கன்னடர் தந்த கால்வாய்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2013
00:00

ஆக., 3 - ஆடிப்பெருக்கு

தண்ணீர் என்ற சொல்லை, தண்+நீர் என்று பிரிப்பர். "தண்' என்றால், குளுமை. ஆனால், இன்று தண்ணீர் பிரச்னையை சூடாக்கி வைத்துள்ளனர் அரசியல்வாதிகள். தமிழர், கன்னடர் என்ற பிரிவினையை உண்டாக்கி, காவிரியை வறளச் செய்து புண்ணியத்தை கட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், புராண காலத்தில், கன்னடர் ஒருவர், தமிழகத்துக்கு தந்த கால்வாய் இன்றும் மக்களுக்கு பலன் தந்து கொண்டிருக்கிறது.
கேரளத்தை ஆண்ட மன்னர் ஒருவர், தன் நோய் நீங்க கர்நாடக பிரம்மச்சாரி பிராமண இளைஞருக்கு, மாணிக்கங்கள் அடங்கிய பதுமையை (பொம்மை) தானமாக அளித்தார். பதுமை, பிரம்மச்சாரியின் கைக்கு வந்ததும் உயிர் பெற்று, தனக்கு அந்த பிரம்மச்சாரி செய்திருந்த காயத்ரி ஜபத்தின் பலனில் ஒரு பகுதியைக் கேட்டது. அப்படி தராவிட்டால், மன்னருக்கு இருந்த வியாதி உன்னை அண்டும் என எச்சரித்தது. பிரம்மச்சாரியும் பயந்து போய் கொடுத்து விட்டான். கொடுத்த பிறகு, அவனது மனம் கஷ்டப்பட்டது.
வியாதியால் அவதிப்படுவோம் என்ற பயத்தில், சுயநலம் கருதி, தர்மத்துக்கு மாறாக, காயத்ரி மந்திரத்தின் பலனை தானம் செய்து விட்டோமே என, மனம் வருந்தி கலங்கினான். இதற்கு பிராயச்சித்தமாக, தனக்கு கிடைத்த மாணிக்கமணிகளை பொதுநலனுக்கு செலவழிக்க முடிவெடுத்து, பொதிகை மலையில் தங்கியிருந்த அகத்தியரிடம் யோசனை கேட்க முடிவெடுத்தான்.
தன்னைச் சந்திக்க ஒரு இளைஞன் வருகிறான் என்பதை அறிந்த அகத்தியர், அவனுக்கு பல சோதனைகளையும், தடைகளையும் கொடுத்தார். அத்தனையையும் மீறி, அவன் அகத்தியரை அடைந்து, "தன்னிடமுள்ள செல்வத்தைக் கொண்டு, என்ன பணி செய்யலாம்...' என, கேட்டான்.
அகத்தியர் அவனிடம், "மகனே... தண்ணீர் தானமே மிக உயர்ந்தது. நீ இம்மலையில் இருந்து கீழே இறங்கி செல்லும் போது, வழியில் ஒரு பசுவைக் காண்பாய். அதன் வாலைப் பிடித்துக் கொண்டே செல். அது போகும் வழியைக் குறித்துக் கொள். அந்த வழியாக கால்வாய் வெட்டு. பசு படுக்கும் இடங்களில் ஏரி தோண்டு. ஒரு குறிப்பிட்ட இடத்தில் பசு மறைந்து விடும். அங்கே பெரிய ஏரியைத் தோண்டு...' என்றார்.
இதனிடையே, அகத்தியரே பசுவாக மாறி, அவனுக்கு வழி காட்டி ஒரு இடத்தில் மறைந்து விட்டார். அவர் சென்ற பாதை வழியே கால்வாய் தோண்டினான் கன்னட இளைஞன். இன்றுவரை அவ்விளைஞனின் பெயர் தெரியாவிட்டாலும், அவன் கன்னடன் என்பதால், 'கன்னடன் கால்வாய்' என்று பெயர் வந்தது. நாளடைவில் மருவி, "கன்னடியன் கால்வாய்' என மாறி விட்டது. திருநெல்வேலி மாவட்டத்தின் மிக நீண்ட பாசனக்கால்வாய் இது. அது முடியும் இடத்தில், "பிராஞ்சேரி' என்ற ஊர் வந்தது. அங்கே பெரிய குளம் ஒன்றை தோண்டினான்.
கால்வாயில், ஆண்டு முழுவதும் தண்ணீர் வர வேண்டுமே என, கவலைப்பட்டான். அதற்கேற்றாற் போல், மூன்றாண்டுகள் மழை பொழியாமல் கால்வாய் வறண்டு விட்டது. உடனே, அவன் ஒரு விநாயகரை பிரதிஷ்டை செய்து, அவரது உடலில் மிளகை அரைத்து தேய்த்து, அபிஷேகம் செய்து, அப்புனிதநீர் கால்வாய்க்குள் விழும்படி செய்தான். மழை கொட்டித் தீர்த்தது. அந்த விநாயகர், "மிளகு பிள்ளையார்' எனப் பட்டார். இந்தக்கோவில் சேரன்மகாதேவி என்ற ஊரில் இப்போதும் இருக்கிறது.
கன்னடன் நினைத்திருந்தால், தான் பெற்ற செல்வத்தைக் கொண்டு, அவன் ஊருக்கு ஏதாவது பணி செய்திருக்கலாம். அப்படியில்லாமல், அவன் தான் வந்த பகுதிக்கே நன்மை செய்தான்.
ஆனால், இன்றோ, காவிரி நீரை தமிழகத்துக்கு தர மறுக்கின்றனர். இந்த நிலைமை மாறவும், கன்னடன் போன்ற தேசிய உணர்வுள்ள இளைஞர்கள் உருவாகவும் ஆடிப் பெருக்கு நன்னாளில் கடவுளை வேண்டுவோம்.
***

