அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 செப்
2013
00:00

எம்.பில்., செய்து கொண்டிருக்கும் வாசகி ஒருவர்... இவர் அந்துமணியின் அதிதீவிர வாசகி. தமிழ், ஆங்கிலம், ஜெர்மன் மொழிகளில் நல்ல புலமை உடையவர். பெரியவர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகங்களைப் படிப்பதிலும், சேகரிப்பதிலும் ஆர்வம் கொண்டவர். சமீபத்தில், இவர் என்னை சந்திக்க வந்த போது, கணித மேதை ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாற்று நூலை, கையில் வைத்திருந்தார்.
"கொடுங்களேன், படிச்சிட்டு தர்றேன்!' என்றேன்.
"என் கொள்கையை மாத்திக்க வைக்கிறீங்களே...' என்றவர், "புத்தகம், கேசட்... அப்புறம்...' என்று கூறி தயங்கினார்.
"என்ன... கூச்சப்படாமல் சொல்லுங்க...' எனத் தூண்டினேன்.
ம்...ஹும்... கூச்சம், அவரை விட்டுப் போகவில்லை...
"வேண்டாம் சார்... அதை, "டேஷ்' என்று வைத்துக்கொள்ளுங்கள், புத்தகம், கேசட் மற்றும் அந்த, "டேஷ்' ஆகியவற்றை, "ஓசி' கொடுக்கக் கூடாதுன்னு சொல்வாங்க... இருந்தாலும், நீங்க கேட்டுட்டீங்க... பத்திரமா திரும்பக் கொடுங்க...' என்றபடியே புத்தகத்தைக் கொடுத்தார்...
புத்தகம் ஒரு மர்ம நாவலைப் படிப்பதைப் போன்ற, திருப்பங்கள் கொண்டதாக அமைந்திருக்கிறது; முடிவு படு சோகம்.
கும்பகோணம் அரசினர் கல்லூரியில், 1904ல் எப்.ஏ., படிப்பில் சேர்ந்து, மூன்று முறை தோல்வியடைந்திருக்கிறார் ராமானுஜம். காரணம்: அவருக்கு கணிதம் தவிர மற்ற பாடங்கள் வராமல் போனது தான்!
பிறகு, லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவரின் உதவியில், லண்டனுக்குப் படிக்கச் சென்றார். பி.ஏ., பட்டம் பெற்று, உலகப்புகழ் பெற்றார். ஆனால், காசநோய் பீடித்தது. அந்த காலத்தில் காசநோய் உயிர் கொல்லி நோய். உடல் வேதனை தாங்காமல், தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்திருக்கிறார்.
அதில் ஒரு ஆச்சரியம்... பாதாள ரயில் பாதையில் தலை வைத்து படுத்திருந்த போது, ஏதோ இயந்திரக் கோளாறில் ரயில் நின்று போக, பிழைத்திருக்கிறார்!
ஆனாலும், நோய் விடவில்லை. தன், 33வது வயதில், சிகிச்சை பலனிக்காமல் இறந்து போனார் கணித மேதை ராமானுஜம்.
— இந்த வாழ்க்கை வரலாற்றின் சுருக்கம், சோகமாகத் தான் இருந்தது... ஆனாலும், "ஓசி' கொடுக்கக் கூடாத அந்த, "டேஷ்' எது எனக் கண்டுபிடிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன்.
***

"மறைந்த வாரியார் சுவாமிகள் போல கதை சொல்ல இன்று யாரும் இல்லை...' என புலம்பிக் கொண்டிருந்தார் குப்பண்ணா.
"சும்மா அலட்டாதீங்க சார்... இன்று, இறையன்பு, சுகி.சிவம் என, பலரும் களத்தில் உள்ளனர். ஆனால், சமயத்திற்கு ஏற்றபடி ஜோக் அடிப்பதில் வாரியார் சமர்த்தர்...' என்றேன்.
"ஆமா... மா... வாரியார் ஜோக் ஏதும் நினைவில் இருந்தால் எடுத்து விடேன்...' எனக் கேட்டார் குப்பண்ணா.
"ஒரு முறை மதுரை திருப்புகழ் சபைக்கு நன்கொடை அளித்தவர்களின் பெயரை சபையோருக்கு படித்துக் கொண்டிருந்தார்... "முருகேசன் ரூபாய் 50, நாராயணசாமி ரூபாய் 25, பார்வதி ரூபாய் 10, ஆறுமுகச்சாமி ரூபாய் 5...' என்று கூறிக் கொண்டிருந்த போது, இடையே ஒருவர் புகுந்து, இரண்டு புது வேட்டிகளை வாரியாரின் தோள்களில் சூட்டினார்.
"அவரை நிமிர்ந்து பார்த்து, வாரியார், "இவர் தாங்க அதிகமான நன்கொடை அளித்தவர்... இரண்டு கோடி கொடுத்திருக்கிறார்...' என்றார்.
"இரண்டு கோடி வேட்டிகளை சூட்டியவருக்கு ஒரே மகிழ்ச்சி; கூட்டத்தினருக்கும் நல்ல நகைச் சுவை!'
***

