நாராயணதீர்த்தரின் மனம் கவர்ந்த இன்னிசை
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2013
00:00

கலியுகத்தில், மானிடர்கள் சுலபமாக இறைவனை அடையும் மார்க்கம் நாம சங்கீர்த்தனம் ஆகும். இந்த கொள்கையை உறுதிப்படுத்த, அவதரித்த பல மகான்களுள், சங்கீர்த்தன மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும், பூஜ்ய ஸ்ரீ போதேந்திரர், ஸ்ரீதர அய்யர்வாள், ஸ்ரீ சத்குரு சுவாமிகள் ஆகிய மகான்கள், நாம சங்கீர்த்தன சித்தாந்தத்தை, இவ்வுலகில் நிலை நாட்டி பெருமை சேர்த்தனர்.
இந்த பெருமை வாய்ந்த மகான்களின் வரிசையில், ஸ்ரீ கிருஷ்ணருடைய எல்லையில்லாத லீலைகளை, மனதார அனுபவித்து, ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி என்ற தரங்கங்கள் மூலம், புகழ் பரப்பியவர் நாராயண தீர்த்த சுவாமிகள். இவர், ஆந்திராவில் பிறந்தாலும், தஞ்சைக்கு வந்து தங்கியிருந்த போது, சூலை நோயினால் வருந்தி, பின் வரகூர் திருத்தலத்தில், இந்த பாடல்கள் மூலம் நோய் தீர்ந்து, இறைவனால் அருள் பெற்ற வரலாறு உள்ளது.
ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி எனப்படும் இந்த நாட்டிய - இசைக் காவியத்தில், ஸ்ரீ கிருஷ்ணருடைய திருமணம் முதல் துவக்கி, பாகவதத்தின் முழுசாரத்தையும் படம் பிடிக்கிறது . இந்த இசை - நாட்டிய காவிய தரங்கங்களை, குச்சுப்புடி மற்றும் பரதநாட்டியக் கலைஞர்களால், ஆடப்பட்டு, பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
பல காலமாக, ஒவ்வொரு ஆண்டும் திருப்பூந்துருத்தி ஸ்ரீ நாராயண தீர்த்த சுவாமிகள் அறக்கட்டளை, மிகவும் அக்கறையுடன் கோலாகலமாக நடத்தி வருகிறது. இந்த அறக்கட்டளை, இரு தினங்களாக வகைபடுத்தி, முதல் நாள் மயிலை பாரதீய வித்யா பவனுடனும், இரண்டாவது நாள், நாரத கனகசபா டிரஸ்ட் மற்றும் சரசுவதி வாக்கேயக்கார டிரஸ்ட்டுடனும் இணைந்து விமரிசையாக விழா நடத்தப்பட்டது.
வேதபாராயணம் - ஆஞ்சநேயஉற்சவம் இவற்றுடன், பிரபல நடனமணி லீலா சாம்சன் நாட்டிய நிகழ்ச்சி, மாம்பலம் சகோதரிகள், சின்மயா சகோதரிகள் -ராகம் சகோதரிகள், நிறைவாக அர்ச்சனா ஆர்த்தி சகோதரிகள், இப்படி சகோதரிகளாக பாடிய, இந்த நிகழ்ச்சிகள் திட்டம் வெகு சிறப்பாக அமைந்து ரசிகர்களை மகிழ்வித்தன. இவ்விழாவில் அமைந்த இரு இசை நிகழ்ச்சிகள்:
மாம்பலம் சகோதரிகள், சித்ரா விஜயலட்சுமி இசை இரட்டையர்கள், பி.வி.ராமன் லட்சுமணனிடம் பயிற்சி பெற்றவர்கள்.
நிகழ்ச்சியின் ஆரம்பமே, நாட்டை ராகத்தில் சர்வ ஞானக்ரிய என்னும் சுலோக வித்தத்துடன், பளிச்சென்று துவக்கிய சகோதரிகள் தொடர்ந்து பாடிய, ஜெய ஜெய ரமாநாத (கண்டசாடி) தரங்கம் மற்றும் ஸ்வரங்கள் மனதை கவர்ந்தன.