தி. செல்லப்பா

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivacoumar Ramalingam - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
29-ஜூலை-201317:22:11 IST Report Abuse
Sivacoumar Ramalingam வாழ்க வளமுடன். அகத்தியர் காலம் மிக பழமையானது, தமிழ் செழிமை ஆனது இந்த காலத்தில் தான். கன்னடம் பிறந்தது 2000 ஆண்டுகள் தான். எப்படி அகத்தியர் காலத்தில் கன்னடம் வந்தது, தயவு செய்து தவறான செய்திகள் வெளியிட வேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel
Oyvupetravingyani.. - Thane,இந்தியா
29-ஜூலை-201311:44:44 IST Report Abuse
Oyvupetravingyani.. கன்னட தேசத்தில் தமிழ் கொண்டுசென்ற அய்யன்கார்களால் தான் ராஜராம்ன்னா, வைஜயந்திமாலா, ஹேமமாலினி மற்றும் தமிழகத்தின் அம்மா வந்தார்கள்..கன்னடம் - தமிழ் இணைந்தால் சிறக்கும் பாரதம்.
Rate this:
Share this comment
Cancel
Jailani ஜெய்லானி - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
28-ஜூலை-201319:26:12 IST Report Abuse
Jailani ஜெய்லானி இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் அரசியல் வியாதிகள் அந்த காலத்தில் இல்லை , பொது நல விரும்பிகளே இருந்துள்ளார்கள் .
Rate this:
Share this comment
Cancel
Skv - Bangalore,இந்தியா
28-ஜூலை-201315:09:11 IST Report Abuse
Skv ஆமாம் கண்டதேசம் புராதனமானதே . அதே போல தெலுங்குதேசமும் கேரளமும் கூட தமிழ்நாடு என்பது அரசியவாதிகள் வச்சபெய்ரே தங்கள் சுய பெருமைக்கு . மைசூர் சாம்ராஜயம் என்றே வழங்க்கப்பட்டது . காவிரியும் பொங்கி பரவி கடலில் சங்கமித்தாள் . கடலில் சேரும்வீனாகவேண்டாமேன்னுதான் அணைகள் கட்டப்பட்டன , இப்போதைய அரசியல் வாதிகளே நதியா வரவிடாமல் தடை செய்யும் பெரும் உபகாரம் செய்றா. ஒருவனே அண்டா தண்ணிய குடிச்சுடமுடியுமா சிந்தியுங்கள் வயலுக்கு விட்டால் வயறு நிரம்பும் தண்ணீர் தாகம் தீர்க்கும் , பொதுஜனம் ஒத்துமையாகவே இருக்கா ஆனால் இதிலே வரும் அரசியல்வாதியே மக்களை பிரிச்சு வதைக்குறான்
Rate this:
Share this comment
Cancel
saravanakumar - tirupur,இந்தியா
28-ஜூலை-201312:17:52 IST Report Abuse
saravanakumar ப்ளீஸ் கொஞ்சம் நம்புராப்ல எழுதுங்க , ப்ளீஸ் ப்ளீஸ் ...
Rate this:
Share this comment
Cancel
anandhaprasadh - Bangalore,இந்தியா
28-ஜூலை-201307:09:48 IST Report Abuse
anandhaprasadh நல்லவேளை... இதைக் கன்னடத்துல போடலை... போட்ருந்தா கர்னாடக அரசியல்வாதிகள் கன்னடியன் கால்வாய்த் தண்ணிக்காக சண்டை போட்டாலும் போடுவாங்க...
Rate this:
Share this comment
Cancel
Sagacious Sage (SS) - Bangalore,இந்தியா
28-ஜூலை-201306:23:52 IST Report Abuse
Sagacious Sage (SS) இதில் இருந்து அகஸ்தியர் காலத்திலே கன்னடம் இருகின்றது என்பது தெரிகிறது. பிறகு எதற்கு தமிழே உலகின் முதன் மொழி என கொடி பிடிக்கிறோம். நாம் அனைவரும் சகோதரனாக வாழ்வோம் இந்தியன் என்றோ உணர்வோடு
Rate this:
Share this comment
anandhaprasadh - Bangalore,இந்தியா
28-ஜூலை-201307:16:56 IST Report Abuse
anandhaprasadhஐயா சகாசியஸ் அவர்களே.... நானும் என் கொள்ளுப்பாட்டியும் ஒன்றாக வாழ்ந்தோம் என்பதற்காக அவரும் நானும் சம காலத்தவர்கள் என்று கூற முடியுமா? உலகின் முதல் மொழி தமிழ்தான்....
Rate this:
Share this comment
balajiu - Chennai,இந்தியா
29-ஜூலை-201315:52:31 IST Report Abuse
balajiuதமிழ் முதல் மொழி என்று யாரும் சொல்லவில்லை . .. தமிழ் சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றாத தனித்தன்மையுள்ள ஒரு பழமையான மொழி.. இதை யாரும் மறுக்க முடியாது.. இதைதான் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தமிழ் தவிர அணைத்து இந்திய மொழிகளும் சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியவை என்று கூறினார்.. அகத்தியர் காலத்தில் கன்னடம் இருந்தால் தமிழ் தன்னுடைய தனித்தன்மையை இழந்து விடாது.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.