Advertisement
அம்சநாதம் இசை பள்ளி ஆண்டு விழா
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

பதிவு செய்த நாள்

10 செப்
2013
00:00

சென்னை மந்தைவெளிப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள, அம்சநாதம் இசைப் பள்ளி மூலம், இளம் இசைக் கலைஞர்களை, திறம்பட உருவாக்கி வருகிறார், டாக்டர் சுபா கணேசன். டாக்டர். சுபா கணேசன் நடத்தி வரும், அம்சநாதம் இசைப் பள்ளியின், 18ம் ஆண்டு விழா, அண்மையில் மயிலை பி.எஸ்., மேல்நிலைப் பள்ளி தட்சிணாமூர்த்தி ஆடிட்டோரியத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
பத்மபூஷண் சங்கீத கலாநிதி மதுரை டி.என்.சேஷகோபாலன், சென்னை மியூசிக் அகடமி செயலர், டாக்டர். மாலதி ரங்கசுவாமி ஆகியோர் நிகழ்ச்சிக்கு வந்திருந்து சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற, பத்மபூஷண் டி.என்.சேஷகோபாலன், இந்த விழாவில், சங்கீதம் பயிலும் மாணவ மணிகள், இசையைக் கையாள வேண்டிய விதம், அறிய வேண்டிய இசை நுணுக்கங்கள் பற்றி சிறப்பாக விளக்கினர்.
ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுடைய, புகழ் பெற்ற பஞ்சரத்ன கிருதிகளை, பாட வேண்டிய முறைகளையும், தானே அருமையாகப் பாடிக்காட்டி விளக்கினார். "வாக்கேயக்கார வைபவம்' என்ற சிறப்புத் தலைப்பில், அம்சநாதம் இசைப் பள்ளி மாணவ மணிகள், சிறப்பான சாகித்யங்களையும், கிருதிகளையும், குரு குஹாஞ்சலி என்ற சிறப்புத் தலைப்பில், ஸ்ரீ முத்துசாமி தீட்சிதருடைய புகழ் பெற்ற, கிருதிகளையும் சுருதி சுத்தமாக, ஒன்றிணைந்து பாடினர்.
- மாளவிகா

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.