கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 ஆக
2013
00:00

கேள்வி: Ghosting என்பது ஹார்ட்வேர் பிரிவில், எந்த சாதனத்தைக் குறிக்கிறது? மதர்போர்டில் இது இணைக்கப்பட்டுள்ளது என்றால், இதன் செயல்பாடு என்ன?
ஆ. திருஞானம், விருதுநகர்.
பதில்:
Ghosting அல்லது Cloning என்பது, கம்ப்யூட்டர் ஒன்றில் உள்ள ஹார்ட் ட்ரைவினை, இன்னொரு கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவில் நகலாகப் பதிக்கும் செயல் முறையாகும். பொதுவாக தனிப்பட்ட முறையில் வீடுகளில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள், இந்த வழிமுறையைக் கையாள்வது இல்லை. நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில், மிக அதிகமான பைல்களுக்கு பேக் அப் எடுக்கும் போது, இந்த செயல்முறை பின்பற்றப்படுகிறது. இந்த முறை ஹார்ட் ட்ரைவ் ஒன்றின் பைல்களுக்கு பேக் அப் எடுப்பதில் வேகமான முறையாகும்.

கேள்வி: விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இயங்கும் அப்ளிகேஷன் ஒன்றினை, அப்படியே காப்பி செய்து, விண்டோஸ் எக்ஸ்பி இயங்கும் கம்ப்யூட்ட்டரில் பதிந்து இயக்க முடியுமா?
ஆர். மாலதி, பொள்ளாச்சி.
பதில்:
இதற்கு ஒரே சொல்லில் பதில் அளிக்கட்டுமா, மாலதி. முடியாது. மெட்ரோ அல்லது மாடர்ன் ஸ்டைல் அப்ளிகேஷன்கள், விண்டோஸ் 8 சிஸ்டத்தில் மட்டுமே இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் இவை தொடு உணர் திரை இணைந்த கம்ப்யூட்டரில் மிகச் சிறப்பாக இயங்கும்.
இருப்பினும் உங்கள் ஆசையைச் சற்று எண்ணிப் பார்ப்போம். உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் எக்ஸ்பியை வைத்துக் கொண்டு, விண்டோஸ் 8 அப்ளிகேஷனை இயக்கிச் சோதனை செய்து பார்க்க வேண்டும் எனில், நீங்கள் விண்டோஸ் ஆர்.டி. சிஸ்டம் உள்ள டேப்ளட் பிசி ஒன்றை வாங்கி இயக்கிப் பார்க்கவும். எக்ஸ்பி இயக்க அனுபவம் கிடைக்க்கும்.
இல்லை எனில், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டரில் விண்டோஸ் 8 சிஸ்டத்தினைப் பதிந்து இயக்க முடியுமா என்பதனைச் சோதனை செய்து, அப்கிரேட் செய்து இயக்கவும்.
உங்கள் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டரை அப்கிரேட் செய்வதற்கு இதுதான் சரியான தருணம். அடுத்த ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திற்கு பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது. எனவே, பாதுகாப்பான கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு, விண்டோஸ் எக்ஸ்பியை விட்டுவிட்டு, விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8க்கு மாறிவிடுங்கள்.

