மைக்ரோமேக்ஸ் க்யூ 7
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 செப்
2010
00:00

பயன்படுத்த மிக வசதியான வடிவமைப்பு, எளிதாக வழி காட்டும் பயனாளர் இடைமுகத் தொகுப்பு, ஆடியோ மற்றும் வீடீயோ பைல் இயக்கத் திறன், துல்லியமான இசை வெளிப்பாடு, எளிதாக அமைத்துக் கொள்ளும் வகையில் வை–பி இணைப்பு, கேமரா எனப் பல நல்ல அம்சங்களுடன் வந்துள்ளது இரண்டு சிம் இயக்கம் கொண்ட மைக்ரோமேக்ஸ் க்யூ7.  கீ பேடின் பின்புற வெளிச்சம் சில வேளைகளில் சூரிய வெளிச்சத்தில் கீ பேட் பயன் படுத்துவதற்கு இடையூறாக உள்ளது. 100 கிராம் எடையில், நல்ல தெளிவான சதுர வடிவிலான  பார் வகை போனாக இது உரு பெற்றுள்ளது. முந்தைய மைக்ரோமேக்ஸ் போன்களைக் காட்டிலும் இதன் திரை வெளிப்பாடு தெளிவாகவும்,  பளிச் என்றும் உள்ளது. மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட், பவர் ஸ்லாட், யு.எஸ்.பி. போர்ட் ஆகியவை பயன்படுத்த எளிதான இடத்தில் அமைந்துள்ளன.  இதில் உள்ள ஜாவா ஆப்ப ரேட்டிங் சிஸ்டம், பயன் படுத்து வதனையும், மெனு மாற்றத்தினையும் மிக மிக எளிமையுடன் தருகிறது. ஆடியோ மற்றும் வீடியோ மிகவும் துல்லியமான ஒலியுடனும், காட்சியுடனும் அமைந்துள்ளது.   எப்.எம். ரேடியோ பயன்பாடும் இதே சிறப்புடன் இருக்கிறது. ஆனால் பதிவு செய்யக் கூடிய வசதி தரப்படாதது சற்று ஏமாற்றமே.  வீடியோவைப் பொறுத்தவரை எம்பி4, 3ஜிபி, ஏ.வி.ஐ. மற்றும் எப்.எல்.வி பார்மட்டுகளைக் கையாள்கிறது. இரண்டு அடி சுற்றளவில் ஏற்படும் ஒலியினை மிகத் தெளிவாகப் பதிவு செய்கிறது. வழக்கமான அலாரம், உலக கடிகாரம், செயல் மேற்கொள்ள நினைவுபடுத்தும் பட்டியல் அமைத்தல், இ–புக் ரீடர், ஸ்டாப் வாட்ச், திருட்டு தடுப்பு, அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ். பிளாக் லிஸ்ட் ஏற்படுத்துதல் ஆகிய வசதிகளும் தரப்பட்டுள்ளன. பட்ஜெட் விலை போனாக இருந்தாலும், வை–பி இணைப்பு வசதி தரப்பட்டுள்ளதுதான் இந்த போனின் கூடுதல் சிறப்பாகும். வை–பி இல்லாத இடங்களில் EDGE/GPRS/WAP சேவைகளைப் பயன்படுத்தலாம். இதில் தரப்பட்டுள்ள பிரவுசருக்குப் பதிலாக, ஆப்பரா பிரவுசரைப் பயன்படுத்துவது சிறப்பான பயன்பாட்டினைத் தரும்.  இதில் தரப்பட்டுள்ள பேட்டரி 4.5 மணி நேரம் தொடர்ந்து பேச மின்சக்தி தரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இரண்டு சிம் பயன்பாட்டில், மேலே குறிக்கப்பட்டுள்ள சிறப்பான வசதிகளுடன், இந்த போனின் விலை ரூ. 4,800 எனக் குறிக்கப்பட்டுள்ளது இதன் இன்னொரு சிறப்பாகும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X