அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2013
00:00

அன்பு சகோதரி —
என்னுடைய 14வது வயது முதல் செக்ஸ் புத்தகம் படிப்பவள். எனக்கு இப்போது வயது 28. "செக்ஸ்' புத்தகம் படிப்பதன் விளைவோ என்னவோ, அடுத்த வீட்டு பெண்ணுடன் நெருங்கிய நட்பு வைத்துக் கொண்டேன். அவள் விருப்பத்துடன் உடல் தொடர்பும் வைத்துக் கொண்டேன்.
எனக்கு மூடு வரும் போது அவள் தராத காரணத்தாலும், என் மீது அன்பு காட்டாததாலும், நான் வேறு இரு பெண்களுடன், அவர்கள் விருப்பத்துடன் தொடர்பு வைத்துக் கொண்டேன்.
மொத்தம் ஐந்து பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டேன். இதிலிருந்து உங்களுக்கு புரியும் நான் எந்த அளவுக்கு, "அந்த' உணர்ச்சிக்கு ஆளானவள் என்று.
என் தோழி, திருமணம் ஆகி, டில்லி சென்று விட்டாள். திருமணத்திற்கு முன் தினம் கூட உறவு வைத்துக் கொண்டோம். அவள் சென்ற பிறகு ஏனோ யாருடனும் நட்பு வைத்துக் கொள்ள தோன்றவில்லை.
சமீபத்தில் எனக்கு திருமணமாகியது. நான் இதுவரை எந்த ஆணையும் நேசிக்கவில்லை; நேசிக்கவும் விரும்பவில்லை. தவறு நடந்து விடுமோ என்ற பயமே காரணம். நான், இரண்டு சகோதரி, ஒரு தம்பியுடன் பிறந்தவள்.
நான் விரும்பியது போல் என் கணவர் அமையவில்லை. செக்ஸில் அதிக நாட்டம் இல்லாதவர். திருமணமான முதல் இரவு அன்று, "ஒரு வருடத்திற்கு பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலாம். ஆனால், உறவு மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்...' என்றேன். நல்ல சுபாவம்; என் மீது அன்பாக இருக்கிறார்.
சில நாட்களுக்கு பிறகுதான் புரிந்தது, அவர் என்னோடு சந்தோஷமாக இருக்க முடியாது; உறவு கொள்ள முடியாது என்பது. என் மாமானாரிடம் மொபைல் போனில் பேசி, வரவழைத்தேன். மருத்துவமனையில் பரிசோதனை செய்தோம். என் கணவருக்கு மருந்து, மாத்திரை கொடுத்தனர். அதையும் சாப்பிட்டார் என் கணவர். ஆனாலும், அவருக்கு என்னுடன் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. என் கணவரை வெறுக்க ஆரம்பித்தேன்.
என் வீட்டின் மாடியில் குடியிருக்கும் ஒரு அக்காவின் கணவர் மரியாதை உள்ளவர். எங்களிடம் அன்பு உள்ளவர். என் கணவரின் வருமானம் குறைவு. எங்களுக்கு தேவை உள்ள போதெல்லாம் உதவி புரிபவர். எனக்கு அவரிடம் மரியாதையே தவிர, ஆசை தோன்றவில்லை.
ஆனால், என் நிலையை அறிந்த அந்த அக்காவின் தங்கை கணவர் என்னை விரும்புவதாகச் சொல்லி, என்னைத் தொட முயற்சி செய்தார். என் கவலையை மறக்க வேலைக்குச் சென்றேன். மொபைல் போனில் கூப்பிட்டு, வற்புறுத்த ஆரம்பித்தார். இதை நான் கணவரிடம் கூறி, வேலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டேன்.
நான், என் சகோதரியிடம் கூறி, இவரை பிரிய நினைத்தேன். ஆனால், தாலி கட்டிய புருஷன் என, "சென்டிமென்ட்' பேசி, என்னை தடுத்து விட்டார். அவருக்கு மருத்துவ செலவு பார்க்கும் நிலையில் நாங்கள் இல்லை. என் பெற்றோரோ, "பிரிந்து வந்து விடு. அஸ்திவாரம் இல்லாத வாழ்க்கை வேண்டாம்...' என்று கூறுகின்றனர்.
