அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 செப்
2013
00:00

அன்புள்ள சகோதரி —
வெகு நாட்களாக என் பிரச்னை பற்றி உனக்கு கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், என் பிரச்னை கேலிக்குரியது... தயவு செய்து தப்பாக நினைக்காதே... என் வரையில் என் பிரச்னை அதிதீவிரமானது. உடனே தீர்வடையாவிட்டால் எனக்குப் பைத்தியமே பிடித்து விடும் போலிருக்கிறது. விஷயம் இதுதான்:
எனக்கு, 17 வயதில் திருமணம். கூட்டுக் குடும்பம். புகுந்த வீடு மிகவும் ஆச்சாரமானது... 18ல் தொடங்கி; வரிசையாய் நாலு குழந்தைகள். கணவருக்கு நான் தேவையாக இருக்கும் போதெல்லாம் ஒன்று பிரசவித்திருப்பேன், இல்லா விட்டால், சுத்தபத்தமாய் குளித்து முடித்து சமைத்துக் கொண்டிருப்பேன். இருந்தது ஒரு ஹால், ஒரு படுக்கையறை...
இரவு, 11:00 மணிக்கு மேல், மாமியார் அனுமதி கொடுத்ததும் தான் படுக்கையறைக்குள்ளேயே அடியெடுத்து வைக்க வேண்டும். அப்போது பார்த்து குழந்தை அழுது ஊரைக் கூட்டும். என் கணவருக்கு கோபமாய் வரும். "சனியனை எடுத்துட்டு வெளியிலப் போய் தொலை...' என்று கத்துவார்.
இப்படியே, என், 35 வயது வரை காலம் ஓடி விட்டது.
என் கணவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது. வருடத்துக்கு ஒருமுறைதான் வருவார். நான்தான் குழந்தைகளைப் படிக்க வைத்து, மாமியாரையும் கவனித்துக் கொண்டு இருந்தேன்.
சில வருடங்களுக்குப் பின் மாமனார், மாமியார் காலமாயினர். நாலு குழந்தைகளில் இரண்டு பேருக்கு திருமணமாகி, வெளியூரில் இருக்கின்றனர். இரண்டு பேர் வெளிநாட்டில் படிக்கின்றனர். இப்போது என் கணவர் ஓய்வு பெற்று வீட்டோடு இருக்கிறார்.
ஒரு சில கம்பெனிகளில் டைரக்டராக இருக்கிறார். கை நிறைய பணம்... தேவையானதை வாங்கலாம். அவர் என்னை ஒருநாளும் கட்டுப்படுத்தியதே இல்லை. 45ல் மாதவிலக்கு நின்றது. அப்போதெல்லாம் என்னுள் தாங்க முடியாத, "செக்சுவல் அர்ஜ்' இருந்தது. என் கோபத்தையும், அழுகையையும் வெளிக்காட்ட யாருமே இல்லாததால், எனக்குள் வைத்தே மறுகிப் போனேன்.
இப்போது கடந்த மூன்று வருடங்களாகத் தான் இவர் என்னுடன் இருக்கிறார். அவரைப் பொறுத்தவரையில், காலையில் பூஜை, கோவில்... மாலையில் கிளப், பைவ் ஸ்டார் ஓட்டல்களில் பிசினஸ் பார்ட்டி... இப்படி போய் கொண்டிருக்கிறது!
நாற்பத்தியைந்து வயதில் நான் நினைத்ததுண்டு... விடிகாலையில் எங்கிருந்தாவது ஒரு தேவகுமாரன் வந்து, என் தாபத்தை தீர்த்து விட்டு போக மாட்டானா என்று!
இப்போது ஐம்பதிலும் என் மனம் இளமையாக இருக்கிறது... கணவருடன் சேர்ந்து படுப்பதுதான் இல்லை என்றாலும், அவரது அன்பான சொல், அரவணைப்பு, "இத்தனை நாளும் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டாய்' என்கிற பரிவான விசாரிப்பு... இது கிடைத்தால் போதும். ஆனால், அவரோ இதை ஒரு நாளும் பொருட்படுத்தியது இல்லை.
நீயே சொல்... இவர், இவரது, இளமைப் பருவத்தில் எங்கெங்கு இருந்தாரோ, அங்கெல்லாம் தேவைப்பட்ட போது தன் உடற்பசியைத் தீர்த்துக் கொண்டிருக்கிறார்... இது பற்றி நண்பர்களுடன் சிரித்து பேசும் போதெல்லாம் தமாஷாகக் கூறி, என்னைப் பார்த்து கண் சிமிட்டுவார்...
