பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2013
00:00

விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11 தொகுப்பும் வெளியிடப்படுகிறது என்ற செய்தி, மைக்ரோசாப்ட் நிறுவனம், வாடிக்கையாளர்களை முழுமையாகத் திருப்திபடுத்த அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் வகையில் செயல்படுகிறது என்பது உறுதியாகிறது. இந்த மாற்றம் நிச்சயம் மக்கள் மனதில் ஒரு நல்ல தோற்றத்தினை உருவாக்கும்.
எஸ். கே. உமையாள், காரைக்குடி.

விண்டோஸ் 7 குறித்து நீங்கள் வழங்கி இருக்கும் டிப்ஸ்கள் அனைத்தும் புதியனவாகவும், பயனுள்ளவாகவும் உள்ளன. அவசியம் இந்த கட்டுரையைத் தொடரவும். வாரா வாரம் விண்டோஸ் 7 குறித்த குறிப்புகளைத் தரவும்.
ஆர்.கே. சிகாமணி, திருப்பரங்குன்றம.

விண்டோஸ் 7க்குத் தந்தது போல எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் அனைத்து புரோகிராம்களுக்கும் டிப்ஸ்களை வாரந்தோறும் வழங்கவும். கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனை வருக்கும் பயனளிக்கும்.
சி. பாக்யா, புதுச்சேரி.

தகவல் தொழில் நுட்ப சொற்கள் பட்டியலில் நீங்கள் தந்துள்ள சொற்கள் அனைத்தும் முதல் முறையாகக் கேள்விப்படும் சொற்களாக உள்ளன. கம்ப்யூட்டர் குறித்து இது போன்று, அடிக்கடி கேட்காத, அதே சமயம், முக்கிய தொழில் நுட்ப சொற்களுக்கு விளக்கங்கள் மற்றும் எடுத்துக் காட்டுகளுடன் தரவும்.
பேரா எஸ். பால்ராஜ், மதுரை.

சொற்களுக்கு விளக்கம் மட்டுமின்றி, ஒவ்வொன்றுக்கும் படங்களையும் இணைத்தது, விளக்கத்திற்கு கூடுதல் பொருள் தருவதாக அமைந்துள்ளது.
என். கே. ரமணி, கோவை.

விட்ஜெட்டுகளுக்கான விளக்கம் அருமை. இன்னும் சில கூடுதல் எடுத்துக் காட்டுக்களைத் தந்திருக்கலாம். நன்றி.
சி.எஸ். பூரணி சந்திரன், திருப்பூர்.

கூகுள் விஷயத்தில் அதன் வேகம் தான், அதன் வாடிக்கையாளர் கூடுவதற்கான காரணம். இந்த ஒரு விஷயத்தில் மற்ற பிரவுசர்கள் என்றைக்கும் பின் தங்கியே தான் இருக்கும்.
டாக்டர் ஆர். ஷ்யாம் சுந்தர், சென்னை.

வெகுகாலமாக பேஸ்புக்கில் சில நண்பர்களை விட்டு விலக எண்ணினேன். வழி தெரியாமல் இருந்தேன். மற்றவர்களிடம் கேட்கவும் மனதில்லை. சரியான டிப்ஸ் கொடுத்து உதவியமைக்கு நன்றி.
கா.நா. தேவக் குமார், சிதம்பரம்.

விண்டோஸ் 8.1. சோதனைப் பதிப்பாக இருக்கையில், அது குறித்த தகவல்களைத் தெளிவாகத் தந்திருக்கிறீர்கள். வாசகர்களைத் தயார் செய்திருக்கிறீர்கள். மேலும், பயன்களை எளிமையான மொழியில் விளக்கியிருக்கிறீர் கள். மிக்க நன்றி. மேலும் தொடர்ந்து இந்த சிஸ்டம் குறித்த தகவல்களை எதிர்பார்க்கிறேன்.
என். மாதங்கி, ஊட்டி.

ரீட் ஒன்லி கோப்புகளைத் தயார் செய்திடும் வகை பற்றிய குறிப்பு படிப்படியான விளக்கத்துடன் உள்ளது. நல்ல நடையில் தரப்பட்டுள்ளது. நன்றி.
என். ஷண்முகம், கோவை.

அரசு தொடர்ந்து கிராமப் பகுதிகளில் மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் பயன்பாட்டினைப் பரப்ப பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவற்றை மக்களுக்குக் கொண்டு செல்ல, உங்களைப் போன்ற பத்திரிக்கைகள் முயற்சி எடுக்க வேண்டும். அந்த வகையில் நல்ல உபயோகமான செய்திகளைத் தந்து வருகிறீர்கள்.
ஆர். ஜமால் உசேன். காரைக்குடி.

வாரத்திற்கு மூன்று மாடல் போன்களை அறிமுகப்படுத்தி, சாம்சங் நிறுவனம் நன்றாகக் கால் ஊன்றி விட்டது. இனி இதனை யாரும் அசைக்க முடியாது.
எஸ்.கே. உலகநாதன், மதுரை.

விண்டோஸ் 7 தொகுப்பில், டெஸ்க்டாப் ஐகான் கிளீன் செய்வது குறித்த கேள்வி பதில் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. இதே போல, விண்டோஸ் 7 எந்த வசதிகளில் எல்லாம் மாறுதலைக் கொண்டுள்ளது எனப் பட்டியலிட்டு ஒரு கட்டுரையாகத் தரவும்.
கா. சந்தியா கணேஷ், திருச்சி.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X