கட்டுரை... அறிவியல் கூற்றுப் படி பார்த்தாலும் கோவிலுக்குப் போவது சிறந்தது. அங்கு வருபவர்களில் சிலர் வம்புக் கதை பேசவும் அரட்டை அடிக்கவும் செய்கிறார்களே தவிர பலர் ஒரு முகத்தோடு இறைவனை தியானிக்க முற்படுகின்றனர். எனவே மனதில் உள்ள கோபம், வெறுப்பு, இன்னபிற எதிர்மறை எண்ணங்கள் இல்லாமல் நேர்மறை எண்ணங்கள் மட்டுமே அங்கு மேலோங்கி இருப்பதால் நாம் அங்கு செல்லும்போது நம்மைச் சுற்றி நேர்மறை அதிர்வு (positive vibration) உண்டாகி நமது மனதுக்கு ஒரு ஆறுதலையும் சக்தியையும் கொடுக்கிறது. தினமும் கோவிலுக்குச் செல்வதால் இதை நான் அனுபவ பூர்வமாக உணர்ந்துள்ளேன். அதிலும் பழங்காலத்தில் கட்டப்பட்ட கோவில்களுக்குச் சென்றால் மிகவும் விசேஷம். ஏனெனில் அவை ஆகம விதிப்படி கட்டப்பட்டிருக்கும். இக்கோயில்கள் விண்ணிலிருந்து வரும் நேர்முக சக்திகளை ஈர்க்க வல்லவை. அனைவரும் முடிந்தபோதெல்லாம் கோவிலுக்குச் சென்று உடலுக்கும் உள்ளத்துக்கும் நன்மை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.