பாரதியின் கண்ணம்மாவுக்கு அபிநயித்த வித்யா
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2013
00:00

சென்னை பிரம்மகான சபையில், நல்லியின் ஆடி நாட்டிய விழா, நடைபெற்று வருகிறது. இளம் நடன கலைஞர்கள் மற்றும் வளரும் நடனக் கலைஞர்களுக்கு என இருபிரிவுகளாக ஒதுக்கி பல புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பத்மஸ்ரீ கே.எல்.தண்டபாணி பிள்ளையின் மூத்த சிஷ்யையான கலைமாமணி சூர்யா சந்தானத்தின் மாணக்கி, வித்யாவின் நிகழ்ச்சி இதில் நடைபெற்றது.
கலைமாமணி சூர்யா, கடந்த 40 வருடங்களாக நடனத் துறையில் தனது சேவையை சிறந்த ஆசிரியராக இருந்து செயல்பட்டு வருகிறார். பல நடனக் கலைஞர்களை உருவாக்கியவர். மேலும், நடன சிரோன்மணி நிருத்யகலாவாணி போன்ற பல பட்டங்களை பெற்றவர். இப்போதுள்ள பல நடன நிகழ்ச்சிகள், "மார்கம்' என்பது மாறிப்போய், நீர்த்துப் போய் அது எங்கிருக்கிறது என்று தேட வேண்டிய நிலை. சிலர் நடனம் மற்றும் நடன அமைப்பில் என்ன செய்கிறார்கள் என்பது நமக்கு புரியாமல் பார்த்து ரசிக்க வேண்டிய நிலை. மேலும், எந்த பாடலுக்கு வேண்டுமானாலும் நடனமாடலாம் என்ற நிலையும் வந்து விட்டது. உதாரணத்திற்கு: சலங்கை பூஜை வைபவத்தில், "வரவீணா'கீதத்திற்கும், ராரவேணுகோபால ஸ்வரஜ்திற்கு கூட நடனம் அமைத்து ஆடச்செய்வது தான் இதில் உச்கட்டம்.
பழுத்த அனுபவம் பெற்ற ஆசிரியர் சூர்யாவின் மாணாக்கி வித்யா, தனது முதல் நடன நிகழ்ச்சியை ஸ்ரீரஞ்சனி புஷ்பாஞ்சலியுடன் துவக்கினார். அதன் தொடர்ச்சியாக, "ஏறு மயில் ஏறி' அருணகிரிநாதரின் திருப்புகழை விருத்தமாக பாடி, அதை அப்படியே சுப்ரமணிய கவுத்துவத்தில், ஷண்முக ப்ரியா ராகத்தில் அமைத்துள்ளதற்கு, பஞ்சநடையில் சிறப்பான காலப்ரமாணத்தில் அடவுகளை அமைத்திருந்தார் குரு சூர்யா. அதை நன்கு புரிந்துகொண்டு ஆடினார்.
அடுத்து பிரமாதமான வர்ணத்தில் கே.என். டி.,யின், "வேலனை வரச்சொல்லடி' பைரவி ராகத்தில் அமைந்த வர்ணம். பல்லவியில் வேலனை வரச்சொல்லடி என்ற வரிகளைத் தொடர்ந்து முதலில் களமிறங்கியது த்ரிகால ஜதி, மிக கம்பீரமாக சிறப்புடன் ஆடி ரசிகர்களின் கைத்தட்டலை பெற்றார். இதன் சஞ்சாரியில் வள்ளி முருகன் காதல் படலம் முதல் திருக்கல்யாணம் வரை கதைக்கேற்ப ஆடினார்.
பஞ்சநடை ஜதியும், அதைத் தொடர்ந்து பாடல் வரிகளும், நான்காவது ஜதி மற்றும் முக்தாயிஸ்வரத்தின் அழகிய சாகித்யமான ஆறுமுகம் காட்டி மறைந்து விட்டானடி, அறுபடை வீட்டில் அமர்ந்திருப்பானடி, மாறுபடு சூரரை வதைத்து கூறும் அடியவரை காத்திடும் வேலனின் புகழை நெக்குருக ஆடினார் வித்யா.
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா பாடலில், தனது கனவு குழந்தை கண்ணம்மாவை தன் கவிதையினால் உயிர் கொடுத்து, சீராட்டி, பாலூட்டி வளர்த்த, தன் குரு சூர்யா சொல்லிக் கொடுத்ததை உள்வாங்கி ஆடினார் வித்யா. முடிவில் கண்ணம்மாவை தூங்க வைத்து, அவள் தூங்கிக் கொண்டிருக்கிறாள் சத்தம் போடாதீர்கள் என்று அரங்கில் இருந்தவர்களை வாயை மூடச்சொல்லி விட்டார் வித்யா. ரசிகர்கள் கை தட்டினால் குழந்தை எழுந்துவிடும் என்பதால் அதை உணர்ந்து லேசான சப்தத்தை அடுத்து, கே.என்.டி.,யின் மிக சிறப்பான தசாவதார பாடல் பரந்தாமனே சரணம்; இதில் மத்யஸ்ம் முதல் கல்கி வரை மிக அழகாக விவரித்து ஆடினார்.
நிறைவாக காபி ராக தில்லானா நடனடத்திற்கு பக்கபலமாக நடன அமைப்பு, நட்டுவாங்கம் குரு சூர்யா சந்தானம் குரலில் ப்ரியா, மிருதங்கத்தில் சிவசங்கர ரெட்டி, வயலின் சடகோபன் ஆகியோர் அமைத்து, மிக அழகான நடன நிகழ்ச்சியை வித்யா நமக்களிக்க உதவினர்.
-ரசிகப்ரியா

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.