என் மூத்த சகோதரியின் குழந்தையை தத்து எடுத்து வளர்த்துக் கொள் என்கின்றனர். என் கணவரோ, "என்னை பிரிந்து போய் விடாதே... கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகி விடும்...' என்கிறார்.
என் வீட்டிற்கு சென்று பெற்றோரை கஷ்டப்படுத்த விரும்பவில்லை. நான் இங்கு இருக்கவும் முடியாமல், என் வீட்டிற்கும் செல்ல முடியாமல் உள்ளேன். என் கணவர் காலை 8:00 மணிக்கு வெளியே சென்றால், இரவு 10:00 மணிக்குதான் திரும்புவார்.
இந்த நிலமையில் மாடியில் குடியிருப்பவர் அடிக்கடி வருகிறார். அவரைப் பார்க்க நேரிட்டால் என்ன காரணமோ என்னையே கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோபம் வருகிறது. அன்று முழுவதும் கோபமாகவே இருப்பேன். இப்போது பொருட்களை எங்கு எங்கு வைத்துள்ளேன் என்ற ஞாபக மறதியும் ஏற்பட்டு உள்ளது.
வாழவும் பிடிக்காமல், சாகவும் பிடிக்காமல் இருக்கிறேன். சந்தோஷம் என்பதே இல்லாமல் பைத்தியம் பிடிக்கும் நிலை வந்து விடுமோ என பயமாக உள்ளது. பல நேரங்களில் என்னையே மறந்து தூங்கி விடுகிறேன்.
எனக்கு ஒரு வழி கூறுங்கள் சகோதரி.

அன்பு சகோதரி—
உன் கடிதம் படித்தேன். உம்... உனக்கு நான் என்ன எழுதுவது?
சின்ன வயசில் செய்த தவறுகளை மறந்து, ஒதுக்கி விடு. சகோதரி, நமது உடம்பு இருக்கிறதே, அது மிக மிக அற்புதமான படைப்பு. வெறும் உடலுறவு மட்டுமே இந்த தேகத்தின் நோக்கமில்லை. சிறு வயதில் இயற்கையின் தூண்டுதலால் கண்ட புத்தகங்களை படித்திருக்கலாம்.
இளமையில் மனசு தகாத, பொருந்தாத இனச் சேர்க்கையில் ஈடுபட்டி ருக்கலாம். மனம் அடங்காத குதிரை... அதை அடக்கி ஓட்டுவதில்தான் நம் சாமர்த்தியம் இருக்கிறது. "சிறு வயதிலிருந்தே எனக்கு, செக்ஸ் உணர்வு அதிகம்' என்று எழுதியிருக்கிறாய்...
உன்னைப் பற்றி நீயே ஒரு தவறான அபிப்ராயம் கொண்டிருக்கிறாய் என எண்ணத் தோன்றுகிறது.
"நான் அப்படித்தான்' என்று நீயே உனக்குள் ஒரு சாக்கடையை சிருஷ்டித்து, அதிலேயே நீந்தி சுகம் காண்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறாய். உன்னைப்போல வருடக் கணக்கில் பெண்களுடனேயே உறவு வைத்துக் கொண்டவர்களுக்கு, முறையான தாம்பத்யமே பிடிக்காமல் போய்விடும். கணவர் என்ன இங்கிதமாக பழகினாலும் பிடிக்காது.
இப்போது அளவுக்கு மீறிய போக நினைப்பால் உன் மூளை மிகவும் களைப்படைந்திருக்கிறது. இந்த சமயத்தில் அனாவசிய எரிச்சலும், அயர்ச்சியும், மறதியும் ஏற்படுவது இயற்கைதான். உன் புலன்களை வழிப்படுத்த யோகா செய்... மனசை ஒருநிலைப்படுத்த தியானம் செய்.
முறையான தியானப் பயிற்சியும், யோகாசனமும் நிச்சயம் மனதை அமைதிப்படுத்தும். இதுவரையில் இழந்த சக்தியை மீட்டுத் தரும். உன் கணவரையும் உன்னுடன் பயிற்சிக்கு அழைத்துப்போ. அவர் காலையில் போனால், இரவு, 10:00 மணிக்குத்தான் வருகிறார் என்கிறாயே... உன்னிடமிருந்து தப்பிக்க அவருக்கும் வேறு வழி தெரியவில்லை என்றே நினைக்கிறேன்.
