விளக்கொளியுடன் கீ போர்ட்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 செப்
2010
00:00

இருட்டில் மற்றவர்களுக்குத் தொல்லை தராமல், பயன்படுத்தக் கூடிய கம்ப்யூட்டர் கீ போர்டினை, லாஜிடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. கே 800 என   இது அழைக்கப்படுகிறது. இந்த கீ போர்டுக்குள்ளாக, கீகளை நன்கு அறியும் வண்ணம்   பின்புறத்திலிருந்து வெளிச்சம் தரும் வகையில் விளக்கு உள்ளது. அறையின் ஒளிக்கேற்ற வகையில் இதன் ஒளி மாறுகிறது.  கைகள் இதன் அருகே செல்கையில், ஒளிர்ந்து மற்ற நேரத்தில் இல்லாமலும் இந்த விளக்குகள் இயங்குகின்றன. இந்த விளக்கிற்கான மின்சக்தி, கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டுள்ளதன் மூலம் கிடைக்கிறது. இதில் உள்ள பேட்டரி ரீசார்ஜ் செய்யப்படுகிறது. இந்த கீ போர்டின் வடிவம் மிகவும் ஸ்லிம்மாக உள்ளது. கூடுதல் வசதியாக வழக்கமான உள்ளங்கை அடிப்பக்கம் வைத்திட இடம் தரப்பட்டுள்ளது. யு.எஸ்.பி. போர்ட்டில்  இணைத்து இதனைப் பயன்படுத்தலாம். மின்னஞ்சல், இணைய உலா மற்றும் மல்ட்டி மீடியா பயன்பாடுகளுக்கென தனி கீகள் தரப்பட்டுள்ளன.  விண்டோஸ் 7, விஸ்டா மற்றும் எக்ஸ்பி சிஸ்டங்களுடன் இணைந்து இது இயங்குகிறது.     இதன் நான்கு புறங்களிலும் பிளாஸ்டிக்கினால் ஆன பார்டர் தரப்பட்டுள்ளது. இதன் தடிமன் 9.3 மிமீ தான். இதன் உள்ளங்கை அமர்ந்திடும் இடத்தில் சிறிய ரப்பர் ஷீட் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் உறுதியாகக் கரங்களை இதில் வைத்துப் பயன்படுத்த முடிகிறது.  இதனால் உங்கள் கைகள் டைப் செய்திடுகையில் வழுக்கிச் செல்லாது. கை ரேகைகள் கீ போர்டில் பெரிதாகத் தெரியாது.  இதன் ஒவ்வொரு கீயிலும் மைக்ரோ லென்ஸ் ரெப்ளக்டர் உள்ளது. இதனால் ரம்மியமான நீல நிற ஒளி கிடைக்கிறது. இதனை யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்துப் பயன்படுத்தலாம். எந்தவிதமான இன்ஸ்டலேஷனும் தேவையில்லை. ஆனால் இதன் மேலாகத் தரப்பட்டுள்ள 12 ஸ்பெஷல் கீகளுக்கான செயல்பாடுகளை மேற்கொள்ள, இதனுடன் வரும் 4.6 கேபி அளவுள்ள இன்ஸ்டலேஷன் பைலை இயக்கிப் பதிய வேண்டும்.  இதன் இரு கீகளுக்கு இடையே 3.2 மிமீ இடைவெளி உள்ளது. இது கைகளுக்கு எந்த தீங்கும் ஏற்படாத வகையில் டைப் செய்திட உதவுகிறது. இந்த கீ போர்டில் யு.எஸ்.பி. போர்ட் எதுவும் கொடுக்கப்பட வில்லை. இதனால் நேரடியாக கீ போர்டில் எந்தவிதமான பென் ட்ரைவினையும் இணைக்க முடியாது. ஒருவேளை இதனை ஸ்லிம்மாக வடிவமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதனை விட்டிருக்கலாம். இந்த கீ போர்டு வயர் மூலம் இணைத்துச்  செயல்படும் மாடலாக மட்டுமே வந்துள்ளது. வயர் வழி இணைப்பின்றி இதனைப் பயன்படுத்த முடியாது. இரவு நேர இருட்டு ஆந்தைகள் போல கம்ப்யூட்டரில் செயல்படுவோருக்கு இந்த கீ போர்டு மிகவும் ஏற்ற ஒன்றாகும்.  இந்தியாவில் விரைவில் இது விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அமெரிக்காவில் இதன் விலை  100 டாலர்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X