டிஜிட்டல்உலகில்தேவையானபண்பாடுநெறிகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 ஆக
2013
00:00

சமுதாயத்தில் தொழில் நுட்ப வளர்ச்சி ஏற்படுகையில், அது சமுதாயப் பண்பாட்டினையும் பெரும் அளவில் பாதிக்கிறது. சில வெளிப்படையாகவே காணப்படுகின்றன; சில மிக நுண்ணியமாகத் தெரியப்படுகின்றன. இந்த பாதிப்புகள், மக்களின் அன்றாட வாழ்வின் பண்புக் கூறுகளையும் மாற்றுகின்றன. இந்த மாறுதல்களில் சில வேண்டப்பட்டவையாகவும், பல வேண்டப் படாதவாயும் உள்ளன. ஒருவர் பின்பற்றாத சில பண்புக் கூறுகள், மற்றவர்களிடமிருந்து அவரைத் தள்ளி வைக்கலாம். ஏன், பகையையே உண்டாக்கலாம். இங்கு பொதுவாக, நாம் கண்டிப்பாக, மேற்கொண்டு பின்பற்ற வேண்டிய சில பண்புக் கூறுகளை இங்கு பார்க்கலாம்.
1. தொலைபேசியை சைலண்ட் மோடில் வைக்கவும்
மொபைல் போன் பயன்படுத்தாத இடமே இல்லை என்பதை நாம் அனைவருமே ஒத்துக் கொள்கிறோம். இதனால், ஒருவரின் போன் அழைப்பு ஒலி,மணி ஓசை, பாடல் ஓசை அல்லது வேறு சிறப்பாக செட் செய்யப்பட்ட ஒலி என ஒலிக்கிறது. இது அவர் தனியே இருக்கையில், தன்னுடைய வீட்டில் அல்லது அலுவலகத் தனி அறையில் இருக்கையில் சரியானதாக இருக்கலாம். சில இடங்களில், இந்த அழைப்பு ஒலி ஒலிக்கவே கூடாது. அவை, திரைப்படம் பார்க்கும் போது, அருகிலிருப்பவர் நூல் ஒன்றைப் படிக்கும்போது, ஒருவர் உரையாற்றி, மற்றவர்கள் அதனைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது, அனைவரும் மிகவும் ஈர்ப்புடன் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது, நோயாளியின் அறையில், உயர் அதிகாரி மற்றும் மருத்துவர் அறையில், எனப் பல இடங்களைப் பட்டியலிடலாம். இந்த இடங்களில் எல்லாம், உங்கள் மொபைல் போனின் அழைப்பு ஒலியை மவுனமாக வைத்து, அதிர்வு எனப்படும் வைப்ரேஷன் மட்டும் அமைக்கலாம்.
2. போனுடன் விளையாடுவதை நிறுத்துங்கள்
நாம் ஒருவருடன் பேசுகையில், அவர் நம் பேச்சை உற்றுக் கேட்காமல், மொபைல் போனில் விளையாட்டினை விளையாடுவதோ, அல்லது செட்டிங்ஸ் அமைப்பதோ நமக்கு நிச்சயம் எரிச்சலைத் தரும். மொபைல் போன் மூலம் சோஷியல் இணைய தளங்களைத் தொடர்பு கொண்டு நண்பர்களுடன் தகவல்கள் பரிமாறப்படுவது இப்போது அதிகரித் திருப்பதால், பலர், இத்தகைய தொடர்பிலேயே உள்ளனர். ஆனால், நம்முடன் பேசும் நண்பர்கள் பேசுவதனை இந்நேரத்தில் அலட்சியப்படுத்துகிறோம். நட்பினை வளர்க்க என உருவாக்கப்பட்ட சமுதாய இணைய தளங்கள், பல வேளைகளில், நேரடியாக ஈடுபடாமலேயே, நட்பினை முறிக்கும் தளங்களாகவும் மாறுகின்றன. எனவே, மற்றவர்கள் உங்களுடன் பேசுகையில், சமூக நிகழ்வு ஒன்றில் பங்கெடுத்துக் கொண்டிருக்கையில், மொபைல் போன் அல்லது லேப்டாப்பில் தொடர்பு கொள்வதனை அறவே மேற்கொள்ளக் கூடாது. கட்டாயம் இந்த சாதனங்கள் மூலம் தொடர்பு கொண்டே ஆக வேண்டும் எனில், நம்மிடம் பேசுபவரிடம் நிலையை எடுத்துக் கூறியபின்னர், அல்லது சமூக நிகழ்விலிருந்து விலகியோ, அத்தொடர்பினை மேற்கொள்ள வேண்டும்.
