இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஷார்ட் கட் கீகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

06 செப்
2010
00:00

பழநியிலிருந்து வாசகி ஒருவர், கம்ப்யூட்டர் மலரில் பல தொகுப்புகளுக்கு ஷார்ட் கட் கீகள் தொகுப்பு போடுவதாகவும், இந்த வகையில் இன்டர்நெட் எக்ஸ்புளோரரை  மறந்துவிட்டதாகவும் குற்றம் சாட்டி கடிதம் எழுதியுள்ளார். சில மாதங்களாக இதனை மறந்துவிட்டோம் என்பது உண்மைதான். இதோ அவருக்காகவும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைப் பயன்படுத்தும் மற்றவர்களுக்காகவும், சில ஷார்ட் கட் கீ தொகுப்புகளும் அவற்றின் பயன்பாடுகளும் தரப்படுகின்றன.  
F1–  உதவிக் குறிப்புகள் பெற  
F3   சர்ச் பேனல் திறக்கவும் மூடவும்
F4 அட்ரஸ் பாரினைக் கீழ் இழுத்துப் பார்க்க
F5 அப்போதைய இணையப் பக்கத்தினை மீண்டும் இறக்கிப் பார்க்க
F6  அட்ரஸ் பார் நோக்கிச் செல்ல
F11   முழுத்திரை பெறவும் மாற்றவும்
Alt + (Left Arrow)  ஹிஸ்டரி பட்டியலில் பின் நோக்கிச் செல்ல, பேக் ஸ்பேஸ் போல
Alt + (Right Arrow)   ஹிஸ்டரி பட்டியலில் முன்னோக்கிச் செல்ல
Ctrl + A   அனைத்தையும் தேர்ந்தெடுக்க
Ctrl + C தேர்ந்தெடுத்த அனைத்தையும் காப்பி செய்திட
Ctrl + E  சர்ச் பேனல் பெற
Ctrl + F  இணையப் பக்கத்தில் தேட
Ctrl + H  ஹிஸ்டரி பேனலைத் திறக்க/மூட
Ctrl + I பேவரிட்ஸ் பேனலைத் திறக்க / மூட
Ctrl + L  பைல் ஒன்றைத் திறக்க
Ctrl + P அப்போதைய பக்கத்தினைத் திறக்க
Ctrl + R  பக்கத்தினை மீண்டும் திறந்து பார்க்க. இதுவும் எப்5 கீ போலத்தான்.
Esc   இணையத்திலிருந்து கம்ப்யூட்டருக்கு வந்து கொண்டிருக்கும் இணையப் பக்க இறக்கத்தினை நிறுத்த
Ctrl + D அப்போது பார்த்துக் கொண்டிருக்கும் இணையப் பக்கத்தினை, பேவரிட்ஸ் பிரிவில் சேர்க்க ஒரு சொல்லில் இரண்டு கிளிக் செய்தால் அந்த சொல் தேர்ந்தெடுக்கப்படும். மூன்று முறை கிளிக் செய்தால், அந்த வரி தேர்ந்தெடுக்கப்படும். மவுஸில் உள்ள ஸ்குரோல் வீலைக் கிளிக் செய்தால், ஸ்குரோல் செய்வது எளிதாகும். கண்ட்ரோல் அழுத்தி, ஸ்குரோல் வீலை முன்பக்கமாகச் சுழற்றினால், இணையப் பக்கத்தில் உள்ள எழுத்தின் அளவு பெரிதாகும். கீழ் நோக்கிச் சுழற்றினால், எழுத்தின் அளவு சிறியதாக மாறும்.  இணையப் பக்கத்தில் ஒரு இடத்தில் கிளிக் செய்த பின்னர், ஷிப்ட் கீ அழுத்திக் கொண்டு, பின்னர் இன்னொரு இடத்தில் கிளிக் செய்தால், இரு இடங்களுக்கு இடையே உள்ள, டெக்ஸ்ட் மற்றும் ஆப்ஜெக்ட்டுகள் தேர்ந்தெடுக்கப்படும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
விநாயகமூர்த்தி.S - ThiruvandarkoilPondicherry,இந்தியா
10-செப்-201023:25:53 IST Report Abuse
விநாயகமூர்த்தி.S neengal alipathu dinamalar alla, suda suda seithy tharum suryagandhimalar, inipana seithy tharum thenmalar, puthunarchi tharum panimalar, ithu dhinam dhinam vanthalum vada malar ........ ungal pani thodara vazhthukal! enrum anbudan vinayagamourthy....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X