"சோழ நாடு சோறுடைத்து, தொண்டைநாடு சான்றோருடைத்து என்று அவ்வை பாடினாளே... தொண்டை நாடு என்பது எது? சோழம் (தஞ்சை), சேரம் (கேரளா), பாண்டியம் (மதுரை), பல்லவம் (சென்னை) என்பது தெரிகிறது. கொங்கு (கோவை), நாஞ்சில் (கன்னியாகுமரி) கூட புரிகிறது. இந்த தொண்டை தான் எங்கோ சிக்கிக் கொண்டிருக்கிறது?' என்றேன் குப்பண்ணாவிடம்.
"வட ஆற்காடு மாவட்டம்தான் அந்தக் காலத்திலே தொண்டை நாடு என்று சொல்லப்பட்டது. சரி; பாண்டிய நாடு என்ன உடைத்து?' எனக் கேட்டார் குப்பண்ணா.
"கண்ணகி சோழநாட்டிலிருந்து (பூம்புகார்) பாண்டி நாட்டுக்கு (மதுரை) போய் தானே சிலம்பை உடைத்தாள். அதனால், பாண்டிநாடு சிலம்புடைத்து...' என்றேன்.
"சரியா போச்சு போ... பாண்டி நாடு முத்துடைத்து... இதை ரத்னாகரே ராமாயணத்தில் கூறியிருக்கிறாரே!'
"ரத்னாகர்ன்னு ஒருத்தர் ராமாயணம் எழுதியதா தெரியலியே... ஒருவேளை, அந்த பெயரில் யாராவது ஒரு, "பப்ளிஷர் ராமாயணத்தை ஆப்செட் பிரிண்டிங்லே மல்ட்டி கலர்லே' மலிவு பதிப்பாகப் போட்டாரோ?' என்றேன்.
"ரத்னாகர் எவ்வளவு பிரபலமானவர்... நம்ம திருவான்மியூரிலே கூட அவர் வந்து தங்கியதாகப் பிரசித்தி, அங்கே அவருக்கு ஒரு கோவில் கூட இருக்கிறது...'
பக்கத்திலிருந்த லென்ஸ் மாமா, "அட... இந்த ஆளு வால்மீகி முனிவரைத் தான் சொல்றார்யா... சும்மா தலையை சுத்தி மூக்கைத் தொடாதேங்காணும்... முனிவராகிறதுக்கு முன் வால்மீகிக்கு, ரத்னாகர்ன்னு தான் பெயர்...' என்றார்.
ஆமோதிப்புடன் சிரித்தார் குப்பண்ணா.
"ஆமாம்... அவர்தான், "முக்தா மணி, விபூஷிதம், யுக்தம் கவாடம் பாண்ட்யானாம்' என்று, அதாவது, "பாண்டியர்களுக்கு உரிய முத்தும், மணிகளால் ஆன அலங்காரமான கபாடபுரம்' என்று தன் ராமாயணத்தில் கூறியிருக்கிறார்...' என்றார் குப்ஸ்.
"இப்போது கபாடபுரம் தமிழ் நாட்டில் என்ன பெயரில் வழங்குகிறது?' என்றேன்.
"அது கடலில் மூழ்கி எத்தனையோ காலமாகிறது!' என்று கூறி, சந்தேகத்தை தீர்த்து வைத்தார்!
***