3. காலத்தைக் கடைப்பிடிக்கவும்
இன்றைய மொபைல் தொழில் நுட்பம், நம்முடைய தகவல் பரிமாற்றத்தினை மிக மிக எளிதாகவும், குறிப்பிட்ட நேரத்திலும் மேற்கொள்ளும் வசதியைத் தந்துள்ளது. நேரடியாக ஒருவரிடம் பேசுவதைக் காட்டிலும், மெசேஜ் மூலம் நம் செயல்பாட்டினை எளிதாக மற்றவருக்குத் தெரிவிக்கலாம். இந்த வசதி, நாம் எந்த ஒரு நிகழ்விற்கும், சரியான நேரத்திற்குச் செல்வதனை எதிர்பார்க்கிறது. நிகழ்வில் மாற்றங்கள் ஏற்படும் சூழ்நிலை ஏற்படும் போது, அதனோடு சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய கடமையையும் நம்மிடம் சுமத்துகிறது. எனவே, சரியான நேரத்திற்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதனையும், அது நேரம் மாற்றப்படும் போது, மற்றவருக்குத் தெரிவிக்க வேண்டுவதனையும் நாம் பின்பற்ற வேண்டும்.
4. திரைப்படம் பார்க்கையில் எலக்ட்ரானிக் சாதனங்கள் எதற்கு?
திரைப்பட நிலையங்களில் சிலர் தங்களுடைய எலக்ட்ரானிக் சாதனங்களான, மொபைல் போன், ஐ பேட், ஐபோன், ஸ்மார்ட் போன் ஆகியவற்றை இயக்கிக் கொண்டிருப்பார்கள். அல்லது செட்டிங்ஸ் மாற்றிக் கொண்டிருப்பார்கள். இவர்கள், மற்றவர்கள் தங் களைக் கவனிக்கவில்லை என்றும், தங்கள் சாதனங்களில் ஏற்படும் ஒலி, மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இல்லை என்றும் எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால், அப்படி நிகழ்வதில்லை. அருகில் இருப்பவர்கள், இவர் ஏன் இங்கு வந்து இந்த வேலையை மேற்கொண்டிருக்கிறார் என்றுதான் எரிச்சல் பட்டுக் கொண்டிருப்பார்கள். இந்த சாதனங்களின் திரை வெளிச்சமே மற்றவரின் கவனத்தைத் திருப்பும் எரிச்சல் அம்சமாக இருக்கும். எனவே, திரைப்பட நிலையங்களில், இவற்றை இயங்காமல் முடக்கி வைப்பதே நல்லது. மொபைல் போன் போன்றவற்றில் அழைப்புகள் இருந்தால், அதற்கென செட் செய்யப்பட்ட மெசேஜை அனுப்பலாம். அல்லது போனையே ஆப் செய்து வைக்கலாம்.
