இதப்படிங்க முதல்ல...
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 ஆக
2013
00:00

ஹாலிவுட் படமாகும் கோச்சடையான்!
ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ள படம், கோச்சடையான். அவதார் பட பாணியில், ஹாலிவுட் தரத்தில் தயாராகி வரும் இப்படம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி, ஜப்பான், ஆங்கிலம் என, ஐந்து மொழிகளில் வெளியாகிறது. தற்போது, லண்டனில் உள்ள ஸ்டுடியோவில், "டப்'பிங் மற்றும் பின்னணி இசை, எபெக்ட்ஸ் என, இறுதி கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், கோச்சடையானை ஹாலிவுட் படம் போன்று, பிரமாண்டமான முறையில், வெளியிட, தற்போது திட்டமிட்டு கொண்டிருக்கின்றனர். அதனால், ஹாலிவுட் தரத்திற்கேற்ப, "மோஷன் கேப்சர்' முறையில், படத்தின் காட்சிகளை உருவாக் கும் பணியும் நடக்கிறது.
சினிமா பொன்னையா

ஆர்யாவின் அடுத்த காதலி!
அவ்வப்போது, ஏதாவதுஒரு நடிகையுடன் ஜாலியாக ஊர் சுற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் ஆர்யா. அந்த வரிசையில், இதுவரை நயன்தாராவுடன், "கிசுகிசு'க்கப் பட்டவர், இரண்டாவது உலகம் படத்திற்கு பின், அனுஷ்காவுடன், "கிசுகிசு'க்கப்பட்டு வருகிறார். இதையடுத்து, தனக்கு ஒரு நாள் படப்பிடிப்பு இல்லையென்றாலும், ஐதராபாத்துக்கு பறந்து விடும் ஆர்யா, அங்கு, அனுஷ்கா நடித்து வரும், ராணி ருத்ரம்மா தேவி படப்பிடிப்பு தளத்திலேயே, முகாம் போட்டு விடுகிறார். படப்பிடிப்பு தளத்தில் கிடைக்கிற சின்னச்சின்ன கேப்பில், ஆர்யாவுடன் அமர்ந்து, காதல் மொழி பேசும் அனுஷ்கா, அவரை, தன் வீட்டுக்கு அழைத்து சென்று, தன் அம்மாவின் கைப்பக்குவத்தில், அறு சுவை விருந்தளித்து, பிரியா விடை கொடுக்கிறார்.
சி. பொ.,

கிறங்கடிக்கும் காஜல் அகர்வால்!
ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பதென்றால், காஜல் அகர்வாலுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. டைரக்டர்கள் சொன்னதை விட, சொல்லாததையும் நிறையவே செய்து விடுவார். குறிப்பாக, கிக்காக பேசுவது, சூடேற்றும் விதத்தில், உதடு கடித்து லுக் விடுவது என்றெல்லாம் ஜமாய்த்து விடுகிறார். இதனால், காஜலுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் ஹீரோக்கள், நிஜமாகவே கிறங்கிப் போகின்றனர். கூடவே, அவருக்கு இணையாக புதுசாக நாமும் ஏதாவது, ரொமான்டிக் ரியாக்ஷன் கொடுக்க வேண்டுமென்று முயற்சி எடுக் கின்றனர். காற்று உள்ள போதே தூற்றிக் கொள்!
எலீசா

மீரா ஜாஸ்மினுக்கு ஓல்டு ஹீரோக்கள் அழைப்பு!
இங்க என்ன சொல்லுது என்ற படத்தில், வி.டி.வி. கணேஷின் மனைவியாக நடித்து வரும் மீரா ஜாஸ்மின், இந்த வேடத்தில் நடிப்பதற்காக, முன்னணி ஹீரோயினாக நடித்த போது வாங்கியதை விட, கூடுதல் சம்பளம் பெற்றுள்ளார். ஆக, சம்பளத்தை உயர்த்திக் கொடுத்தால், இமேஜ் பார்க்காமல், எந்த நடிகருடன் மீரா ஜாஸ்மின் நடிப்பார் என்று, செய்தி கசிந்து விட்டதையடுத்து, மேலும், சில ஓல்டு ஹீரோக்களும், தங்களுடன் டூயட் பாட, மீராவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். கிடந்த கிடைக்கு நடந்த நடை மேல்!
எலீசா

மாட்டை அடக்கிய சித்தார்த்!
பாய்ஸ் படத்தில் அறிமுகமான சித்தார்த், பெரும்பாலும், நகரத்து கதைகளிலேயே அதிகமாக நடித்தவர். இப்போது, ஜிகர்தண்டா படத்தில், முதல் முறையாக மதுரை இளைஞராக நடித்துள்ளார். பீட்சா இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்தில், லுங்கியை மடித்துக் கட்டி, சண்டை காட்சிகளில் எதிரிகளை புரட்டி எடுத்துள்ள சித்தார்த்துக்கு, மாட்டை அடக்கும் காட்சியில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அதனால், அவரது ஆசைக்காகவே ஒரு ஷாட் மட்டுமே வந்து செல்வது போன்று, ஒரு சிறிய காட்சியை படமாக்கியுள்ளனர்.
சி. பொ.,

விதார்த்தின் அண்ணன் அஜீத்!
மைனா படத்திற்கு பின், விதார்த் நடித்த படங்கள் ஓடாததால், அவரது ஹீரோ மார்க்கெட் சரிந்து விட்டது. அதனால், முக்கிய கேரக்டர்கள் கிடைத்தாலும், நடிக்கத் துவங்கிய விதார்த், சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக் கும் படத்தில், அவரது தம்பியாக நடித்து வருகிறார். அதன்பின், நிஜத்திலும் விதார்த்திடம் அண்ணன் போலவே பழகி வருகிறார் அஜீத். அதனால், "நிஜத்தில் உடன் பிறந்த அண்ணன் இல்லாத எனக்கு, இப்போது, அஜீத் என்ற அன்பான அண்ணன் கிடைத்து விட்டார்...' என்கிறார் விதார்த்.
சி. பொ.,

வித்யா பாலனுக்கு எதிராக போர்க்கொடி!
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவான, த தர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்து, தேசிய விருது பெற்றவர் வித்யா பாலன். அதனால், கர்நாடக இசைமேதை எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கதையில் உருவாகும் படத்திலும், அவரை நடிக்க அழைப்பு விடுத்தது, ஒரு பட நிறுவனம். "சில்க் வேடத்தில் ஆபாசமாக நடித்த ஒரு நடிகை, எம்.எஸ்.சுப்புலட்சுமியாக நடிப்பதா...' என்று, சில பிரபல இசைக் கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், அப்படத்தில் நடித்தால், படம் வெளியாகும் நேரத்தில், போர்க்கொடி பிடிப்பர் என்று, அப்படத் திலிருந்து தாமாகவே வெளியேறி விட்டார் வித்யா பாலன்.
சினிமா பொன்னையா

அவ்ளோதான்!

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X