ஒரு நிமிட இணையம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 ஆக
2013
00:00

இணையத்தில் ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம் நடக்கிறது?
மின் அஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன, ட்விட்டரில் ட்வீட்கள் பதியப்படுகின்றன, பல தளங்களில் சேட் என்னும் உரையாடல் மேற்கொள்ளப்படுகின்றன, மியூசிக் பைல்கள் டவுண்லோட் ஆகின்றன, கேம்ஸ் டவுண்லோட் ஆவதுடன், ஆன்லைனிலேயே விளையாடப்படுகின்றன, பேஸ்புக் மற்றும் பிற தளங்களில் புதிய அக்கவுண்ட்கள் திறக்கப்படுகின்றன, பலர் நுழைகிறார்கள், சிலர் வெளியேறுகிறார்கள், எவ்வளவோ பேர் தங்கள் பொருட்களுக்கு ஆர்டர் கொடுக்கின்றனர், எவ்வளவோ அளவில் பணம் பரிமாறப் படுகிறது. இப்படி வாழ்க்கையின் அனைத்து பரிமாணங்களும் இணையத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.
ஒரு நிமிட நேரத்தில் என்னவெல்லாம் இணையத்தில் நடக்கும்? இந்த கேள்விக்கு பதிலைத் தேடிய இன்டெல் நிறுவனம், ஆச்சரியப்படத்தக்க பல தகவல்களைத் தந்துள்ளது.
எடுத்துக்காட்டாக, பேஸ்புக்கில், ஒரு நிமிடத்தில் எத்தனை பேர் லாக் இன் செய்கிறார்கள்? உங்களிடம் கேட்டால், என்ன சொல்வீர்கள். 10 ஆயிரம், ஒரு லட்சம் -- அதற்கு மேல் இருக்காது என்று தானே எண்ணுகிறீர்கள். அதுதான் இல்லை. அண்மையில் இதனைக் கணக்கெடுத்த இன்டெல் நிறுவனம், பேஸ்புக்கில், ஒரு நிமிடத்தில் 2 லட்சத்து 77 ஆயிரம் பேர் லாக் இன் செய்வதாகத் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் தொடர்ந்து தன் கணிப்பில் கண்டறிந்த தகவல்கள், நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்து கின்றன. இதோ அவற்றை இங்கே காணலாம். நினைவில் கொள்ளுங்கள். கீழே தரப்படுபவை எல்லாம், ஒரு நிமிடத்தில் இணையத்தில் நடப்பவை.
இணையத்தில் இணைந்துள்ள சாதனங்களின் எண்ணிக்கை உலக மக்களின் தொகைக்கு இணையாக உள்ளது. வரும் 2015 ஆம் ஆண்டில், இது உலக மக்களின் தொகையைப் போல் இரண்டு மடங்காக இருக்கும்.
உலக அளவில், இணையம் வழியே, 6 லட்சத்து 39 ஆயிரத்து 800 ஜிபி அளவிலான டேட்டா பரிமாறிக் கொள்ளப்படுகிறது.
அமேஸான் வர்த்தக இணைய தளத்தில், ஒரு நிமிடத்தில் 83 ஆயிரம் டாலர் அளவில் வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது.
20 கோடியே 40 லட்சத்திற்கும் மேலான மின் அஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன.
கூகுள் தேடல் சாதனத்தில், 20 லட்சம் தேடல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 60 விநாடிகளில், 72 மணி நேரம் ஓடக்கூடிய வீடியோ படங்கள், யு ட்யூப் தளத்தில் அப்லோட் செய்யப்படுகின்றன.
70 புதிய தளப் பெயர்கள் பதியப்படுகின்றன. 571 புதிய இணைய தளங்கள் உருவாக்கப்படுகின்றன.
Flickr தளத்தில் 3,000 படங்கள் அப்லோட் செய்யப்படுகின்றன. 2 கோடி போட்டோக்கள் பார்க்கப்படுகின்றன.
பேஸ்புக்கில் 60 லட்சம் பேர் பார்வையிட்டு கருத்து தெரிவிக்கின்றனர். 18 லட்சம் பேர் லைக் கிளிக் செய்கின்றனர்.
லிங்க்டு இன் தளத்தில், 100க்கும் மேலாக புதிய அக்கவுண்ட்கள் திறக்கப்படுகின்றன.
விக்கிபீடியாவில், 6க்கும் மேலாக புதிய கட்டுரைகள் அப்லோட் செய்யப்பட்டு பதிக்கப் படுகின்றன.
47 ஆயிரம் அப்ளிகேஷன்கள் டவுண்லோட் செய்யப் படுகின்றன.
தங்களுடைய பெர்சனல் தகவல்களை, நிமிடத்திற்கு 20 பேர் திருடு கொடுக்கின்றனர்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X