அகால நேரத்தில் செய்யக் கூடாதவை! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
Advertisement
அகால நேரத்தில் செய்யக் கூடாதவை!
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 செப்
2013
00:00

எதையும் காலாகாலத்தில் செய்வதுதான் நல்லது; அகாலத்தில் செய்யக் கூடாது. நதிகளில் ஸ்நானம் செய்வதற்குக் கூட, குறிப்பிட்ட காலங்களைச் சொல்லி இருக்கின்றனர். சூரிய அஸ்தமனத்துக்குப் பின், விடியற்காலை அருணோதயம் வரை, நதியில் இறங்கி ஸ்நானம் செய்யக் கூடாது.
அந்த நேரம், நதி தூங்கிக் கொண்டிருக்கும்; அதை கலைக்கக் கூடாது. சில நதிகளில் அந்த இரவு நேரத்தில் தேவலோக மாந்தர் வந்து நீராடுவராம். அப்போது, மனிதர்கள் அதில் இறங்கக் கூடாதாம். இங்கு ஒரு சின்னக்கதை:
பாண்டவர்கள் கங்கைக் கரையை அடைந்து, கங்கையில் இறங்கப் போயினர். முன் சென்றான் அர்ஜுனன். அந்த சமயம் நடுநிசி வேளை. நதியிலிருந்த சித்ரரதன் என்ற கந்தர்வன், கந்தர்வ ஸ்த்ரீகளுடன் ஜலகிரீடை செய்து கொண்டிருந்தான்.
பாண்டவர்கள் வருவதை பார்த்து கோபம் கொண்டு, "யார் இந்த இடத்துக்கு இப்போது வருவது... இரவு, பகல், சந்தி, செவ்வானம் தோன்றிய 80 வினாடிகள்... இந்த காலம் தவிர மற்ற காலங்கள், காமசாரிகளான, யக்ஷ, ராட்சச கந்தர்வர்களின் காலமாகும். இந்தக் காலங்களில் கந்தர்வர்கள் தவிர வேறு யாரும் இங்கு வரக் கூடாது.
"மரியாதை தெரியாமல் மனிதர்கள் இங்கு வந்தால் ராட்சஷர்களுடன் சேர்ந்து நாங்கள், அவர்களை அடித்து, ஒழித்து விடுவோம். அதனால், விஷயம் தெரிந்த பிரம்ம வித்துக்களும், அரசர்கள் யாரும் இரவு நேரத்தில் ஜலத்தின் அருகில் வர மாட்டார்கள். நீங்களும் இங்கு வராமல் தள்ளியே நில்லுங்கள்...' என்று ஆவேசமாகப் பேசினான் கந்தர்வன்.
இதைக் கேட்ட அர்ஜுனன், "கங்கையில் யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் இறங்கி ஸ்நானம் செய்யலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. நாங்கள் பாண்டவர்கள்; நான் அர்ஜுனன். எங்களை தடுக்க உன்னால் முடியாது; முடியுமானால் பார்...' என்றான்.
கந்தர்வனுக்குக் கோபம் வந்தது. வில்லை எடுத்து பாணங்களால் அர்ஜுனனை தாக்கினான். அர்ஜுனனும் அதையெல்லாம் தடுத்து ஆக்னேயாஸ்திரத்தால் அவனை தாக்க ஆரம்பித்தான். அதன் வெப்பம் தாளாமல் கந்தர்வன் தவிக்க, அவன் மனைவி
கும்பீனசி, அர்ஜுனனின் காலில் விழுந்து, தன் கணவனுக்கு உயிர் பிச்சை அளிக்க வேண்டினாள். அவளுக்கு அபயம் அளித்து, கந்தர்வனை விடுவித்தான் அர்ஜுனன்.
தன் தோல்வியை ஒப்புக் கொண்டு, அர்ஜுனனைப் பாராட்டினான் கந்தர்வன். "இருவரும் நண்பர்களாக இருப்போம்...' என்றான். அதற்கு அடையாளமாக, "சாக்ஷûசி என்ற மந்திரத்தை உனக்கு உபதேசம் செய்கிறேன். இதை சித்தி செய்தால், உட்கார்ந்த இடத்திலிருந்தே மூன்று லோகங்களிலும் எதை, எப்படிப் பார்க்க விரும்புகிறோமோ, அப்படியே பார்க்கலாம்...' என்று சொல்லி, அந்த வித்தையை அர்ஜுனனுக்கு உபதேசம் செய்து வைத்தான்.
அதற்குப் பிரதிபலனாக அர்ஜுனனிடமிருந்து, "ஆக்னேயாஸ்திர'த்தைப் பெற விரும்புவதாகச் சொன்னான். அதன் பிறகு பாண்டவர்கள் எதற்காக, எங்கே செல்கின்றனர் என்பதை தெரிந்து, "நீங்கள் ஒரு புரோகிதரை அண்டியிருப்பது நல்லது...' என்று சொல்லி, விடை பெற்றான்.
அகால நேரத்தில் செய்யக் கூடாதவை என்று சில விஷயங்கள் உள்ளன. அகாலத்தில் ஸ்நானம் செய்யக் கூடாது; அகாலத்தில் சாப்பிடக் கூடாது என்றெல்லாம் உண்டு. இரவு, பதினொரு மணிக்கு மேல், மறுநாள் சூரியோதயம் வரை சாப்பிட மாட்டார்கள். இதை அகாலம் என்பர்.
ஆனால், பஸ், ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு இந்த அகாலம் என்பதே தெரியாது. எப்போது, எங்கே என்னென்ன கிடைக்கிறதோ, வாங்கி சாப்பிடுவர். இது போல் அகாலத்தில் சாப்பிடும் சாப்பாடு, ராட்சதர்கள், பிசாசுகளுக்குப் போய் சேருகிறதாம்; யோசித்து சாப்பிடுங்கள்.
***

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்!
*மனிதனின் படைப்புகள் மனிதனையே அச்சுறுத்துவது ஏன்?
அவனவன் செயலே, அவனவனுக்குப் பரிசையோ, தண்டனையோ வழங்குகிறது. ஒருவன் பெற்ற பிள்ளையே, அவன் தலைக்குக் கொள்ளியாக வந்து சேர்வதில்லையா?
***

வைரம் ராஜகோபால்

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
09-செப்-201310:35:29 IST Report Abuse
சு கனகராஜ் தெரியாத விஷயத்தை புரிய வைத்ததற்கு நன்றி
Rate this:
3 members
1 members
2 members
Share this comment
Cancel
Skv - Bangalore,இந்தியா
08-செப்-201315:40:49 IST Report Abuse
Skv ரயில் விமான பயணங்களில் பச பயணங்களில் கூடியவரை தவிர்ப்பது நலமே உண்மை ஆனால் வீட்டிலிருந்து விமான நிலையம் செல்ல குறஞ்சது 2மனினெரம் பயணம் வீட்டுலே லைட்ட துன்னுட்டு வரோம் விமானம் ஏறி அதுகிலம்பும் நேரம் அர்த்தராத்திரி மாலை 5மனிக்கு தின்ன தோசை ஆர் இட்லி சீரணம் ஆயுறும் பசி வாய்த்த கிள்ளும் அப்போ என்ன செய்வது அதவும் சுகர் இருந்தால் ரொம்பவே கஷ்டம்
Rate this:
5 members
0 members
8 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.