கேள்வி பதில்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2013
00:00

கேள்வி: கூகுள் நிறுவனம் இணையத்தில் பலவகை சேவைகளைத் தந்து வருகிறது. இதன் சேவைகளைப் போன்று அல்லது இதனை மிஞ்சும் வகையில் வேறு நிறுவனங்களின் சேவைகள் உள்ளனவா?
எஸ். எமிலி கிறிஸ்டோபர், சென்னை.
பதில்:
நல்ல கேள்வி. பேஸ்புக், நெட்பிளிக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற இணைய சேவை வழங்கும் நிறுவனங்களைக் கேள்விப் பட்டவுடன் இந்த சந்தேகம் உங்களுக்கு வந்திருக்கலாம். கூகுள் அதன் தேடுதளச் சேவை மட்டுமின்றி, யு ட்யூப், மேப்ஸ் எனப் பல சேவைகளை வழங்கி, வாழ்க்கையில் எந்த நிலையில் ஒருவர் இருந்தாலும், அவர் கூகுளின் சேவையைப் பயன்படுத்தாமல் இருக்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பல இடங்களில் நிறுவப்பட்டு இயங்கி வரும் ஆயிரக்கணக்கான கூகுள் சர்வர்களுடன், இணையத்தில் உலா வரும் ஒருவர் இணைக்கப்பட்டு இருப்பார்.
அண்மையில் அமெரிக்காவில் இதுகுறித்து ஒரு சர்வே எடுக்கப்பட்டது. அதில் , இணையத்தில் இயங்குவோரில், 25 சதவீதம் பேர் கூகுளின் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர் என இதன் முடிவு காட்டியது. பிற இணைய சேவை நிறுவனங்களின் மொத்த வாடிக்கயாளர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், கூகுள் நிறுவனத்தின் சேவைகளைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம் என்று தெரியவந்துள்ளது. குறிப்பாக, கடந்த மூன்று ஆண்டுகளில், இணையத்தில், கூகுள் வெகு வேகமாக முன்னேறிவிட்டது என்றே சொல்ல வேண்டும். இணையப் பயன்பாட்டில், 6 சதவீத வேலைகள் கூகுள் தரும் சேவை வழியேதான் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்குக் காரணம், மக்களின் தேவைகளை ஆய்வு செய்து, அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, கூகுள் தன் சேவைத்தளங்களை வடிவமைப்பதே ஆகும். இணையம் வழி சேவை செய்வதில், மக்கள் இதனைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும்.

கேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டம் பயன்படுத்துகிறேன். இதில் ஐகான் மற்றும் நோட்டிபிகேஷன்களை, பெர்சனலைஸ் பிரிவிலிருந்து நீக்குவது எப்படி? இவை எப்படி இங்கு இடம் பெறுகின்றன? இவற்றை இங்கு இடம் பெறாமல் செய்திட என்ன செய்திட வேண்டும்?
ஆர். தங்கராஜ், சிவகாசி.
பதில்:
விண்டோஸ் 7 சிஸ்டத்தில், நோட்டி பிகேஷன் ஏரியா செயல்படும் விதம் குறித்த, தவறான கருத்து, கம்ப்யூட்டர் பயன்படுத்து வோரிடையே உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனமும் தன் இணைய தளத்தில் இது குறித்து அவ்வளவாக விளக்கம் தரவில்லை. நோட்டிபிகேஷன் ஏரியாவில், உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கும் புரோகிராம்களின் ஐகான்கள் காட்டப்படுகின்றன. எனவே, இந்த ஏரியாவில், குறிப்பிட்ட ஐகான் இடம் பெறக் கூடாது என எண்ணினால், அந்த புரோகிராமினை நிறுத்த வேண்டும். பின்னர், தொடர்ந்து அது இடம் பெறக் கூடாது என எண்ணினால், ஸ்டார்ட் அப் புரோகிராமில் இருந்து அந்த புரோகிராமினை நீக்க வேண்டும். ஐகான் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் இதனை மூடலாம். மூடுவதற்கான குளோஸ் ஆப்ஷன் தரப்படவில்லை என்றால், கண்ட்ரோல் + ஆல்ட்+ டெல் (“Ctrl,” “Alt,” and “Delete”) கீகளை அழுத்தி, “Processes” டேப் அழுத்தி, கிடைக்கும் விண்டோவில் இயங்கும் புரோகிராம்களின் பட்டியலைப் பெற்று, அதில் குறிப்பிட்ட புரோகிராமினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர், “End Process” பட்டனை அழுத்தி, புரோகிராம் செயல்படுவதனை நிறுத்தலாம்.