வேறு ஆண்கள் உன்னிடம் தவறாக நடந்து கொள்ள ஏன் முயற்சிக்கின்றனர் என யோசி. உன் பலவீனம் தெரிய வந்ததால் தான்!
கணவருடன் வேறு இடத்திற்கு குடித்தனம் போ. உலகத்தில் செக்ஸ் தவிர, அற்புதமான பல விஷயங்கள் இருக்கிறது சகோதரி.
சின்னதாய் வீடு. சுற்றிலும், "பளிச்' சென்று தோட்டம். அதில் உன் கையால் நட்டு, நீர் வார்த்து வளர்ந்த ரோஜாவும், மல்லிகையும், உன் காலைச் சுற்றி உன் பின்னாலேயே தாவிக்குதித்து ஓடி வரும் நாய்குட்டிகள், மிருதுவான இசை, ஊதுவத்தி வாசனை, குழந்தைகளின் விளையாட்டு, நல்ல கருத்துள்ள புத்தகங்கள், வாசலில் புள்ளிக்கோலம், உள்ளே உன் கணவருக்காக நீ செய்யும் சமையல், இத்தனையோடு முறையோடு கூடிய அன்புப் பரிமாறல்தான் செக்ஸ்.
ஒரு பட்டின் மிருதுத்தன்மையுடன், சலசலத் தோடும் நீரோடைப்போல புனிதமான ஒன்று அது. நீ இந்தப் பாதையில் போய் பார்; இதன் சுகம் உன் ஆயுசுக்கும் இருக்கும்!
அன்புடன்
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (35)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Iron Cooper - Mangalore,இந்தியா
03-ஆக-201300:28:20 IST Report Abuse
Iron Cooper இப்டிலாம் பிரச்சனை இருக்கா உலகத்துல. தல வலியும் காய்ச்சலும் தனக்கு வந்தாதான் தெரியும் போல
Rate this:
Share this comment
Cancel
rocket raja - tirunelveli,இந்தியா
31-ஜூலை-201312:41:28 IST Report Abuse
rocket raja ஏன் டா பாதிக்கப்பட்ட பொண்ணுக்கு கமெண்ட் கொடுக்க சொன்னா.. அந்த உமா கு எதுக்கு கமெண்ட் கொடுக்குறீங்க லூசுங்கள,போயி வேலையை பாருங்க டா
Rate this:
Share this comment
Cancel
Uma - Connecticut,யூ.எஸ்.ஏ
31-ஜூலை-201307:14:29 IST Report Abuse
Uma செக்ஸ் என்பதை தப்பாவே நம்ம ஜனங்கள் பார்க்கிறாங்க. ஆணுக்கும் பெண்ணுக்கும் உயிரியல் அமைப்பு, ஹார்மோன், இயற்கை அப்படி செக்ஸ் உணர்வை அமைச்சுருக்கு. சின்ன வயசுலேர்ந்து செக்ஸ் பத்தின கற்பனைகளோட/ பெண்களோட தொடர்பு வச்சுட்டு வந்துருக்கிற 28 வயசு பொண்ணு. இன்னும் வாழ்க்கை இருக்கு. வாழ்க்கை பூரா கணவரோட செக்ஸ் இல்லாமலே நல்ல குணங்களை மட்டும் பாருனு சொல்லறது பாவம் தான? தற்காலிக மனசு அமைதிக்கு வேணும்னா தோட்டம் பராமரிக்கிறது, இயற்கைய ரசிக்கிறதுனு இருக்கலாம். இந்த பொண்ணுக்கு செக்ஸ் தேவை. அதுவும் கணவர்/ இல்லைனா முறையான உறவிடம் எதிர்பார்க்கிறார். காம்பிரமைஸ் பண்ணறதை விட டிரீட்மெண்ட் எடுத்து சரியாகலைனா விலகறதும் விவாகரத்தும் நல்லதுனு தோணுது. உண்மையாவே கணவரால எதுவும் செய்ய முடியாதுனா ஏன் சேர்ந்து வாழ்ந்து இவரோட உணர்ச்சிகளை அடக்கிக்கணும்? குழந்தை தத்தெடுக்கிறது எல்லாம் ஓகே. செக்ஸ் வெறியாவும் வேணாம் இல்லாமலும் வேணாம். ஆனா அளவாவாச்சும் வேணுமா இல்லையா?சரி, செக்ஸ் இல்லாம இருக்கேனு சொல்லிட்டு நாளைக்கே காம உணர்வு தோன்றி வேற யார் கூடயாச்சும் உறவு வச்சுக்கிட்டேன்னு இதே பகுதிக்கு வர கூடாது. ஆனா பொண்ணோட செக்ஸ் வச்சுக்கிட்டதால கூட கணவர் தொடறது பிடிக்காம போயிருக்கிற வாய்ப்பும் உண்டு. அதனால இவங்க குடும்பத்துல என்ன உண்டுனு இவங்களுக்கு மட்டும் தான் தெரியும். அதனால தீர்க்க முடியும்னா தீர்க்கிறதும் இல்லையா விலகிடறதும் நல்லது.