கேள்வி: ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல் என்பது என்ன? கம்ப்யூட்டரில் எந்த செயல்பாட்டினை இவை கண்ட்ரோல் செய்கின்றன?
சசிரேகா, திண்டுக்கல்.
பதில்:
நல்ல கேள்வி. நன்றி சசிரேகா. ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல் என்பவை அடிப்படையில், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் சிறிய புரோகிராம்கள். இவை விண்டோஸ், விண்டோஸ் மீடியா பிளேயர் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆகியவை, அப்ளிகேஷன்களை அவர்களின் எல்லைக்குள்ளேயே இயக்க இந்த ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல் புரோகிராம்கள் உதவுகின்றன. ஏறத்தாழ ஜாவா ஆப்லெட் எனப்படும் புரோகிராம்களின் செயல் பாட்டினை ஒத்ததே இவை.
இந்த ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல் புரோகிராம்கள் இயங்குவதன் மூலம், அடிப்படையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தாமல், சிறிய அளவில் இயக்கத்தில் மாற்றங்களை மேற்கொள்ள இயலும். மொஸில்லா பயர்பாக்ஸ் பிரவுசர், தன் வாடிக்கையாளர்கள் ஆக்டிவ் எக்ஸ் புரோகிராம்களை அணுக ஓர் ஆட் ஆன் தொகுப்பினைக் கொண்டுள்ளது.
ஆனால், இவை இயங்குவதில் சிக்கல் உள்ளது. இந்த புரோகிராம்கள், மால்வேர் புரோகிராம்கள் தாக்கும் அளவிற்கு இடம் அளிக்கும் வகையில் இயங்குகின்றன. இவற்றைப் பயன்படுத்தி கம்ப்யூட்டருக்குள் நுழையும் மால்வேர் புரோகிராம்களின் வழியை “drivebys” என அழைக்கின்றனர். மேலும் தூரத்தில் இருந்தே நம் கம்ப்யூட்டர்களைக் கட்டுப்படுத்தத் திட்டமிடுபவர்களுக்கும் இவை வாகாக அமைகின்றன. அப்படியானால், இவற்றைப் பயன்படுத்தாமல் இருக்கலாமே என்று நீங்கள் எண்ணலாம். அதனையும் நாம் மேற்கொள்ள வழி உள்ளது. கண்ட்ரோல் பேனல் சென்று, அங்கு Internet Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இடையே Network and Internet என்ற விண்டோவினைப் பெறவும். இங்கு Internet Options என்ற பிரிவில், “Manage Browser Addons” என்ற ஆப்ஷனைப் பார்க்கலாம். இந்த விண்டோவிற்குச் சென்றவுடன், “Security” என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இங்கு நம் பாதுகாப்பு எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதனை செட் செய்திட, ஒரு ஸ்லைடர் பார் ஒன்று தரப்பட்டிருக்கும். இதில் என்பதில் செட் செய்தால், ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல் புரோகிராம்கள் அனைத்தும் தடுக்கப்படும். இதில் என்ன பிரச்னை ஏற்படும் என்றால், சில இணைய தளங்கள், இவற்றைத் தடை செய்துவிட்டால், சரியாக இயங்காது. இதற்குப் பதிலாக, நம் பிரவுசர்கள், இந்த தளம் வேண்டாம் என எச்சரிக்கை கொடுக்கும் தளங்களுக்குச் செல்லாமல் இருப்பதே நல்லது.

கேள்வி: விண்டோஸ் 8 தொகுப்பில், டைல்ஸ் மற்றும் சார்ம்ஸ் ஆகியவற்றிற்குப் பதிலாக, கிளாசிக் ஸ்கிரீன் பெற்று பயன்படுத்த முடியுமா?
என்.ஜே. கிருஷ்ணராஜ், சென்னை.
பதில்
:தாரளமாகப் பயன்படுத்தலாம். வழியும் எளிதே. மெட்ரோ/மாடர்ன் திரையில், டெஸ்க்டாப் என்பதில் தட்டவும். உடன் நேரடியாக, நம் அனைவருக்கும் பழக்கமான டெஸ்க்டாப் திரை உங்களுக்குக் கிடைக்கும். அல்லது விண்டோஸ் லோகோ கீயுடன் ஈ கீ அழுத்துக. உங்களுடைய ஸ்டார்ட் ஸ்கிரீனில், டெஸ்க்டாப் டைல் இல்லை என்றால், சர்ச் பாக்ஸில், டெஸ்க்டாப் என டைப் செய்து என்டர் தட்டவும். இப்போது இடது பக்கமாக டெஸ்க்டாப் ஐகான் கிடைக்கும். இதனைத் தேர்ந்தெடுங்கள். திரையின் அடிப்பாகத்தில், இந்த புரோகிராமினை ஸ்டார்ட் ஸ்கிரீனில் பின் செய்வதற்கான ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது ஸ்டார்ட் ஸ்கிரீனில், டெஸ்க்டாப் டைல் கிடைக்கும்.

