பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 ஆக
2013
00:00

விண்டோஸ் 8.1ல் என்னவெல்லாம் இல்லை என்று பட்டியலிட்டதனால், தேவை இன்றி அதில் தேடும் நேரம் மிச்சமாகியது. நன்றி.
கா. பாவை, சென்னை.

ப்ளாஷ் ட்ரைவ் எப்போதும் நன்றாகப் பயன்படுத்தப்பட்ட பின்னரே, அதன் பயன்பாட்டினை இழக்கிறது. இது உண்மையே. தண்ணீரில் போட்டு எடுத்த பின்னரும் மிகவும் அருமையாக உழைக்கிறது. இது என் அனுபவம்.
சி.ஆர். சந்திர சேகரன், இராஜபாளையம்.

காலத்தின் தேவையை நிறைவேற்ற வந்தது போல, உங்களின் வேர்ட் 2007 தொகுப்பிற்கான டிப்ஸ்கள், பெரும் உதவியாய் உள்ளன. இப்படியே இதனைத் தொடர்ந்து வெளியிட்டால், புதிய 2007 தொகுப்பிற்கு மாறியுள்ள எங்கள் அலுவலக ஊழியர்களுக்கு உதவியாய் இருக்கும்.
சி. மார்த்தாண்டம், சென்னை.

வேர்ட் 2007, செட்டிங்ஸ் மேற்கொள்ள வேண்டிய பல விஷயங்களில், பல புதிய இடங்களில் வைத்துள்ளது. வேர்ட் 2003 பயன்படுத்தியவர்கள், தடுமாற வேண்டியுள்ளது. நீங்கள் கொடுத்துள்ள டிப்ஸ் கட்டுரை மிக மிக உதவியாய் உள்ளது. மிக்க நன்றி.
ஆ. ஸ்டெல்லா, திருப்பூர்.

புதிது புதிதாய் வைரஸ் பரவி, திகிலூட்டும் இந்நாளில், தாங்கள் அவை குறித்து உடனுக்குடன் தரும் தகவல்கள், கம்ப்யூட்டரைப் பாதுகாப்பதில் உதவுகின்றன.
எஸ். மாணிக்கராஜன், திருச்சி.

விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தினால், ஆபத்து அதிகம் நிச்சயம் இருக்கும் என்பது தொடர்ந்து உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. தாங்களும் பொதுமக்கள் நலன் கருதி, தகவல்களை வெளியிட்டு வருகிறீர்கள். சென்ற வாரம், அரசின் சைபர் காவல் துறையின் எச்சரிக்கை சரியான நேரத்தில் தரப்பட்ட ஒன்று. மக்கள் விழித்துக் கொண்டு புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறுவது நல்லது.
பேரா. எஸ். செல்வவிநாயகம், கோவை.

இணைய இணைப்பு என்றாலே, நம் பெர்சனல் தகவல்கள் திருடப்பட்டுவிடுமோ என்ற பயத்திலேயே இருக்கிறோம். குறிப்பாக குக்கிகள் குறித்து அதிகக் கவலைப்படுகிறோம். இந்நிலையில், நீங்கள் தந்துள்ள இணைய முகவரி களும் குக்கி பைல்களும் என்ற கட்டுரை, பல தகவல்களைத் தந்து பயத்தைப் போக்கியுள்ளது. மிக்க நன்றி.
எஸ். உமா செல்வராணி, விருதுநகர்.

விண்டோஸ் 8 சிஸ்டத்தில் சேப் மோட் இல்லை என்றே எண்ணி பயன்படுத்தி வந்தேன். நீங்கள் கொடுத்துள்ள டிப்ஸ் மற்றும் விளக்கம் என் தவறான எண்ணத்தினைப் போக்கியது.
என். அப்துல் ரசாக், புதுக்கோட்டை.

Feature Phones என்று சொல்லக் கூடிய இரண்டாம் நிலை போன்களில், பேஸ்புக் போன்று, மற்ற அப்ளிகேஷன்களும் கிடைக்கப்பெற்றால், நிச்சயம் கிராம மக்களுக்கு, தகவல் பரிமாற்றத்தில் உதவி கிடைக்கும். இதனை தகவல் தொடர்பில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் எண்ணிப் பார்க்க வேண்டும். பேஸ்புக் இவ்வகையில் நல்ல வழி காட்டியுள்ளது.
என். சுவர்ணமதி, திருவண்ணாமலை.

விண்டோஸ் 8 சிஸ்டம் கம்ப்யூட்டர், டச் ஸ்கிரீன் இணைந்து வாங்கிப் பயன் படுத்தத் தேவையான டிப்ஸ் களைத் தொடர்ந்து அளிக்கவும். இது ஒரு புதிய வகை சிஸ்டம் என்பதால், எல்லாருக்குமே இவை தேவைப்படும்.
ஆர். கனகராஜ்,காரைக்கால்.

கேள்வி பதில் பகுதியில், ஆண்ட்ராய்ட் மற்றும் ஜாவா குறித்து நீங்கள் தந்த தகவல்கள் பயனுள்ளவையாகவும், தவறான எண்ணத்தைப் போக்கு வதாகவும் உள்ளன.
கா. சுரேஷ் குமார், காரப்பாக்கம், சென்னை.

கையளவில் உலகம் என்ற கூற்றினை உண்மையாக்கும் வகையில், ஸ்மார்ட் போன் மற்றும் பிற போன்களில் இணைய இணைப்பு மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் கிடைத்து வருகின்றன. இவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்ற வகையில் டிப்ஸ்கள் தந்தால், அவை பெரிய உதவியாக இருக்கும்.
காதர் மைதீன், நாகப்பட்டினம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X