Rate this:
Share this comment
Cancel
HoustonRaja - Houston,யூ.எஸ்.ஏ
30-ஜூலை-201322:09:08 IST Report Abuse
HoustonRaja அனைவருக்கும் வணக்கம். இந்த பெண் பெருத்த மன அழுத்தத்தில் (Severe Depression) உள்ளார். இவரின் இயற்கையான தேவைகளை, சகுந்தலா கோபிநாத் உட்பட சமூகத்தில் பலரும் புரிந்துகொள்ளாததே இவரின் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக தோன்றுகிறது. கல்யாணத்திற்கு முன் பல ஆண்கள் செய்வதைத்தான் இந்த பெண் இங்கே செய்துள்ளார். இவர் பாலுணர்வில் அதிக நாட்டம் உள்ள ஓரினச்சேர்கையாலராக தோன்றுகிறார். அதற்கு சகுந்தலா அவர்களிடம் இருந்து எத்தனை வசைகள் (இவையெல்லாம் ஆலோசகர் ஓரினச்சேர்கையாலர்களையும், அவர்களின் தனிப்பட்ட தேவையினையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையிலே இல்லை என்பதையே வருத்தத்துடன் காட்டுகிறது). கடிதத்திலிருந்து திருமணத்திற்குப்பின் இந்த பெண் தனது ஒழுக்கத்தால், அந்த உறவை மீறாமலும், அதனை காப்பற்றவுமே முயல்கிறார் என்று தெரிகிறது. இனி செய்யவேண்டியது - இந்த பெண் சில மன நல மருத்துவர்களிடம் பேசி, அதில் ஒருவரை தேர்ந்தெடுத்து அவரிடம் தன நிலையை விவாத்தித்து ஆலோசனை பெறவேண்டும். அதன் பின், இவரால் ஒரு "ஆணுடனும்" (bisexual) மகிழ்ச்சியாக வயோதிகம்வரை ஆரோகியமான வாழ்க்கை வாழமுடியும் என்ற நம்பிக்கை வந்தால் மட்டுமே - இவர் இந்த திருமண உறவை சரிசெய்வதோ, அல்லது மறுமணம் செய்வதையோ பற்றி யோசிக்கவேண்டும். இவர் சொல்லவதை போல "நான் இதுவரை எந்த ஆணையும் நேசிக்கவில்லை நேசிக்கவும் விரும்பவில்லை..." என்ற நிலையில் மாற்றம் இல்லையேல், இந்த திருமணத்தை ரத்து செய்துவிட்டு "தனி இயலமைதியில்" (Solitude) வாழ பழகிக்கொள்ளவேண்டும். [[ஏனெனில், ஈர்ப்பு (காதல், மோகம், நேசம், பரிவு,மற்றும் பல) இல்லாத உறவில் இருவருக்கும் தோன்றும் எதிர்பார்ப்புகள், பூர்த்தியாகாமல் காலப்போக்கில் ரணங்களையே ஏற்படுத்தும்]]. இது எனக்கு தெரிந்த, இந்திய தற்கால சமூக சூழலுக்கேற்ற, சிக்கலும் பிரச்சனைகளும் குறைவாக தோன்றும் வழி. மேலும், சகுந்தலா கோபிநாத் அவர்கள் சொல்வதைப்போல தினந்தோறும் - தியானம், யோகா, தோட்டக்கலை, ஊதுவத்தி வாசம், நாய்க்குட்டியுடன் விளையாட்டு இவற்றை சேர்த்தால் அமைதியும் தெளிவும் பெற மிகவும் உதவியாக இருக்கும். மற்ற நண்பர்களின் கருத்துகளை வரவேற்கிறேன். நன்றி.