கேள்வி: நான் ஆண்ட்ராய்ட் டேப்ளட் பிசி பயன்படுத்துகிறேன். ஆண்ட்ராய்ட் மிகச் சிறந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் என நீங்கள் உட்பட பலரும் எழுதுகிறீர்கள். அப்படியானால், ஜாவாவில் இயங்கும் என் விளையாட்டுகள் ஏன் இதில் இயங்க மறுக்கின்றன? இதற்கான ஜாவா டவுண்லோட் செய்திட, கூகுள் காட்டிய தளங்களுக்குச் சென்றேன். அப்படி ஒன்று இல்லவே இல்லை. நான் என் டேப்ளட் பிசியில் எனக்குப் பிடித்த கேம்ஸ் விளையாட என்ன செய்திட வேண்டும்?
கே. ஜார்ஜ், சென்னை.
பதில்:
உங்களின் நீண்ட கடிதத்தில், ஜாவா வேண்டும் ஆவலும், ஆண்ட்ராய்ட் இதற்கு துணை புரியவில்லையே என்ற ஆதங்கமும் தெரிகிறது. படிப்படியாக உங்கள் கேள்விகளைப் பார்ப்போம். முதலில் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள் அனைத்தும் ஜாவாவில் தான் எழுதப்படுகின்றன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். எனவே, ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் ஒரு பகுதியாக ஜாவா உள்ளது. உங்களுடைய பிரச்னைக்கு இரண்டு வகை தீர்வுகள் கிடைக்கலாம். “கிடைக்கலாம்” என்று சொல்வதற்குக் காரணம், தீர்வுகள் நீங்கள் விரும்பும் கேம்ஸ் எப்படி வடிவமைக்கப் பட்டுள்ளன என்பதைப் பொறுத்தே அமையும் என்பதால். உங்களுடைய கேம், பெர்சனல் கம்ப்யூட்டரில் விளையாடுவதற்கு வடிவமைக்கப்பட்டிருக்கலாம். டேப்ளட் பிசியில் அதனை விளையாட தனி பதிப்பு போட்டிருக்கலாம். குறிப்பிட்ட கேம்ஸ் உங்களுக்கு அதிகம் பிடிக்கும் என்றால், கூகுள் பிளே ஸ்டோர் சென்று, அதனுடைய ஆண்ட்ராய்ட் பதிப்பு உள்ளதா எனத் தேடிப் பார்த்து டவுண்லோட் செய்து பார்க்கவும்.
அடுத்ததாக, உங்களுடைய டேப்ளட் பிசியில் ஜாவா ஸ்கிரிப்ட் இயங்கும் வகையில் செட் செய்யப்பட்டுள்ளதா எனப் பார்க்கவும். இல்லை எனில், அதனை இயக்கிப் பின்னர் விளையாண்டு பார்க்கவும். பின்னரும் விளையாட இயலவில்லை எனில், உங்களுடைய கேம் நிச்சயமாக மொபைல் சாதனங்களில் விளையாடும் வகையில் வடிவமைக்கப்பட வில்லை என்றே பொருள். இன்றைக்கு ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பயன்பாடு தொடர்ந்து பெருகி வருவதால், நிச்சயம் இந்த கேமின் ஆண்ட்ராய்ட் பதிப்பும் வெளியிடப்பட்டிருக்கும்.அதனை டவுண்லோட் செய்து விளையாடவும்.