அன்று மதிய சாப்பாட்டிற்குப் பின், வேலையை ஆரம்பிக்கு முன், ஆபிசில் ஆஜரானார் குப்பண்ணா... அவரது வாயைக் கிளறினால், சுவையான விஷயம் ஏதாவது கிடைக்கும்...
"என்ன, போஜனம் ஆச்சா?' என, அவரது பாஷையிலேயே கேட்டு வைத்தேன்.
"உபசரணையைப் பாத்தா, எதுக்கோ அடி போடற மாதிரி தெரியறதே...' என்றார்.
"புரிஞ்சிட்டீங்கல்ல... சுவையான விஷயம் ஏதேனும் எடுத்து விடுங்களேன்...' என்றேன்.
"அது, "57ம் வருடம்ப்பா... தேர்தலில் அண்ணாதுரை போட்டியிட்டார். ஜாதி, மதங்களுக்கு எதிராக பிரசாரம் நடத்திக் கொண்டிருந்தது அவரது கட்சி. ஆனால், வாக்காளர் பட்டியலில் அவர் பெயர் அண்ணாதுரை முதலியார் என்றிருந்தது; வாக்குச் சீட்டிலும் அப்படியே பதிவாகி விட்டது.
"இதை ஈ.வெ.ரா., வின் திராவிட கழகத்தினர் கேலி செய்து பிரசாரம் செய்தனர். அண்ணாதுரையோ, "இது வாக்காளர் பட்டியல் தயாரிக்க வந்த அரசு ஊழியர் செய்த தவறு; நான் எப்போதும் என் பெயருடன் ஜாதிப்பெயர் போட்டுக் கொள்வதில்லை...' என்றார்.
"ஒரு ஊர்க் கூட்டத்தில், "கண்ணீர் துளிக் கட்சிக்காரன்களுக்கு இப்போது வால் முளைத்து விட்டது; பெயருக்கு பின்னால், "முதலியார்' என்று போட்டுக் கொள்கிற வால் தான் அது...' என்றார் ஈ.வெ.ரா.,
"உடனே, "இவரது யோக்கியதை தெரியாதா... மணியம்மையை இரண்டாம் திருமணம் செய்து கொண்ட போது தன் பெயரோடு, தன் ஜாதிப்பெயரையும் சேர்த்துப் போட்டு, பதிவாளர் அலுவலகத்துக்கு விண்ணப்பித்தார். அது, அந்த அலுவலக நோட்டீஸ் போர்டிலும் ஒட்டப்பட்டு, சந்தி சிரித்தது...' என்று, தி.மு.க.,வினர் நோட்டீஸ் அச்சிட்டு வெளியிட்டனர்...' என்று முடித்தார்.
எல்லாமே வெளி வேஷம் தான்... என நினைத்துக் கொண்டேன்!
***

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vasagan - chennai,இந்தியா
14-செப்-201312:37:04 IST Report Abuse
vasagan இந்த ஜாதி மேட்டர் already திண்ணை பகுதியில் வெளி வந்து விட்டது .
Rate this:
Share this comment
Cancel
MKD Samy - Trichy,இந்தியா
14-செப்-201309:08:27 IST Report Abuse
MKD Samy EV ராமசாமி பெரியார், அவர் பெயரே "ராமசாமி" - இப்படி இருக்க, ஏன் ' ராமர் இல்லை, சாமி இல்லையென்று" ஓலமிடவேண்டும்? மேலும், EV ராமசாமி பெரியார் ஒரு கன்னட காரர், தமிழர்களை வெறுத்தவர். அண்ணா துறையே பெரியாரை ஏற்கவில்லை. அதனால் தான் DMK ஏற்பட்டது. ஏன் தமிழன், EV ராமசாமியை பெரிய தலைவராக ஏற்கவேண்டும்?
Rate this:
Share this comment
Cancel
Srinath Babu KSD - Madurai,இந்தியா
14-செப்-201308:53:20 IST Report Abuse
Srinath Babu KSD வாசகியர் தான் எப்போதும் அந்துமணிக்கு கடிதம் எழுதுகின்றனர். அவருக்கு வாசகர்களே இல்லையா அல்லது அவர்களின் கடிதங்களை அவர் படிப்பதில்லையா ?
Rate this:
Share this comment
Cancel
Nanban - Kovai  ( Posted via: Dinamalar Android App )
11-செப்-201300:28:47 IST Report Abuse
Nanban அந்த சாதி் வெறியை இன்று வரை அதி்முக தொடர்ந்து காப்பாற்றி வருகிறது
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - chennai,இந்தியா
08-செப்-201319:49:52 IST Report Abuse
Natarajan Ramanathan மொத்தத்தில் ஜாதி வெறியையும் ஊழலையும் உருவாக்கியது திமுகதான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.