பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 ஆக
2013
00:00

இணையத்தின் தீமைகளிலிருந்து சிறுவர்களைக் காப்பாற்றுவது என்பது இன்று இயலாத காரியமாக உள்ளது. இந்நேரத்தில் நல்ல வழிகளை யும், அறிவுரைகளையும் பக்குவமாகத் தங்கள் கட்டுரையில் எடுத்துக் கூறியுள்ளீர்கள். மிக்க நன்றி.
கே. ஆராவமுதன், மதுரை.

சமூக வலைத்தளங்களிலிருந்து சிறுவர்களைக் காப்பாற்றுவதுதான் மிகவும் கடினமான செயலாக உள்ளது. இன்னும் கூடுதலான குறிப்புகளை இதற்கெனத் தனியே வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என்.சி. ரஞ்சிதம், கோவை.

வி.எல்.சி. பிளேயர் இயக்கினால், லேப்டாப் கம்ப்யூட்டரில் ஸ்பீக்கர் கெட்டுப் போய்விடுவதாகப் பரவலாகப் பேசப்படுகிறது. இது உண்மையா? இது குறித்து டிப்ஸ்களை வழங்கவும்.
டி.என். சேது சுப்ரமணியம், சென்னை.

ஒரு பக்கமே ஆனாலும், எஸ்.டி. கார்ட்கள் குறித்து, இது வரை அறியாத பல தகவல்களைத் தந்துள்ளீர்கள். மிகவும் அருமை. எழுதியவருக்குப் பாராட்டுக்கள்.
எஸ். டேவிட் ஆசீர்வாதம், புதுச்சேரி.

கூகுள் ஸ்டோரில் எப்படி, பாதகமான அப்ளிகேஷன்களை அனுமதிக்கிறார்கள்? அஞ்சல் தளமான மெயில் தளத்தில், இணைப்புகள் எல்லாம் சோத்னைக்கு ஆளான பின்னர் தானே கிடைக்கின்றன. அதே நடைமுறையை ஏன் கூகுள் பிளே ஸ்டோரிலும் அமல்படுத்தக் கூடாது. நாம் பயப்படாமல், அப்ளிகேஷன்களை டவுண்லோட் செய்திட இது உதவுமே. நீங்கள் இதனை வலியுறுத்தவும்.
என். சுதர்சனம், கோவை.

யானைக்கும் அடி சறுக்கும் என்பது, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஸ்கை ட்ரைவ் பெயரில் உறுதியாகியுள்ளது. மைக்ரோசாப்ட் இனி எந்த பெயர் கொண்டு இதனை அழைக்கப் போகிறது எனப் பார்க்கலாம்?
கே.எஸ். பிரகாசம், மதுரை.

வேர்ட் மினி டூல் பார் ஒரு எரிச்சல் சமாச்சாரமாக இருக்கிறது. இருந்தாலும், அதன் பயன்பாடு பல வழிகளில் உதவியாகவே உள்ளது. இதனை நிறுத்த தாங்கள் குறிப்பிட்டுள்ள வழியும் பயன் தரத்தக்கதே. தேவைப்படாதவர்களுக்கு இது நிச்சயம் உதவும்.
சி. கே. வெங்கடேஷ், பழநி.

கம்ப்யூட்டர் மாற்றிக் கொள்பவர்களுக்கு உதவிடும் வகையில் ஆட்டோ கரெக்ட் பேக் அப் வழிகள் தந்திருக்கிறீர்கள். ஒவ்வொரு முறை கம்ப்யூட்டர் மாறுகையிலும், நாமாக ஏற்படுத்திய மாற்றங்களை மீண்டும் மீண்டும் அமைத்து நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை. நன்றி.
ஆர். சுரேஷ் கண்ணன், திண்டுக்கல்.

டோட்டல் அன் இன்ஸ்டால் புரோகிராம், மிகவும் உதவியாக உள்ளது. இதன் தொழில் நுட்பம் உண்மையிலேயே, மற்ற வற்றிடமிருந்து வேறுபட்ட வகையில் உள்ளது. நன்றி.
கே. எம். நிரஞ்சன் தாஸ், நாகர்கோவில்.

கேள்வி பதில் பகுதியில் தந்துள்ள கிட்ஸ் ஹெல்த், குழந்தைகள் வளர்ப்பில், நல்ல குறிப்புகளைத் தந்து வழி நடத்துகிறது. இதே போல சிறுவர், சிறுமியர் கல்வி கற்றுக் கொள்வதில் உதவும் தளம் ஒன்றினைச் சுட்டிக் காட்டி குறிப்புகள் தரவும்.
என். சாந்தி, சென்னை.

எக்ஸெல் செல்களில் ஏற்படும் தேவையற்ற இடைவெளிகளை நீக்க தந்துள்ள டிப்ஸ் மிக அருமை. இதுவரை இந்த பிரச்னையால், என் ஒர்க் புக் நன்றாக இல்லையே எனக் கவலை பட்டுக் கொண்டிருந்தேன். நீங்கள் தரும் ஒவ்வொரு டிப்ஸும் இது போல எங்கள் பிரச்னைகளை முன்கூட்டியே அறிந்தவர் போலவே தருகிறீர்கள். நன்றி.
கா. இளவரசி, சேலம்.

யு.எஸ்.பி. ட்ரைவ் செயல்பாட்டின் தகவல் பரிமாறும் வேகத்தினைப் பார்த்தால், அடுத்து ஹார்ட் டிஸ்க்கே இல்லாமல், ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் ஒரு ப்ளாஷ் ட்ரைவ் வைத்துப் பயன்படுத்தும் காலம் வரும் என நினைக்கிறேன். தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி எங்கோ செல்லும் என நீங்கள் அடிக்கடி குறிப்பிடுவது, உண்மையாகி வருகிறது.
பி. கஜேந்திரன், சென்னை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X