இப்பக் கூட என் மன உளைச்சல் தாங்காமல் எல்லார்கிட்டேயும் எரிந்து விழுகிறேன். வீட்டில் நிம்மதியே இல்லை. என் கணவரைப் பார்க்கும் போது மட்டுமில்லை, அவர் சம்பந்தப்பட்ட சட்டை, செருப்பு, வாட்ச் எதைப் பார்த்தாலும் நார் நாராகக் கிழித்து, தூக்கிப் போட்டு உடைக்க வேண்டும் போல் இருக்கிறது.
என் பிரச்னைக்கு நீதான் பதில் தர வேண்டும்.
இப்படிக்கு
அன்பு சகோதரி.

அன்பு சகோதரிக்கு—
தேவையானபோது, "செக்ஸ்' வைத்துக் கொள்ள முடியாமல், பிறகு அதற்கு சமயமும், சந்தர்ப்பமும் கிடைக்கும்போது, ஒரே வீட்டில், இருவேறு படுக்கையறையில் படுத்திருக்கும் அவலம் கஷ்டமானதுதான்; புரிகிறது.
ஐம்பது வயதானாலும் மனசை பொறுத்த வரையில் இளமையாகவே இருப்பதாகவே எழுதியிருக்கிறாய்.
முதலில் என் பாராட்டுகள். இந்த காலத்தில் ஒரு பிள்ளை பெற்று, 25 வயசு முடிவதற்குள்ளாகவே எல்லாம் முடிந்து விட்டதாக நினைத்து, பெண்கள், தங்களை கவனித்துக் கொள்ளாமல், "புஸ்' சென்று உப்பியோ, குச்சியாய் இளைத்தோ போகின்றனர்.
பல ஆண்பிள்ளைகளுக்கு பெண்ணின் மனசைப் படித்தறியும் சமர்த்துப் போதாது. தனக்கு இது வேண்டும், அது வேண்டும் என்று தேடித் தேடி போவரே தவிர, தாலி கட்டியவளுக்கு எது வேண்டும் என்று கேட்கத் தெரியாது. அப் பேர்ப்பட்ட புத்திசாலிகளுக்கு, நாம்தான் நம் தேவையைக் கோடிட்டு காட்ட வேண்டும்.
பிறந்த நாள், திருமண நாள் என்றால், பரஸ்பரம் வாழ்த்து அட்டை அனுப்பி, குழந்தைகளுடன் சேர்ந்து ஒரு அட்டை என்றால், தனியாக - அந்தரங்கமாக, மெல்லிய, கிளர்ச்சியூட்டும் வார்த்தைகளுடன் இன்னொரு வாழ்த்து அட்டையை அனுப்பி, உங்களது கட்டில் உறவை சாகாமல் வைத்திருக்கலாமே!
"அவர் வரையில் அவர் எல்லாவற்றையும் அனுபவித்து விட்டார்... இனி மேல் அவருக்கு எதுவும் தேவையில்லை. என்னையும் அப்படியே நினைக்கிறார்...' என எழுதியிருக்கிறாய்.
உனக்கு எதுவும் தேவையில்லை என்பதை அவர் அறிந்து கொண்டது எப்படி? உன் நடையுடை பாவனை, விட்டேற்றியானப் பேச்சு, எரிச்சலில் வீட்டு வேலைக்காரிகளிடம் கத்துவது, அவரது சினேகிதர்களைக் கண்டால் முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்வது... இப்படித்தானே!
என்றோ வெளிநாட்டில் பழகிய பெண்கள் அவரது மனசில் இடம் பிடித்திருக்கின்றனர் என்றால், உன்னால் அது முடியாதா?
"இத்தனை வயசுக்கு மேல் புருஷனை மயக்கித்தான் இல்லறம் நடத்த வேண்டுமா...' என்று கேட்டால், என்னைப் பொறுத்தவரையில், அவசியமில்லை என்று தான் நான் சொல்வேன். காரணம், அது என்னுடைய மனப்பாங்கு. "போடா' என்று ஒரு நிமிஷத்தில் உதறிவிட்டு போய்விடலாம் - நானாக இருந்தால்.