கேள்வி: நான் அடிக்கடி வேர்ட் டாகுமெண்ட்டில் டேபிள்களைத் தயார் செய்கிறேன். இந்த தகவல்களைக் கொண்டு, அதிக சிரமம் இன்றி, சார்ட் தயார் செய்திட முடியுமா? நான் வேர்ட் 2003 பயன்படுத்துகிறேன்.
என். சங்கர், திண்டுக்கல்.
பதில்:
டேபிளில் உள்ள டேட்டாவினை அடிப்படையாகக் கொண்டு, சார்ட்டினைத் தயார் செய்திடலாம். டேட்டா எண்களில் நீங்கள் அமைத்திருக்கிறீர்கள் அல்லவா. அதனால் இது மிகவும் எளிதுதான்.
1. முதலில் சம்பந்தப்பட்ட டேபிளைத் தேர்ந்தெடுக்கவும்.
2. இன்ஸெர்ட் (Insert) மெனு செல்லவும். இதில் ஆப்ஜெக்ட் (Object) என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் ஆப்ஜெக்ட் டயலாக் பாக்ஸைக் காட்டும்.
3. இதில் ஆப்ஜெக்ட் டைப் (Object Types) என்பதில் ஒரு பட்டியல் காட்டப்படும். இந்த பட்டியலில் Microsoft Graph Chart என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். சில வேர்ட் தொகுப்புகளில் இது அந்த வேர்ட் தொகுப்பின் குறிப்பிட்ட பெயருடன் இருக்கலாம். எடுத்துக்காட்டாக Microsoft Graph 2000 Chart என இருக்கலாம்.
4. ஓகே கிளிக் செய்தவுடன் சார்ட் கிடைக்கும்.
5. இந்த சார்ட்டினை உங்கள் விருப்பத்திற்கேற்றபடி மாற்றிக் கொள்ளலாம்.
6. சார்ட்டுக்கு வெளியே கர்சரைக் கொண்டு வந்து தொடர்ந்து டாகுமெண்ட்டில் பணியாற்றலாம்.

கேள்வி: நான் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறேன். என் மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த பல சந்தேகங்களுக்கு விளக்கம் தருவதனை வழக்கமாகக் கொண்டுள்ளேன். இதற்கான இணைய தளம் உள்ளதா? என் பணியை நான் எளிதாக முடிக்க முடியும் வகையில் இணைய தளம் ஒன்றைச் சுட்டிக் காட்டவும்.
எஸ். ரோஸ்லின் குமாரி, புதுச்சேரி.
பதில்
: நல்ல முயற்சி. இணையத்தில் இல்லாதது எதுவும் இல்லை. உங்களுக்கும் உங்கள் மாணவர்களுக்குமான இந்த ஆர்வத்தின் அடிப்படையில் இணையத்தில் தேடினேன். www.sciencedaily.com என்ற முகவரியில் உள்ள இணையதளம் உங்களுக்கு உதவிடும் என்று தெரிகிறது. இதில் அனைத்து அறிவியல் கேள்விகளுக்குமான விடைகள் தரப்பட்டுள்ளன. அந்தக் காலத்து அறிவியல் கோட்பாடுகள் முதல் இன்றைய நவீன அறிவியல் பாடங்கள் வரை காணப்படுகின்றன. குறிப்பெடுத்துச் சென்று கற்றுக் கொடுங்கள். அல்லது லேப்டாப் கம்ப்யூட்டர் வைத்திருந்தால், அவற்றில் பதிந்து எடுத்துச் சென்று காட்டலாம்.

கேள்வி: ASHX என்ற துணைப் பெயருடன் ஒரு பைல் டவுண்லோட் செய்து வைத்துள்ளேன். இதனை எந்த புரோகிராமில் திறப்பது எனத் தெரியவில்லை. எத்தகைய பைல் என்பதுவும் புரியவில்லை. வழி காட்டவும்.
ஏ. இன்பராஜ் தேவன், காரைக்கால்.
பதில்
: ASHX என்ற துணைப் பெயருடன் உள்ள பைல்ஒரு ASP.NET பைல் ஆகும். இது ஒரு Web Handler பைல். இந்த பைல் மீது டபுள் கிளிக் செய்தால், கம்ப்யூட்டரில் உள்ள சிஸ்டம், இதனை எந்த அப்ளிகேஷன் புரோகிராம் கொண்டு இயக்க வேண்டும் என்பதனைப் புரிந்து அதில் இந்த பைலை இயக்கும். அப்படி இயக்கப் படவில்லை என்றால், அதற்கான புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரில் இல்லை என்று பொருள். அடோப் ட்ரீம் வீவர் சி.எஸ். 6 மற்றும் தொடர்ந்து வந்த புரோகிராம்கள் இதனைத் திறக்கலாம். இதனைத் திறந்து, மொத்தமாகத் தேர்ந்தெடுத்து, வேர்ட் பைலில் பேஸ்ட் செய்து, டாகுமெண்ட் பைலாக இதனைப் படிக்கலாம், பயன்படுத்தலாம். அல்லது இணையத்தில், இந்த பார்மட்டினை மாற்றித் தரும் இலவா தளங்கள் உள்ளன. அவற்றின் உதவி கொண்டு, பார்மட்டை உங்கள் கம்ப்யூட்டருக்கு ஏற்றபடி மாற்றிப் பயன்படுத்தவும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X