இந்த வார இணைய தளம் போட்டோக்களைக் காப்பாற்ற புதிய தளம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 ஆக
2013
00:00

மொபைல் போன் மற்றும் டிஜிட்டல் கேமராக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் இந்நாட்களில், நாம் அதிகமான எண்ணிக்கையில் போட்டோக்களை எடுத்து, அவற்றைக் கம்ப்யூட்டரில் பதிந்து வைக்கிறோம். இதனால், ஹார்ட் டிஸ்க் இடம் அதிகம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. மேலும், இந்த ஹார்ட் டிஸ்க் திடீரென இயங்காமல் போனால், இந்த போட்டோக்கள் கிடைக்காது. இதற்கான ஒரு தீர்வாக, பல இணைய தளங்கள், க்ளவுட் கம்ப்யூட்டிங் முறையில், இவற்றைப் பதிந்து வைத்துப் பயன்படுத்திட டிஸ்க் இடம் தருகின்றன. அந்த வகையில் அண்மையில் பார்த்த ஓர் இணைய தளம் picturelife. இதன் முகவரி https://picturelife.com/ இந்த தளத்தில் நம் போட்டோக்களைப் பத்திரமாக பதிந்து வைக்கலாம்.
இந்த தளத்தில் நுழைந்து, நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வரும் மின் அஞ்சல் முகவரியினையும், அதற்கான பாஸ்வேர்டையும் கொடுத்து அக்கவுண்ட் தொடங்கவும். அடுத்து Continue மற்றும் Next Step பட்டன்களைக் கிளிக் செய்திடவும். உடனே, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள போட்டோக்களை பேக் அப் செய்திடும் வேலைக்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள். Start Backing Up Your Photographs என்ற பட்டனை நீங்கள் கிளிக் செய்தவுடன், ஒரு செட் அப் பைல் டவுண்லோட் ஆகும். இதனை இயக்கி, படங்களை ஒருங்கிணைக்கும் Picturelife Sync அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்திட வேண்டும்.
இது செயல்படத் தொடங்கியவுடன், உங்கள் அக்கவுண்ட்டில் நுழைந்து, நீங்கள் ஏற்கனவே கொடுத்த தகவல்களை, உறுதி செய்வதற்காகக் கொடுத்து, எந்த பதிப்பினை நீங்கள் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்பதனையும் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த தளம் இலவசமாக 5 ஜிபி வரையிலான பைல் சேவ் செய்திட இடம் தருகிறது. இந்த இடத்தைப் பயன்படுத்தி, ஏறத்தாழ 2,000 போட்டோக்களை சேவ் செய்து வைத்திடலாம். எந்த பதிப்பு எனத் தேர்ந்தெடுத்தவுடன், உங்கள் கம்ப்யூட்டரில் போட்டோக்கள் மற்றும் படங்கள் உள்ள போல்டரைக் குறிப்பிட்டுக் காட்டிவிட்டால், அவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு பிக்சர் லைப் தளத்தில் சேவ் செய்யப்படும். அனைத்தும் முடிந்த பின்னரும், நீங்கள் பிக்சர் லைப் தளம் சென்று, உங்கள் போட்டோக்களை ஆல்பங்களாகப் பிரிக்கலாம். நீங்களாகவே, போட்டோக்களை இதன் பின்னர் அப்லோட் செய்திடலாம். இதில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், இந்த தளம் தனியே இதற்கென சப்போர்ட் பக்கம் ஒன்றை இயக்குகிறது.
பல நூறு, ஏன் ஆயிரக்கணக்கான நம் போட்டோக்களைப் பத்திரமாகப் பதிந்து வைத்து, நம் வாழ்நாளின் பிற்காலத்திலும், நம் சந்ததியினரும் பார்த்து ரசிப்பது, வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். எனவே, இதுவரை இது போன்ற தளம் எதனையும் பயன்படுத்தாதவர்களும், பிறவற்றைப் பயன்படுத்தி வருபவர்களும் இதனைப் பார்க்கலாம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X