மிகவும் சிறப்பாக இருந்தது, நிகழ்ச்சி பாடல் தேர்வு. குறிப்பாக, ஸ்ரீ நாராயண தீர்த்தருடைய, பிருந்தாவன மதுனா (முகாரி) (ஆதி) சுகமாக கிறங்க வைக்கும், காலப்பிரமாணத்தில் அமைந்த மாதவ மாமவ (நீலாம்பரி) தசாவதாரத்தின், சிறப்பை விளக்கும் மத்ஸ்ய - கூர்ம (மாணவி - மிச்ரசாபு) பிரதானமாக, கையாண்ட பாலகோபால (சாவேரி - மிச்ர சாபு) இதன் நிரவல் - ஸ்வர விரிவு - குறைப்புக்குள், படு சொகுசாக அமைந்து, மனம் கவர்ந்தது. நிகழ்ச்சியில், சித்ரா பாடிய முகாரி ராகமும், விஜயலட்சுமியின் பிரதான சாவேரி ராக ஆலாபனையும், சிறப்பாக அமைந்திருந்தன.
மாம்பலம் சகோதரிகளுடைய, மற்றொரு சகோதரியான டாக்டர் ஹேமலதா, வயலினில் அருமையாக அனுசரணை ததும்ப வாசித்தார். சகோதரிகளுடைய தந்தை, பிரபல மூத்த கஞ்சிரா வித்வான் கே.எஸ்.ரங்காச்சாரியும்,இதில் பங்கேற்றது சிறப்பாகும்.
மேலக்காவேரி, பாலாஜியின் அனுபவம் மிக்க (லயம்) மிருதங்க வாசிப்பு கேட்க சுகமாக இருந்தது.
அர்ச்சனா -ஆர்த்தி: இந்த ஜயந்தி விழாவின், நிறைவாக பாடிய அர்ச்சனா - ஆர்த்தி சகோதரிகளின் இசை நிகழ்ச்சி, கேட்க மிகவும் இனிமையாக இருந்தது. இசை பாரம்பரியத்தில் வந்தவர்கள் இவர்கள். புகழ் வாய்ந்த வாக்கேயக்காரர். காயகசிகாமணி அரிகேசநல்லூர் முத்தையா பாகவதருடைய வம்சத்தில் பிறந்தவர்கள் இவர்கள் என்பது மட்டுமின்றி, உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி, சங்கீத கலாநிதி டி.எல்.வெங்கட்ராம அய்யருடைய கொள்ளு பேத்திகள்.
குறிப்பாக, தரங்கங்களை பக்திச் சுவை ததும்ப பாடியது, மனம் கவர்ந்தது. இந்த பக்தி மட்டுமே, இறைவனை அடையச் செய்யும் மார்க்கம். குரலில், இந்த பக்தி வந்தாலே போதும், இறைவன் அங்கு நேரில் வருவான் ஆர்த்தி பளிச்சென்று பாடிய ஆனந்தபைரவி விருத்தமும், தொடர்ந்து இருவரும் பாடிய நந்த நந்தன (ஆனந்த பைரவி - ஆதி- பரம புருஷம் (கேதார கவுளை -ஆதி காருண்ய (கமாங்-மிச்ர சாபு) பரம காருண்ய (ராகமாலிகை - ஆதி) தேவ தேவம் (சிந்து பைரவி - மிச்ர சாபு) இவற்றுடன், ஆர்த்தி பாடிய வராளி ராக ஆலாபனையும், தொடர்ந்த ஸ்ரீ நிலயம் சகியும், கேட்க மிகச்சிறப்பாக இருந்தன.
இருவரும் கையாண்ட, பிரதான கரஹரப்ரியாவிலும், ஒருவருக்கொருவர் சளைக்காமல், சிறந்த கற்பனைகளுடன ராக விரிவு செய்த விதமும் அருமை. இந்த சகோதரிகள் இருவருமே, எஸ்.ஆர்.எம்., கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பு படிப்பவர்கள். இளம் பக்கவாத்திய கூட்டணியாக, இளம் கே.ஜே.திலீப், வேகமாக வளர்ந்து வரும் வயலினிசைக்கலைஞர் திறமையுடன் வாசித்தார்.குறிப்பாக, மிருதங்கத்தில் வாசித்த பரத்வாஜை எவ்வளவு பாராட்டினாலும் தகும். சாயி சுப்ரமண்யம் மோர்சிங், நல்ல வாசிப்பு.
- மாளவிகா

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.