ஆனால், இது உன்னைப் பொறுத்த விஷயம், உனக்கு கணவனின் அன்பும், அரவணைப்பும் தேவை. இல்லாவிட்டால் அவள், புருஷனின் சட்டையைக் கிழிப்பாள்; வாட்ச்சை உடைப்பாள்; டைஜின் மருந்துடன் பேதி மருந்தைக் கலந்து வைப்பாள். எப்படியோ தன் கொந்தளிக்கும் மனசுக்கு ஒரு வடிகாலைத் தேட முயற்சிப்பாள்... அப்படித்தானே!
ப்ளீஸ்... இது உன்னையே சிதைத்துக் கொள்ளும் விஷயம். ஒன்று செய்... உன் உடைகளில் கவனம் செலுத்து. உன் சினேகிதிகளிடம், உன் அவரை விடவும் ஜோராக, "ஜோக்' அடித்துப் பேசு.
இன்றைய நாட்டு நடப்பிலிருந்து, சினிமா, நாட்டியம், சங்கீதம் என்று சகலத்தைப் பற்றியும், "டாப் டு பாட்டம்' பேசக் கற்றுக் கொள். முடிந்தால் , மூன்று மாதம் போல, வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளோடு போய் இருந்து விட்டு வா.
கணவர் பூஜைக்கு உட்காரும் முன், நீ அதே சாமிப் படத்தின் முன் கண் மூடி உட்கார். அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, வீட்டு நாய் குட்டியை கொஞ்சு. அவரது நண்பர்களிடம் சரளமாய் பேசு. அவர் கேட்கும் முன்பே வீட்டுக்குள்ளேயே சின்னதாய் பார்ட்டி வைத்து இன்ப அதிர்ச்சிக் கொடு.
எப்போதுமே, நீ உன்னைப் புதுப் பொலிவுடன் வைத்துக் கொள். அவர், தன் தலையணையைத் தூக்கிக் கொண்டு, "உன் பெட்ரூமில் இன்னிக்கு நானும் படுத்துக்கலாமா...' என்று கேட்டால், உடனே, "வித் பிளஷர்' என்று கூறி விடாமல், கொஞ்சம் யோசித்து, "இன்னிக்கு மட்டும்தான்' என்று கூறு... நாளைக்கும் கேட்டால், அப்போது இன்னொரு, "இன்னிக்கு மட்டும் தான்' என்று சொல்லிக் கொள்ளலாம்.
நீ மனசு வைத்தால் எல்லாம் நல்லதாய் நடக்கும்.
அடுத்து வரும் சந்தோஷ நாட்களில் என்னை மறந்து விடாதே!
அன்புடன்
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (17)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JEYAKUMAR - madurai,இந்தியா
13-செப்-201318:10:02 IST Report Abuse
JEYAKUMAR சரி விடுங்க சாமிகளா....... இது அந்த அம்மா தன் புருஷனை உட்கார வைத்து, சம்மட்டியால் போட்டமாதிரி நாலு கேள்வி கேட்டிருந்தால் அனைத்தும் முடிந்திருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Rexon Fernando - Tuticorin(Thoothukudi),இந்தியா
12-செப்-201308:30:03 IST Report Abuse
Rexon Fernando இதே கடிதத்திற்கு அனுராதா ரமணன் பலவருடங்களுக்கு முன்பு பதில் சொல்லி இருந்தார். இப்போது மீண்டும் அதே கடிதம் எப்படி?