கேள்வி: என் நண்பரின் ஜிமெயில் பக்கத்தில், மெசேஜ் எழுதும் கம்போஸ் விண்டோ பெரியதாக உள்ளது. இதனை எப்படி அமைப்பது? மாறா நிலையில் இதுவே கிடைக்கும் வகையில் அமைக்க முடியுமா?
ஆ. பிரகதீஷ், தாம்பரம்.
பதில்:
முடியும். மாறா நிலையில், ஜிமெயில் விண்டோவில், கம்போஸ் பட்டனைக் கிளிக் செய்தால், திரையின் வலது மூலையில் விண்டோ ஒன்று கிடைக்கும். இந்த விண்டோவில், வலது மேல் மூலையில், மூன்று கட்டங்கள் தப்படுகின்றன. அவை Minimize, Fullscreen, and Close. நடுவில் உள்ள கட்டத்தில் கிளிக் செய்தால், முழு விண்டோ கிடைக்கும். இது முழு விண்டோ அல்ல; சற்றுப் பெரிய விண்டோ. பின்புலத்தை இருட்டாக்கி, இதுவே ஸ்கிரீன் முழுமையும் இருப்பதாகக் காட்டும். சரி, இதனையே மாறா நிலை விண்டோ அளவாக இருக்க வேண்டும் என்ற உங்கள் விருப்பத்திற்கு வருவோம்.
1. Compose கிளிக் செய்த பின்னர், கம்போஸ் விண்டோவில் கீழே வலது மூலையில் சிறிய அம்புக் குறி அடையாளத்தைக் காணலாம்.
2. அந்த அம்புக் குறியில் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் Default to fullscreen என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
இனி நீங்கள் கம்போஸ் கிளிக் செய்திடுகையில், இதே பெரிய விண்டோ கிடைக்கும். மீண்டும் சிறிய விண்டோ வேண்டும் என்றால், மேலே சொல்லப்பட்ட வழிகளில் சென்று, மாற்றவும்.

கேள்வி: இன்டர்நெட் எப்படி செயல்படுகிறது என்ற கேள்விக்கு, எப்போதும் பெரிய அளவில் கட்டுரை காட்சிப் படங்களைத் தரும் இணைய தளம் உள்ளதா?
-கே.பிரகாஷ், புதுச்சேரி.
பதில்:
நல்ல கேள்வி. தகவல்கள் அதிகமாக இருந்தால், பொறுமையாகப் படித்து அறிந்துகொள்ள சிலர் தயங்குவார்கள். சுருக்கமான முறையில், படக் காட்சியாக ஒன்றை விளக்குவது சற்று சிரமமான செயல் தான். குறிப்பாக, இணையம் எப்படி இணைப்பு பெற்று செயல்படுகிறது என்பதை, அதன் வலைப்பின்னலின் அமைப்பையும், செயல்பாட்டினையும், சுருக்கமாகச் சித்தரிப்பது கடினம் தான். இந்த நோக்கத்தோடு, இணையத்தில் தேடிய போது, மூன்று நிமிடம் 21 விநாடிகள் இயங்கும் ஒரு விடியோ கிடைத்தது. இது கிடைக்கும் தளத்தின் முகவரி http:worldsciencefestival. இந்த தளத்தில், இன்னும் பல அறிவியல் உண்மைகளை விளக்கும் வீடியோ படங்கள் கிடைக்கின்றன.

கேள்வி: ஆண்ட்ராய்ட் போன்களில் கூகுள் ட்ரான்ஸ்லேட் இயங்குகிறதா? தமிழ் மொழி மொழி பெயர்ப்பு கிடைக்குமா?
சி. உதயசங்கர், தேவாரம்.
பதில்:
ஆம், கிடைக்கிறது. ஆண்ட்ராய்ட் 2.3 பதிப்பிற்குப் பின்னால் வந்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் இருப்பின் இது செயல்படும் என கூகுள் அறிவித்துள்ளது. சென்ற ஆகஸ்ட் 15 முதல், இந்தி, தமிழ் உட்பட, 70 மொழிகளில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கன்னடம், மராத்தி, ஏன் உருது டெக்ஸ்ட் கூட இதில் மொழி பெயர்க்கலாம். முயற்சித்துப் பாருங்கள்.

Advertisement

 

மேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X