ஆண்ட்ராய்ட் கிட்கேட்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 செப்
2013
00:00

இது என்ன சாக்லேட் பெயரா? அல்லது ஸ்மார்ட் போனுக்கான புதிய சிஸ்டமா? என்ற கேள்வி மனதில் எழலாம். ஆம், கூகுள் தன்னுடைய ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் பதிப்பு 4.4 க்கான பெயராக, உலகெங்கும் புகழ் பெற்ற, ஸ்விட்சர்லாந்து நெஸ்லே நிறுவனம் தயாரிக்கும், “கிட்கேட்” சாக்லேட் பெயரினைச் சூட்டியுள்ளது. திடீரெனச் சூட்டப்பட்ட இந்த பெயரினைப் பார்த்து, அனைத்து பன்னாட்டு நிறுவனங்களும், வியப்பில் விரல் வைத்து நிற்கின்றன.
நிச்சயம், இந்த அறிவிப்பில், பல மாங்கனிகள் விழத் தொடங்கும்.
கிட்கேட் தயாரிக்கும் நெஸ்லே நிறுவனத்திற்கும், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் தரும் கூகுள் நிறுவனத்திற்கும், இது ஒரு பெரிய விளம்பரத் தினைத் தரும். இந்தப் பெயரை அறிவிக்கும் முகமாக, கூகுள் தன் நிறுவனத் தலைமை அலுவலகத்தில், ஆண்ட்ராய்ட் இலச்சினையை, கிட்கேட் வடிவில் மிகப் பெரிய அளவில் அமைத்து நிறுத்தியுள்ளது.
தன் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கு, உணவுப் பண்டங்களின் பெயர்களை வைப்பது கூகுளின் பழக்கமாகும். இதுவரை கப்கேக், டோனட், எக்ளேய்ர், ப்ரையோ, ஹனி கோம், ஐஸ்கிரீம் சாண்ட்விச், ஜெல்லி பீன் (Cupcake, Donut, Eclair, Froyo (short for frozen yoghurt), Gingerbread, Honeycomb, Ice Cream Sandwich மற்றும் Jelly Bean) எனப் பொதுப் பெயர்களையே வைத்த கூகுள், தன் அடுத்த ஆண்ட்ராய்ட் பதிப்பிற்கு, “கீ லைம் பை” என்ற பொதுவான பெயரைச் சூட்டும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், “கிட்கேட்” பெயர் சூட்டப்பட்டுள்ளது, பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் பெயர்கள், உணவிற்குப் பின் சாப்பிடப்படும் சாக்லேட், கேக், ஐஸ்கிரீம் பெயர்களாக இருந்தாலும், இவற்றின் வரிசையில், ஆங்கிலமொழி அகர வரிசை இருப்பதைக் காணலாம். எனவே புதிய ஆண்ட்ராய்ட் பதிப்பிற்கு கே (ஓ) எழுத்தில் தொடங்கும் பண்டத்தினை வைக்க வேண்டிய கட்டாயம். அதற்காகவே, கீ லைம் பை என்ற பெயர் வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கூகுள் திடீர் என ஒரு சந்தோஷ அதிர்ச்சியைத் தந்துள்ளது. கீ லைம் பை பண்டத்தின் சுவை அவ்வளவாக யாருக்கும் தெரியாததனால், இந்த முடிவிற்கு கூகுள் வந்திருக்கலாம்.
உலகெங்கும் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில், நூறு கோடிக்கு மேலான எண்ணிக்கையில் சாதனங்கள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு நாளும் 15 லட்சத்திற்கும் மேலான எண்ணிக்கையில் புதிய சாதனங்களில், ஆண்ட்ராய்ட் பதிக்கப்படுகிறது. மிக அதிகமான எண்ணிக்கையில், மொபைல் சாதனங்களில் (ஸ்மார்ட் போன், டேப்ளட் பிசி) பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம், ஆண்ட்ராய்ட் ஆகும்.இவை அனைத்திலும், இனி ஆண்ட்ராய்ட் கிட்கேட் இயங்கும் என எதிர்பார்க்கலாம்.
இனி, ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம்குறித்து யார்,எப்போது,எந்த ஆண்டில் பேசினாலும், கிட் கேட் பெயரும் கூறப்படும். இது நெஸ்லே தயாரிக்கும் கிட்கேட் சாக்லேட்டிற்கு, பல்லாண்டு கால விளம்பரமாக இருக்கப் போகிறது.
இந்த சிறப்பான நிகழ்வினை ஒட்டி, நெஸ்லே நிறுவனம் என்ன செய்யப் போகிறது? இதற்கென எந்தப் பணத்தையும் கூகுள் பெறவில்லை என அடித்துச் சொல்லியுள்ளது நெஸ்லே. நெஸ்லே இந்த வாய்ப்பைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தவும், நன்றிக் கடனாகவும், தன் கிட்கேட் சாக்லேட்டில், ஆண்ட்ராய்ட் இலச்சினையை அச்சடித்து வெளியிடுகிறது. இந்த வகையில், ஸ்பெஷலாக, 5 கோடி சாக்லேட்டுகள் தயாரிக்கப்பட்டு, உலகெங்கும், பிரிட்டன், அமெரிக்கா, பிரேசில்,ரஷ்யா மற்றும் இந்தியா உட்பட, 19நாடுகளில் விற்பனை செய்யப்படும். சாக்லேட் சுற்றப்படும் கவர் பேப்பரில், போட்டிக்கான அறிவிப்பு ஒன்று இருக்கும். வெற்றி பெறும் ஆயிரம் பேருக்கு, நெக்சஸ் 7 டேப்ளட் பிசிக்கள் வழங்கப்படும். ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு, கூகுள் பிளே ஸ்டோருக்கான 5 டாலர் மதிப்புள்ள கிரெடிட் வவுச்சர் வழங்கப்படும். இந்தப் போட்டி, செப்டம்பர் 6 தொடங்கி, வரும் ஜனவரி 31 வரை நடத்தப்படுகிறது.
இதில் இன்னொரு பக்கமும் உள்ளது. ஏற்கனவே கிட்கேட் மக்களிடையே உலக அளவில் பிரபலமான ஒரு சாக்லேட். எனவே, புதியதாக வர இருக்கும் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் 4.4 பதிப்பு, சரியாக இயங்கவில்லை என்றாலோ, அல்லது மால்வேர் போன்ற கெடுக்கும் புரோகிராம்கள் உள்ளே நுழைய இடம் கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டாலோ, கிட் கேட் சாக்லேட்டின் பெயர் கெட்டுப் போகும்.
ஸ்மார்ட் போன் சந்தையில் இயங்கும் போன்களில், 79% போன்களில், ஆண்ட்ராய்ட் இயங்குகிறது. இந்த புதிய பெயர் சூட்டல், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்திற்குக் கூடுதல் விளம்பரத்தினையும், ஆரவாரத்தினையும் தந்துள்ளது. அடுத்து, இதனை எதிர் கொள்ளும் வகையில், ஆப்பிள் நிறுவனம் என்ன செய்யப் போகிறது என்று அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். செப்டம்பர் 10ல், இதன் புதிய ஐபோன் வரலாம் என அனைவரும் எண்ணுகின்றனர். குறிப்பாக, பட்ஜெட் விலையில், ஆப்பிள் ஐபோன் ஒன்றை அறிமுகப்படுத்தி, அனைத்து நிலை மக்களும், ஐபோனைப் பயன்படுத்தக் கூடிய சூழ்நிலையை உருவாக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. காத்திருந்து பார்ப்போம்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X