தொடக்க நிலை ஆண்ட்ராய்ட் போன் மைக்ரோமேக்ஸ் ஏ 34
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 ஆக
2013
00:00

இந்திய நிறுவனமான மைக்ரோமேக்ஸ், பட்ஜெட் விலையில் கூடுதல் வசதிகளுடன் கூடிய மொபைல் போன்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அண்மையில், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் தொடக்க நிலை மொபைல் போன் ஒன்றை, மைக்ரோமேக்ஸ் ஏ34 என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் திரை 3.95 அங்குல அகலத்தில் கெபாசிடிவ் டச் ஸ்கிரீனாக அமைக்கப்பட்டுள்ளது. ப்ராசசர் ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. மற்ற மைக்ரோமேக்ஸ் மொபைல் போன்களைப் போலவே, இதுவும் இரண்டு சிம்களை தனித்தனியே இயக்கும் திறன் கொண்டதாக உள்ளது. எல்.இ.டி.ப்ளாஷ் இணைக்கப்பட்ட 2 எம்.பி. திறன் கொண்ட கேமரா பின்புறமாக அமைக்கப்பட்டுள்ளது. 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது. நெட்வொர்க் இணைப்பிற்கு 2ஜி, எட்ஜ், புளுடூத், வை-பி, மைக்ரோ யு.எஸ்.பி. ஆகியவை கிடைக்கின்றன. ராம் மெமரி 252 எம்.பி. ஆகவும், ஸ்டோரேஜ் மெமரி 165 எம்.பி. ஆகவும் உள்ளது. ஸ்டோரேஜ் மெமரியை, மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி ஆக உயர்த்தலாம். இதன் பேட்டரி 1,350 mAh திறன் கொண்டதாக உள்ளது. இதன் மூலம் 4 மணி நேரம் தொடர்ந்து பேசலாம். 120 மணி நேரம் இதன் மின்சக்தி தங்குகிறது.
மற்ற நிறுவனங்கள் தங்கள் ஸ்மார்ட் போன்களில், நவீன ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4 வகையினைத் தருகையில், மைக்ரோமேக்ஸ் இதில் ஏன் ஆண்ட்ராய்ட் 2.3.5, ஜிஞ்சர் ப்ரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் தருகிறது என்பது தெரியவில்லை.
இந்த தொடக்க நிலை ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனின் விலை ரூ. 4,399. ப்ளிப் கார்ட் இணைய விற்பனை தளத்தின் மூலம் இதனை வாங்கலாம். கருப்பு வண்ணத்தில் இது கிடைக்கிறது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X