Rate this:
Share this comment
Uma - Connecticut,யூ.எஸ்.ஏ
31-ஜூலை-201307:23:48 IST Report Abuse
Umaஉங்கள் கருத்தையும் மீனவன் அவர்கள் கருத்துக்களையும் ஒத்து கொள்கிறேன்....
Rate this:
Share this comment
Cancel
N.K - bangalore,இந்தியா
30-ஜூலை-201322:08:57 IST Report Abuse
N.K போன வாரம் மனைவி சரி இல்லை என்று கணவர் இந்த வாரம் கணவர் சரி இல்லை என்று மனைவி.சரி கருத்திற்கு வருவோம். முதலில் ஒன்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். செக்ஸ் என்பது தவறான ஒன்று என்ற எண்ணம் மிகவும் தவறானது. எப்படி மனிதனுக்கு பசி தாகம் இருக்கிறதோ அப்படிதான் இதுவும். நம் உடலில் உள்ள hormone காரணத்தால் வரும் ஒரு வகை உணர்ச்சி,.அவளவுதான். அதனால் ஏற்படும் பின் விளைவுகளால் சிறு வயதிலேயே தவறான வழியில் யாரும் சென்று விட கூடாது என்பதற்காக நம் பெரியோர்கள் சமுதாயத்தில் அதை தவறான ஒன்றாக சித்தரித்துள்ளனர். இதெல்லாம் தவிர்பதற்காக தான் செக்ஸ் education நடைமுறையில் உள்ளது. உங்கள் முதல் பிரச்சனை நீங்கள் 14 வயது முதல் அதை பற்றி தெரிந்து கொண்டதால் அந்த வயது முதலே அதை தவறான ஒன்றாக பார்த்துக்கொண்டே இருகின்றீர். முதலில் அதை மாற்றி கொள்ளுங்கள். உங்களின் பழைய வாழ்கையை பற்றி நான் ஏதும் சொல்ல போவதில்லை. இப்போது உங்கள் கணவருடன் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று எண்ணுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் நீங்கள் இதை பற்றி நிறைய தெரிந்திருப்பவர். 10 ஆண்டுகளாவது இதில் ஈடுபாடுடன் இருகின்றீர். அதனால் உங்களது எதிர்பார்ப்புகள் கண்டிப்பாக அதிகமாக இருக்கும். உங்கள் கணவர் நல்லவர் என்று நீங்களே சொல்லி இருகின்றீர். இதனால் அவரை வெறுப்பதோ பிரிவதோ என்ற எண்ணம் மிகவும் தவறு. இப்படி யோசித்து பாருங்கள். உங்களுக்கு செக்ஸ் என்பதே என்னவென்று தெரியவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள். மற்ற விசயங்களில் உங்கள் கணவர் உங்களிடம் அன்புடன் இருந்தால்? நீங்கள் இப்போது புரிந்து கொள்ள வேண்டியது ஒன்று தான். உங்கள் கணவருக்கு உண்மையில் பிரச்சனை இருக்கிறதா இல்லை உங்கள் எதிர்பார்ப்புகளால் அவர் அப்படி இருகின்றார என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களால் தான் பிரச்சனை என்றால் செக்ஸ் என்பதை அடியோடு மறந்து விட்டு கொஞ்ச மாதங்கள் வாழ்கையை வாழ்ந்து பாருங்கள். அவருடன் அன்போடு இருங்கள். அவருக்கும் உங்கள் மீது நம்பிக்கை வரும் நீங்கள் அவரை விட்டு பிரிய மாடீர்கள் என்று. சில மாதங்கள் கழித்து தானாக அதுவே நிகழும்.செக்ஸ் என்னும் உணர்ச்சி இருவரின் அன்பின் வெளிப்பாடு. அதை force பண்ணியெல்லாம் வர வெக்க முடியாது. பின்பும் சரியாக இல்லை என்றால் மருத்துவத்தை நாடுங்கள். இன்றைய மருத்துவத்தில் எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு. அப்படியும் இல்லையா தத்தெடுத்து கொள்ளுங்கள். ஆனால் இதை ஒரு காரணமாக வெய்து கொண்டு அவரை பிரிவேன் என்று மிரட்டாதீர்கள். அதுவே அவரின் நிமதியை அழித்துவிடும். செக்ஸ் எல்லாம் சில காலம் தான். அதையும் தாண்டி கணவன் மனைவி இடத்தில எவளவோ இருக்கிறது. உங்கள் வாழ்வு நன்றாக அமைய வாழ்த்துகள்
Rate this:
Share this comment
Cancel
ksv - chennai,இந்தியா
30-ஜூலை-201312:39:01 IST Report Abuse
ksv உனது மனம் முதலில் நல்லதாக மாறட்டும். பிறகு உனது கணவரின் இயலாமை ஒரு வருட இடைவெளிக்கு பின்பும் அவ்வாறு இருப்பின் தயவு செய்து மறுமணம் செய்து கொள்ளவும்.உனது அண்டை வீட்டான் (குள்ள நரி )உறவு வேண்டாம் சகோதரியே.
