ஒவ்வொரு போனிலும் பேஸ்புக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2013
00:00

பேஸ்புக் அனைத்து மொபைல் போன் பயன்படுத்துபவர்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில், ஒவ்வொரு போனிலும் பேஸ்புக் (“Facebook for every phone”) என்ற புதிய அப்ளிகேஷன் ஒன்றை, பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனால், இதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
சென்ற ஆண்டைக் காட்டிலும் 54 சதவீதம் பேர் கூடுதலாக பேஸ்புக் இணைய தளத்தைப் பயன்படுத்தி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் மொபைல் போன்கள் வழியாக, இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்க்ள் எண்ணிக்கை 75 கோடியே 10 லட்சம் பேர். உலக அளவில் பேஸ்புக் வாடிக்கையாளர் எண்ணிக்கை தற்போது 110 கோடி.
ஸ்மார்ட் போன் மட்டுமின்றி, அடிப்படை வசதிகளுடன் கேமரா, வண்ணத்திரை மற்றும் சாதாரண இணைய இணைப்பு கொண்ட மொபைல் போன்கள் அனைத்திலும் பேஸ்புக் தளத்திற்கான இணைப்பை எளிதாக வழங்க பேஸ்புக் முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு வழியாகவே “Facebook for every phone” என்னும் இந்த அப்ளிகேஷன் தரப்படுகிறது. இது இலவசமாகவே, மொபைல் போனில் பதிந்து தரப்படுகிறது. இதில் செய்திகள், மெசஞ்சர் மற்றும் படங்களை அனுப்புதல் ஆகிய வசதிகள் வழங்கப்படுகின்றன. இதனால் அதிக செலவின்றி, மக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்க முடிகிறது.
வளர்ந்து வரும் நாடுகளில், குறிப்பாக, இந்தியா, இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவற்றில், ஸ்மார்ட் போன் வாங்காமலேயே, சாதாரண மொபைல் போன்களில் மக்கள் இந்த வசதிகளை அனுபவிக்க முடிகிறது. இணைய இணைப்பிற்கான வழிகளைக் கொண்ட குறைந்தவிலை மொபைல் போனாக பேஸ்புக் தரும் இந்த அப்ளிகேஷன் கொண்ட மொபைல் போன்கள் இருக்கின்றன.
இந்த அப்ளிகேஷன் புரோகிராமினை இஸ்ரேல் நாட்டில் இயங்கும் மொபைல் சேவை நிறுவனமான ஸ்நாப்டு (Snaptu) வடிவமைத்தது. இந்நிறுவனத்தினை பேஸ்புக் 2011 ஆம் ஆண்டில், விலைக்கு வாங்கியது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X