Rate this:
Share this comment
Cancel
Prabhakaran Shenoy - CHENNAI,இந்தியா
12-செப்-201307:20:45 IST Report Abuse
Prabhakaran Shenoy கிட்டத்தட்ட எல்லார் பிரச்சனையும் இது போல்தான் . வீட்டுக்கு வீடு வாசற்படி. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என வாழ்பவர்கள் மட்டுமே நித்திய ஆனந்தமாக இருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் ஏங்கியும் புலம்பியும் சாகிறார்கள், மேலை நாடு முறையில் யார் யாருடன் வேண்டுமானாலும் வாழலாம் என எழுதபடாத சட்டம் நடைமுறையில் வருமா தெரியவில்லை/
Rate this:
Share this comment
Cancel
Prabhakaran Shenoy - CHENNAI,இந்தியா
11-செப்-201307:38:39 IST Report Abuse
Prabhakaran Shenoy உங்கள் விலாசம் மொபைல் நம்பர் ஏதாவது கூறவும்
Rate this:
Share this comment
Cancel
தமிழ் சிங்கம் - chennai,இந்தியா
10-செப்-201322:52:39 IST Report Abuse
தமிழ் சிங்கம் இத்தனை வருடங்கள் நீங்கள் ஏமாந்தது போதும். இனியும் ஏமாந்து, மிச்சமுள்ள உங்களின் வாழ்கையை பாழடித்து கொள்ளாதீர்கள். முதலில் விவாகரத்து வாங்குங்கள். அதை வைத்து நீங்கள் தனியாக செம்மையாக வாழ முடியும். உங்களின் வாழ்கையை பாழாக்கிய உங்களின் கணவருக்கு நல்ல பாடம் கிடைக்கும். பிறகு உங்களுக்கு மனம் பிடித்த நல்ல மனிதரை திருமணம் செய்து கொள்வதற்கு முன் குறைந்தது ஆறுமாதங்கள் சேர்ந்து வாழுங்கள். சென்னையில் இப்போதைய IT துறையில் பணிபுரியும் இளைஞர்கள் அதைதான் செய்கிறார்கள். திருமணத்திற்கு பின்னர் வரும் குறைகளை முன்னரே தெரிந்து களைந்து அமைதியாக சந்தோஷமாக வாழ்வதே புத்திசாலித்தனம். அதைதான் நமது சென்னை இளைஞர்களும் மேலை நாட்டவர்களும் செய்து வருகிறார்கள். கால்புனர்சியின் காரணமாகவும் தங்களால் காதலிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தாலும் மேலைநாட்டு கலாச்சாரம் என்று சிலர் கிண்டல் பேசி வருகிறார்கள். அதை கண்டுகொள்ள தேவை இல்லை. எந்த நாட்டு கலாச்சாரமாகவும் இருந்தாலும் நல்லதாக இருந்தால், அதை எடுத்துகொள்வதில் தவறில்லை.
Rate this:
Share this comment
Cancel
Prema Chennai - Chennai,இந்தியா
10-செப்-201312:46:59 IST Report Abuse
Prema Chennai போடா என்று ஒரு நிமிஷத்தில் சொல்லிவிடலாம் நானாக இருந்தால். அன்பு சகோதரி உங்கள் கருத்து முற்றிலும் உண்மை.நான்கு பிள்ளைகள்.இருவருக்கு திருமணம் ஆகிவிட்டது.மற்ற இருவருக்கும் தேவையானவற்றை செய்து கொடுங்கள். ஆன்மீகத்தில் மனதை செலுத்துங்கள். காலம் கடந்துவிட்டது. இனி கட்டுபாட்டுடன் வாழ கற்றுகொள் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக இரு.
Rate this:
Share this comment
Cancel
காயத்ரி - Chennai,இந்தியா
10-செப்-201306:55:35 IST Report Abuse
