வாத்யங்களின் அரசியான வீணைக்கு ஒரு உற்சவம்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 செப்
2013
00:00

முத்ரா மற்றும் பிரம்ம கான சபை இணைந்து, வீணை உற்சவத்தை, கடந்த ஐந்து ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இதில், 28 வீணைக் கலைஞர்கள் தென்னிந்தியாவின், நான்கு மாநிலங்களிலிருந்து வந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர். டி.என்.சேஷகோபாலன் விழாவை துவக்கி வைத்தார்.
பொதுவாக இன்று வீணை இசைக் கச்சேரி மிகவும் குறைந்து போய்விட்ட நிலையில், முத்ரா பாஸ்கர், பிரம்ம கான சபை பாலு மற்றும் வீணை கலைஞர் பி.கண்ணன் போன்றோர் வீணை மாரத்தான் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, அதன் மூலம் பல ரசிகர்கள் பயன் அடையச் செய்தனர்.
வீணை இந்திய நாட்டின் மங்களகரமான இசைக் கருவி. "வாத்யங்களின் அரசி' என்று போற்றப்படுகிறது. மேலும் வேத காலம் தொட்டே வீணை வாசிக்கப்பட்டு வருகிறது. மேலும், குரலிசையில் கொடுக்க முடியாத கமகங்களை, வீணையில் கொடுக்க முடியும் என்பதால், இதை, "பேசும் வாத்யம்' என்பர். வீணை, கர்நாடக சாஸ்திரீய சங்கீதத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம்.
மேலும், நம் இந்தியத் தெய்வ வழிபாட்டில் இறை மூர்த்தங்கள் பல வீணையை தாங்கி நிற்பதன் மூலம், இதன் தெய்வீகத் தன்மையையும் உணர முடியும். இந்திய கலாசாரப்படி, நமது வாழ்வியலிலும், வீணை மிகச் சிறந்த தொடர்புடையது. ஒரு பெண் கருவுற்று எட்டு மாதம் ஆனவுடன் நடைபெறும் சீமந்தம் எனப்படும் வளைகாப்பு நிகழ்வின்போது, மந்திர ஒலியுடன் வீணையை இசைத்து வாசிக்கச் செய்து, வயிற்றிலிருக்கும் சிசுவை கேட்க வைக்கும் பழக்கம் இன்று வரை நடைமுறையில் உள்ளது.
ஆனால், ஏன் பலர் இவ்வாத்யத்தை கற்க முன்வருவதில்லை? தெரிந்து கொள்ளக்கூட ஆசைப்படுவதில்லை என்பது தான் வியப்பாக உள்ளது. மேலும் சபாக்கள், தங்களது பிரதான கச்சேரிகளின்போது வீணைக் கச்சேரிகளுக்கு அதிகளவு வாய்ப்பளிப்பதில்லை. வீணைக் கச்சேரி செய்பவர்களும் காலத்திற்கேற்ப பல தெரிந்த பாடல்களையும், தமிழ் பாடல்களையும் வாசிப்பதோடு அந்த பாடலுக்குரிய ராகம், தாளப் பாடலை இயற்றியவரின் குறிப்புகளோடு கொடுத்தால், ரசிகர்களுக்கு மிகவும்
பயன்படும்.
இவ்வருட வீணை உற்சவத்தின் தனிச் சிறப்பு, அண்டை மாநில கலைஞர்களின் பங்களிப்பு. முடிகொண்டான் ரமேஷ் கச்சேரியில் அவர் நடபைரவி ராக ஆலாபனை செய்து, "ஸ்ரீவல்லி தேவசனாபதே' பாடலை, தேவ கானமாய் இசைக்க, கேட்ட மனம் துள்ளி குதித்து, வள்ளி தெய்வானை மணாளனை மகிழ்ந்து துதித்தது. மதுரை டி.என்.சேஷகோபாலன் தன் குரலிசை பாணியில் பூர்வி கல்யாணி ராக ஆலாபனையை மிக அழகாக சம்பிரதாயமாக வாசித்து, "நின்னுவினா' பாடலையும், கற்பனை ஸ்வரத்தையும் கொடுத்தார்.
அடுத்து ஆஹரி ராகத்தில் அமைந்த, "மாயம்மா' என்று தொடங்கும் பாடலுக்கு வாசித்தார். ஆஹிரி ராகம் கேட்பதே அரிது. வாசிப்பவர்களே அரிது எனும்பட்சத்தில் பாடலுடன் பரம சுகமாக ரசிகர்கள் கிடைத்ததில் மகிழ்ந்தனர். பத்மாவதி அனந்தகோபாலன் வீணை வாசிப்பு மிகவும் சிறப்பானது. கல்யாணி ராகம், ஒரு சிறு சுற்று ஆலாபனையை கொடுத்தாலும், கண்ணன் மண்ணை உண்டு, உலகம் முழுவதும் தன் சிறு வாய்க்குள் காண்பித்தது போல், இவர், கல்யாணியை அழகாக நமக்கு கொடுத்தபோது, வீணையின் தனிச்சிறப்பு ரசிகர்களுக்கு புரிந்தது.
அடுத்து பி.கண்ணன். இவர் வாசிப்புக்கு பல ரசிகர்கள் உண்டு. இவர் ஒரு ராகம், தாளம், பல்லவி ஸ்பெஷலிஸ்ட். சுசரித்ரா ராகத்தை எடுத்துக் கொண்டு ராக ஆலாபனை, அதைத் தொடர்ந்து வீணை வாத்யத்துக்கே உரித்தான தாளம் கேட்க, கேட்க மனம் துள்ளிக் குதித்தது. தேவியின் மீது அழகான பல்லவியை அமைத்து, இசை எனும் தேரில் வீணையை பூட்டி, நான்கு தந்திகளை வடமாக்கி, அனைத்து கலைஞர்களும் வலம் வந்தனர் என்றால் அது மிகையில்லை.
- ரசிகப்ரியா

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.