Rate this:
Share this comment
Cancel
meenavan - New Jersey,யூ.எஸ்.ஏ
30-ஜூலை-201306:17:32 IST Report Abuse
meenavan புதிரானாலும் புனிதமானாலும் அது புதிதாகும்போது கொஞ்சம் மதியிழக்கிறோம்.கொஞ்சம் மனிதமும் இழக்கிறோம்....14 வயதில் ஏதாவது ஒரு புத்தகத்தில் இந்தப் புத்தகத்தை மறைத்து ஒரு ஓரம் மறைந்து மனம் படபடக்க ஒரு சருகின் உரசலோ ஒரு காலடி ஓசையோ கேட்கும்போது ஒளிந்தும் ஒளித்தும் யார் கண்டபோதும் பொய்யாகச் சிரித்தும்,ரகசியமாய் வாசித்து அந்தப் "பொக்கிஷத்தை" ஓரிடத்தில் ஒளித்துவிட்டு,எங்கேயோ சென்றதாக ஒரு பொய்சொல்லி மீண்டும் அதை வாசிக்க எப்போது வாய்ப்புக்கிடைக்கும் என்று 8 வதும் 9 வதும் படிக்கும்போது பல ஆண்கள் செய்த விஷயங்களைத்தான் நீங்கள் செய்திருக்கிறீர்கள். ஒன்று உண்மை மனம் சிதைந்தது...படிப்பில் கவனம் குறைந்தது.....தவறு என்று மனம் சொன்னது மீண்டும் மறந்தது..மறுபடியும் மறுபடியும்..மறுபடியும் மறந்தது.......இன்றைக்கோ புத்தகங்கள் தேவையில்லை..விரல் நுனிகளின் அசைவுகளில் விரசங்கள் வீடியோக்களாய் விளையாடுகின்றன...வாழ்க்கைகளோ விரல் நுனிகளில் விரயமாகிக் கொண்டிருக்கின்றன... உங்கள் பிரச்னைக்கு வருவோம்.உங்களுக்கு அதீத காமமானாலும் அது உங்களுக்கு முறையாய்க் கிடைக்கவேண்டிய இடத்தில் கிடைக்காவிட்டாலும் , நீங்கள் தடம் மாறவில்லை. அதனால் நீங்கள் உங்களுக்கு அதீத காமம் என்று தவறாக எண்ணியிருக்கிறீர்கள் என்று சொல்லலாமா? அதீத காமம் இருந்த்தாக நீங்கள் கருதியபோதும் ஒரு வரையறை உங்களுக்கு நீங்களே இட்டுக்கொண்டிருந்தீர்கள் என்று சொல்லலாமா? அதாவது ஆணுடனான திருமணத்திற்கு முந்தைய உடலுறவுதான் தவறு பெண்ணுடனனான உறவு தவறல்ல என்பது உங்களின் வரையறையாக இருந்திருக்கிறது...அதற்குள் அதிகம் செல்லாமல் இன்றைய பிரச்னைகளுக்கு தீர்வு காணமுயல்வோம்.மருத்துவரீதியில் ஆலோசனைகள் எடுத்ததாக நீங்கள் கூறியிருப்பதின் அடிப்படையில், உங்களின் கணவருக்கு தாம்பத்ய உறவில் பிரச்னைகள் என்பதை உண்மையாய்க் கருதிதான் இந்த ஆலோசனைகள். நீங்கள் உங்கள் கணவரிடம் இருந்து பிரிவதில் தவறுகளிருப்பதாக எனக்குத் தெரியவில்லை,தாம்பத்ய உறவு உங்களுக்கு முக்கியம் என்று நீங்கள் கூறும் அடிப்படையில்.முயற்சிகள் செய்தீர்கள். பலனில்லை. ஆனால் அடுத்த திருமணம் செய்யுமுன் நிச்சயம் நீங்கள் ஒரு தெரபி - முக்கியமாக செக்ஸ் சம்பந்தமான ஒரு தெரபி எடுத்துக் கொள்வது நல்லது என்று தோன்றுகிறது.ஒரு பெண்ணுடன் உறவு என்பது ஏற்கக்கூடியதா இல்லையா என்பதைவிடவும் தவறா சரியா என்பதைவிடவும், பல கல்லூரிகளிலும் ஏன் பள்ளிகளின் ஆண்கள் விடுதிகளிலும் சக மாணவர்களுடனான உடல் ரீதியிலான உறவு என்பது எப்போதோ மலிந்துவிட்ட ஒன்று. அந்த அடிப்படையில் உங்களது பெண் நண்பியின் தொடர்புகளை எடுத்துக் கொண்டாலும், ஐந்து பேருடனான உறவு(வேறு வேறு கால கட்டங்கள் என்று நம்புகிறேன்) உங்களுக்கு பெண்களின் மீதான உறவுகளின் மீது அதீத விருப்பத்தையும் ஒரு ஆணின் தொடலை சில நேரங்களின் வெறுக்கும் அளவுக்கும் சென்று விடக்கூடாது என்ற காரணத்தால் சொல்கிறேன்.