சஞ்சனாவின் முத்தான நாட்டிய அரங்கேற்றம்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 செப்
2013
00:00

சுருதி நாட்டியாலயா நடனப் பள்ளியின் நிறுவனர் முருகேஷ். இவர் கலா÷க்ஷத்ராவின் நட்சத்திர கலைஞரான அடையார் கே.லட்சுமண் சீடர். தனது நடனப் பள்ளி மூலம் பல அரங்கேற்றங்களையும், உலகின் பல நாடுகளிலும் தனது மாணாக்கர்களை உருவாக்கி, பல நல்ல தரமான நடன நிகழ்ச்சிகளைக் கொடுத்து வருகிறார். அரங்கேற்ற நடனக் கலைஞர் சஞ்சனா, வேளச்சேரி டி.ஏ.வி., பப்ளிக் பள்ளியில் பிளஸ்1 படிக்கிறார். தனது ஏழு வயதில் நடனம் பயிலத் துவங்கி, எட்டு வருடங்களில் நாட்டியத்தை, அதன் முக்கியத்துவம் அறிந்து கற்று, பல இடங்களில் தனியாகவும், குருவுடனும் இணைந்தும் நிகழ்ச்சிகளைக் கொடுத்து வருகிறார்.
இவருடைய அரங்கேற்றத்தில் அவருக்கு பக்க பலமாக, தன் தந்தை நடன குரு முருகேசுடன் பாடிய சூர்யா இளம் குரலிசைக் கலைஞர். சொக்கத் தங்கமான குரலுக்கு சொந்தக்காரர். டி.வி.ஜி.,யின் சிஷ்யர். இவரும் சஞ்சனாவுடன் சேர்ந்து, அதே பள்ளியில் ப்ரிகேஜி முதல் பிளஸ் 2 வரை நன்றாக இணைந்து படிக்கிறார். அதன் அடையாளமாக பள்ளியின் முதல்வரில் இருந்து அவர்களது நண்பர்கள் கூட்டம் திரள் திரளாக வந்திருந்தனர்.
சஞ்சனா தன் நிகழ்ச்சியின் முதல் பாடலாக மல்லாரி இசை வடிவத்துக்கு, தனது குரு நடன அமைப்பு செய்ததற்கு, கரம்பீர நாட்டை ராகத்தில், பத்மனாபன் நாதஸ்வரத்தில், மல்லாரியை வாசிக்க, செந்தில் குமார் தவிலில் இணைய, சஞ்சனா, நடராஜப் பெருமானை தன் நடனத் தேரில் தூக்கி நடன வலம் வந்தார்.
அடுத்து, ஹம்சத்வனி ராகத்திலும் சதுஸ்ர ஏக தாளத்தில் அமைந்த நடேச கவுத்துவத்தையும், அதைத் தொடர்ந்து சரஸ்வதி ராகத்தில் அமைந்த ஜதீஸ்வரம், ராகமாலிகையில் அமைந்த, "தில்லை அம்பலம்' எனத் தொடங்கும் சப்தம், என, நடன மார்க்கத்தின் முக்கியமான தொடக்க உருப்படிகளை சிறப்பாக ஆடினார். பிரதான இசை வடிவமான வர்ணத்திற்கு தஞ்சை பெரியசாமி தூரனின் பைரவி ராக, "நந்தகோபாலனே' எனத் தொடங்கும் பல்லவியின் வரிகளில் அனைவரின் சிந்தை கவர்ந்தவனை மெய்யுருக அழைத்தார்.
இரண்டாவது பாகம் உத்ராங்கத்தில் சீர்மிகு பிருந்தாவனத்தின் அழகு, யசோதாவின் மேல் உள்ள வாஞ்சை, பரிவுடன் பாஞ்சாலியின் மானம் காத்து, விண்ணும் மண்ணும் மயங்க விந்தை புரிந்த தசாவதாரத்தை ஒரு சுற்று காண்பித்து ஆடி முடித்தார்.
ஒரு அவதாரக் கதையை வர்ணத்திற்குள் முடிப்பது என்பது எத்தனை கடினம் என்பதை அறிந்த ரசிகர்கள், கை தட்டி பாராட்டினர்.
அடுத்து, தேவி ஸ்துதி. இதற்கு முத்துசுவாமி தீட்சிதரின் மிக அருமையான கிருதி ஸ்ரீவித்யா உபாசகரான தீட்சிதர், லலிதா தேவியை எட்டாவது வேற்றுமையில் அமைந்த ராக மாலிகைப் பாடலைக் கேட்பதே மிக அபூர்வம். அப்படி இருக்க, நடனத்திற்காக தேர்வு செய்து, சஞ்சனா ஆடியபோது, மனம் நெகிழ்ந்தது.
சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் லலிதா மாதா, மதுகைபடர், மஹிஷன், சும்பநிசும்ப அரக்கர்களை அழித்து, தர்மத்தை நிலை நாட்டியவள். முருகன், பிரம்மா, பரசுராமர், மகாலட்சுமியின் மணாளன், தேவர்கள், ஹயக்ரீவர், அகத்தியர் என அனைவராலும் துதிக்கப்படுபவள். இவளை ஆராதிப்பதினால் மட்டுமே கடைத்தேற முடியும் என்பதை விளக்கும் பாடலுக்கு மிக அருமையாக ஆடி ரசிகர்களை கவர்ந்தார். நிறைவாக, பாலமுரளியின் கதன குதூகல ராகத் தில்லானாவை சூர்யா உருகி உருகி பாட, சஞ்சனா மிக விறுவிறுப்பாக ஆடி நிறைவு செய்தார்.
நடன அரங்கேற்றம் மிக அழகாக, அவர்களது பெற்றோர் ரேவதி முத்துகுமரன் மற்றும் இளைய பாரதத்தின் செல்வர்கள் ஒன்று சேர்ந்து எடுத்த விழாவாக அமைந்தது என்பது தான் நிதர்சனமான உண்மை.
- ரசிகப்ரியா

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.