காயத்ரி உடலால் பிறரைத் தூண்டுவது மட்டுமின்றி மனதால் தீண்டுவதும் செக்ஸ் தான். உடல்தேவைகளுக்காய்க் கணவர் தடம் மாறியிருந்த போதும் மனதால் உங்களையே நேசிக்கிறார் என்று எடுத்துக் கொண்டு மன்னிக்கப் பாருங்கள், இந்த மன்னிப்பும் உங்கள் மன அழுத்தம் மிகாமல் மன அமைதி கிடைப்பதற்காகத் தான். மனம் விட்டுப் பேசுங்கள், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பலவீனம், உங்கள் கணவருக்குப் பிடித்தது போல் உங்களை உருமாற்றிக் கொள்ளுங்கள், ஒரு சிலருக்கு எளிமையாகவும் ஒரு சிலருக்குப் பகட்டாகவும் ஆடை அணியப் பிடிக்கும், சிலருக்கு உணவு பிடித்தமான விஷயமாக இருக்கலாம், வித விதமாகச் சமைத்துப் போடுங்கள், அலுவல்களில் அலுத்துப் போய் வரும் கணவரிடத்தில் அன்பைப் பரிமாறுங்கள். நமக்கே நமக்காய் ஒரு நாளைக்குள் இத்தனை மணித்துளிகள் நேரம் ஒதுக்குங்கள் என்று கேளுங்கள், முடியாதென்றால் வார இறுதி நாட்களிலாவது உங்களுடன் வெளியில் செல்ல வேண்டும், போதும் போதும் எனும் அளவிற்குப் பணம் சம்பாதித்தாயிற்று, இனி எனக்கு உங்கள் அருகாமை வேண்டுமென வெளிப்படையாக, அன்புடன் கேளுங்கள், ரேவதி இயக்கத்தில் ஒரு ஹிந்திப்படம், தமிழிலும் வந்துள்ளது, படப்பெயர் மித்ர, அதில் கணவராலும் பெண் குழந்தையாலும் கண்டுகொள்ளாமல் விடப்படும் பெண்(ஷோபனா) தன்னை வேலைகளில் மும்முரமாக வைத்துக் கொள்ள, கணவரின் பார்வை மனைவி மேல் திரும்பும், அழகான கதை. அதே பாணியில் தான் சில யோசனைகளையும் முன் வைத்திருக்கிறேன். உங்களுக்குக் கிடைக்காத விஷயங்களைப் பற்றிச் சிந்திக்காமல் கிடைத்த நிறைகளை எண்ணி மகிழுங்கள். உங்கள் காதலை வேறு விஷயங்களில் செலுத்துங்கள், ஒரு செடியை நட்டு ஆசையாய் வளர்த்துப் பாருங்கள், வெகு ஆண்டுகளாய் கற்க ஆசைப்பட்ட கலையைக் கற்க முயலுங்கள், புதிதாகக் கற்றலில் மனம் ஈடுபடுத்தப்படும் போது வேறு எண்ணங்கள் உங்களை அரிக்காது. நாய்க்குட்டி வளர்த்து அன்பைக் கொட்டி வளருங்கள், உங்கள் எண்ண அலைகளுடன் ஒத்துப் போகும் தோழிகளுடன் வெளியில் சென்று வாருங்கள், பணத்திற்குப் பிரச்சினையில்லை என்றீர்கள், முடிந்தால் முதியோர் இல்லம், அனாதைகள் ஆசிரமம் சென்று பணத்தால் உதவுங்கள், அன்பைக் கொட்டிப் பழகுங்கள், அதில் கிடைக்கும் ஆத்மதிருப்தி எதிலும் இருக்காது. படிக்க வசதியில்லாத குழந்தைகளுக்குப் படிப்பு இப்படி சிற்சில நன்மைகள் பேரானந்தத்தைத் தரும். மனதில் எந்த எண்ணங்களுக்குத் தீனி போட்டு வளர்க்கிறீர்களோ அந்த எண்ணமே மேலோங்கிப் படுத்தும். நீங்கள் ஏன் அடைந்தே கிடந்து கணவரின் அன்பை எதிர் நோக்கியிருக்க வேண்டும்? நீங்கள் உங்கள் பணிகளில் மும்மரமாக வைத்துக் கொண்டால் 'செக்சுவல் அர்ஜ்' இருக்காது. எந்தத் தேவகுமாரனுக்காகவும் காத்திருக்காதீர்கள், ராஜகுமாரியாய் நீங்கள் உலா வாருங்கள். உங்களால் முடியும். சுயபச்சாதாபம், அதிக எதிர்பார்ப்பு எதுவுமின்றி இயல்பாக உங்களை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ளுங்கள். மனம் விசித்திரமானது, அலையும் மனதை அடக்க நினைத்தால் அலையும், புரிய நினைத்தால் அடங்கும். மாற்றக் கூடியதை மாற்ற வேண்டும், மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். ஐம்பதிலும் இளமையாக உள்ள மனம் இளமையாகவும் புதுமையாகவும் சிந்திக்கட்டுமே.