நீங்கள் எழுதியிருக்கும் அடிப்படையில் அப்படியில்லை என்றாலும், ஒரு மன ரீதியில் உங்களுக்கு அந்த ஆலோசனை மிகவும் உதவக்கூடும்.செக்ஸ், அது புதிரானாலும் புனிதமானாலும் கொஞ்சம் புதிதானதுதான்.... கொஞ்சம் புரியாததுதான்......காமத்தைக் கொஞ்சம் பின் தள்ளி,பிற நல்லுணர்வுகளை முன் தள்ளுங்கள்.. நட்புடன் மீனவன்
Rate this:
Share this comment
Cancel
bala - BLR,இந்தியா
30-ஜூலை-201306:00:04 IST Report Abuse
bala Life is about living for your dreams, it is not to live for others or society's dream. You can live a single life and date men. This way your sexual desire will be fullfilled. However the real meaning of life is sharing a love with husband, children etc. Sexual desire is just a starting for achieving a real happiness of the life, which is sharing love with your family. said that you wont be understand the later part of happiness until you fullfill your sexual desire. So finish your sexual desire first then have a donderful family. Good luck
Rate this:
Share this comment
Cancel
bala - BLR,இந்தியா
29-ஜூலை-201321:12:49 IST Report Abuse
bala Life is about living the way you want to be. Life is not about the way the "others" or society want to be. You can live a single life and have a relationship. Many many men india will look farward to this. This may satisfy your sexual desire. In a long run, your own family, own kids, etc will provide the most satisfactory life or "orgasamic way" of living. So try to achive the both.
Rate this:
Share this comment
Cancel
தமிழ் சிங்கம் - chennai,இந்தியா
29-ஜூலை-201321:09:21 IST Report Abuse
தமிழ் சிங்கம் கணவனை கழட்டிவிட்டு, வேறு ஒருவரை மணந்து சந்தோஷமாக வாழ். இரண்டாம் கல்யாணம் இந்த காலத்தில் பெரிய விஷயமில்லை. உனது கணவனுக்கு முடியாது என்று தெரிந்தும் கல்யாணம் செய்தது உனக்கு செய்த மிக பெரிய துரோகம். அதையே அவன் செய்து விட்டான். அவனை கழட்டி விடுவது தப்பே இல்லை. தாம்பத்தியம் இல்லாத வாழ்க்கையில் அன்பு இருக்காது. செயற்கை அன்புதான் இருக்கும். அதனால் தாலி செண்டிமெண்ட் பார்க்காமல் கழட்டி விடு. கள்ள உறவு மிக பெரிய தவறு. அதை மட்டும் ஒருநாளும் ஏற்காதே. அதற்கு கணவனை கழட்டிவிட்டு ரெண்டாம் கல்யாணம் செய்வது சாலச்சிறந்தது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.