5. மெசேஜ் வரிகளில் பண்பு
முன்பெல்லாம், இளைஞர்களே அதிகம் டெக்ஸ்ட் மெசேஜினைப் பயன்படுத்தி வந்தனர். பெரும்பாலும் வெட்டிப் பேச்சுகளை, வர்ணனைகளே இருந்து வந்தன. இதற்கான வாக்கியங்கள் அரைகுறை வாக்கியங்கள், எழுத்துப் பிழைகள், முற்றுப் பெறாத சொற்கள் என இருக்கும். இப்போதும் இவை இருக்கின்றன. ஆனால், இப்போது, அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் தங்கள் கீழ் பணியாற்றும் மற்றவர்களுடன் அலுவல் குறித்த தகவல்களை, டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பிப் பெற்றுக் கொள்கின்றனர். எனவே, இதில் சரியான வகையில் டெக்ஸ்ட் அமைப்பதுவே பண்பான ஒன்றாகும். ஓர் உயர் அதிகாரிக்கு “lol wuts up boss?” என டெக்ஸ்ட் அனுப்புவது நல்ல நாகரிகமாகாது. அல்லது “can u come in a few hours early m8?” என அனுப்புவதும் தவறான ஒன்றாகும். மேலும் சிலர் கேப்பிடல் எழுத்துக்களைக் கொண்டு டெக்ஸ்ட் அமைப்பார்கள். இதுவும் தவறான பண்பாகும். தனிப்பட்ட நண்பர்கள் விடுத்து, மற்றவர்களிடம் டெக்ஸ்ட் மெசேஜ் பரிமாறிக் கொள்கையில், கேப்பிடல் லெட்டர்களாக இல்லாமல், முறையான வாக்கியங்கள் மூலம் டெக்ஸ்ட் அமைப்பதுவே சரியான பண்பாகும்.
6. எப்போதும் குற்றம் குறையா?
நம்மைச் சுற்றியுள்ள சிலர் எப்போதும் எதனையாவது குற்றம் குறை கூறிக் கொண்டே இருப்ப்பார்கள். இவர்கள் தங்களைப் பற்றிய மோசமான பண்புப் பதிப்பினை மற்றவருக்குக் காட்டிக் கொண்டிருப்பவர்களாவர்கள். நிச்சயம் சுற்றி இருப்பவர்கள், இத்தகைய குணம் கொண்டபவர்களை வெறுப்பார்கள்; அல்லது விலகிச் செல்ல விரும்புவார்கள். சிலர் இணையத்திலும் இது போன்ற செயல்களிலும் ஈடுபடுவார்கள். அஞ்சல் குழுக்களில் இது போலச் செயல்பட்டால், சிலர் குழுக்களிலிருந்து தங்களை விலக்கிக் கொள்ளும் முடிவிற்குச் செல்வார்கள். தங்கள் வலை மனைகளில் இது போல எழுதுபவர்களின் எழுத்தைப் படிக்க ஆட்களே இருக்க மாட்டார்கள். எனவே, இணையத்தில், நம் கோபத்தினை என்றாவது ஒரு நாள், நாகரிகமாகக் காட்ட வேண்டுமோ ஒழிய, பண்பில்லாமல் தொடர்ந்து எழுதுவதனைத் தவிர்க்க வேண்டும்.
7. மனிதர்களைக் காட்டிலும் சாதனங்கள் முக்கியமல்ல
தொழில் நுட்பம் வளர்ந்துவிட்டதனால், அவை கொடுக்கும் வசதிகளைப் பயன்படுத்தும் போது நாம் நம்மை இழக்கிறோம். ஏனென்றால், நாம் டிஜிட்டல் சாதனங்களுக்கு அதிக மதிப்பு அளிக்கிறோம், மனிதர்களை இரண்டாவது இடத்தில் வைக்கிறோம். இந்த தவற்றினைத் திருத்திக் கொண்டால், நிச்சயம் நாம் பண்பாளர்களாகவே தொடர்ந்து இருப்போம்.
மேலே சுட்டிக் காட்டப்பட்டுள்ளவையோடு இன்னும் சில உறுத்தல் தரும் செயல்களையும் சிலர் இந்த சாதனங்களில் மேற்கொள்ளலாம். அவற்றை எல்லாம், அவர்களாகவே புரிந்து கொண்டு விலக்குவதே நல்லது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X