Rate this:
Share this comment
Cancel
காயத்ரி - Chennai,இந்தியா
10-செப்-201306:54:44 IST Report Abuse
காயத்ரி ஒழுக்கம் தவறிய கணவர் என்று தெரிந்த போதும் நெறி பிறழாமல் உத்தமியாய் வாழும் உங்களுக்குச் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். பாலியல் விருப்பு என்பது இருபாலாருக்கும் பொது தானே. ஆணும் பெண்ணும் சரி சமம் என்று கூறும் சமுதாயம் ஆண் செய்யும் தவறுகளை ஏற்றுக் கொள்கிறது, மன்னித்து, மறந்தும் விடுகிறது, குடும்பம் என்ற கட்டமைப்பு குலையாமல் இருக்கவும் பிள்ளைகள் எதிர்காலம் கேள்விக்குறியாகாமல் இருக்கவும் பெண்மையைப் பணிந்து சகிக்கச் சொல்கிறது. ஒரு பெண்ணின் நியாயமான உயிரியல் தேவையைக் கூட, குறிப்பாக செக்ஸ் தொடர்பான ஆசைகளைக் கணவரிடத்தில் எதிர்பார்ப்பதைக் கூடப் பிழையெனக் கருதுகிறது. மனதைக் கட்டுப்படுத்தி காம எண்ணங்களைத் தவிர்க்க முயலச் சொல்கிறது. ஒழுக்கம் கெட்டு வந்த கணவரை ஆரத்தி எடுக்கச் சொல்லும் சமுதாயம் ஆணிற்கும் பெண்ணிற்கும் தனித்தனி விதிகளை விதித்துள்ளது தான் விந்தையிலும் விந்தை. திருமணமான பின்பு மாமியார்-மாமனாருக்குச் சேவை, கணவரின் விருப்பமான நேரத்தில் மட்டும் கலவி, குழந்தைகள் வளர்ப்பு, கணவர் பிரிவு, கணவரின் ஒழுக்கம் தொடர்பான மன அழுத்தம் என்று பல விஷயங்களும் சேர்ந்து உங்களைப் படுத்திக் கொண்டிருக்கிறது. உங்கள் மனது கணவரின் அருகாமைக்கும் பாசத்திற்கும் தோழமைக்கும் ஏங்கியிருக்கிறது.பலருக்கு உடல் சார்ந்த இன்பங்கள் தான் செக்ஸ் என்றால் உங்களைப் போன்ற பெண்மணிகளுக்கு மனதை வருடும் அன்பான செயல்களே செக்ஸ் தான்.அதைக் கொடுக்கத் தவறியது உங்கள் கணவர், கணவர் தன் தவறுகளுக்குக் குற்ற உணர்ச்சி கொண்டு வருந்தினது போலவும் தெரியவில்லை. குடும்பத்திற்காக உங்கள் இளமையைத் தியாகம் செய்துள்ளீர்கள், அந்தப் பாசத்திற்கு அவர் செவி மடுக்க வேண்டும். நீளம் கருதி அடுத்தப் பத்தியில்...
Rate this:
Share this comment
Cancel
Raman - Chennai,இந்தியா
08-செப்-201323:08:54 IST Report Abuse
Raman 1. இந்த ஆலோசகர் தாம்பத்திய உறவை வைத்து blackmail செய்ய சொல்வது அசிங்கம். அசிங்கதிலும் அசிங்கம். அதே நேரம் 2. @nellai போன்ற வாசக ஆதிக்கவாதிகள் - காமத்தை கொழுப்பு என்று சொல்லி மட்டம் தட்டுவது அசிங்கதிலும் அசிங்கம். 3. அவ்வை சண்முகி சொல்வது போல இயற்கையான ஒரு தேவையையை கலாசாரம், ஆண் உசத்தி என்று மூளை சலவை செய்து இந்திய பெண்களை அவமதிப்பது அதனை விட அசிங்கம். இந்த பெண்ணை சொல்லி குற்றமில்லை - அந்த ஆண் போன்றோர்களை சிலாகித்து பேசும் பலரை காலில் இருப்பதை கழற்றி அடித்தால் பிறகு மாற்றம் வரும்.
Rate this:
Share this comment
Cancel
ஜாம்பஜார் ஜக்கு - Chennai,இந்தியா
08-செப்-201319:20:59 IST Report Abuse
ஜாம்பஜார் ஜக்கு ஆண்-பெண் உறவு முறை மற்றும் ஆணாதிக்கம்- நமது கண்ணோட்டம், நிறைய நாடுகளோடு ஒப்பு நோக்க நமது சமூகம் நிறைய மாற வேண்டும். உங்களுடைய தனிப்பட்ட பிரச்சினைக்கு சுலபமான தீர்வு இருக்கிறது. ஆனால் அதை நமது சமூகம் ஒப்புக்கொள்ளாது. அந்த ஒவ்வாமையால் வரும் பிரச்சினைகள் உங்களுக்கு உள்ள சரியான தீர்வை விட மோசம்மாக இருக்கும். சமூக மாற்றம் வரும் வரை, உங்க பிரச்சினைக்கு தீர்வே கிடையாது.
Rate this:
Share this comment
Gokul - Bangalore,இந்தியா
09-செப்-201320:30:21 IST Report Abuse
Gokulநீங்கள் சொல்ல வரும் சுலபமான தீர்வை தங்களிடம் இருந்தே ஆரம்பிக்கலாம்...மற்ற அன்பர்கள் சொல்லியது போல சற்று இளமையாக நடந்தால் போதும் அனைத்தும் சரி ஆகி விடும்...புரட்சி செய்கிறேன் என்று நிறைய போலிகள் சுத்தி கொண்டு உள்ளன.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.