பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 செப்
2013
00:00

நீங்கள் தரும் தொழில் நுட்பச் சொற்கள் பகுதியில், புதியதாக வந்துள்ள சொற்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிக விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கே.பாலன், சென்னை.

வித்தியாசமான டெக்ஸ்ட் தேர்வு, மிக அருமையான, இதுவரை அறியாத ஒரு வழியைக் காட்டியுள்ளது. இப்படி எத்தனை ரகசிய உதவிக் குறிப்புகள் உள்ளனவோ! நிறைய இது போன்று வழங்கவும்.
என். மாரிமுத்து, மதுரை.

மைக்ரோசாப்ட் நோக்கியாவை வாங்கிய நிகழ்வினை, மிகத் தெளிவாகவும், அதனால், இரு நிறுவனங்களுக்கு ஏற்பட இருக்கும் சாதக பாதகங்களையும் மிக விரிவாகத் தந்திருக்கிறீர்கள். இரு நிறுவனங்களுக்குமே இது கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய ஒரு செயல்பாடு என்பதனை விளக்கியுள்ளது அருமை. பாராட்டுக்கள்.
பேரா. டாக்டர் என்.சதாசிவம், மதுரை.

என்ன இருந்தாலும், நோக்கியாவிற்கு இது ஒரு சரிவுதான். உலக மொபைல் மார்க்கட்டில் கோலோச்சிய இந்நிறுவனத்தின் வீழ்ச்சி, மற்ற நிறுவனங்களுக்கு ஒரு பாடம்.
சி.எல். உமா சந்திரன், திருப்பூர்.

சிகிளீனர் டூப்ளிகேட் பைல்களை நீக்கும் என்பதனை உங்கள் டிப்ஸ் கட்டுரையைப் படித்த பின்னரே தெரிந்து கொண்டேன். நன்றி.
ஏ.கே. மஹேந்திரன், கோவை.

கம்ப்யூட்டர் தரும் பொதுவான பிரச்னைகள் என்ற கட்டுரையில் தரப்பட்டுள்ள அனைத்துமே, பயனாளர்கள் சந்திக்க்கும் பிரச்னைகளே. பிரச்னைகளுக்கு நீங்கள் தந்திருக்கும் தீர்வுகள், நல்ல படிப்பினையைத் தருவதாகவும் உள்ளன. நன்றி.
என். காயத்ரி, ஹோசூர்.

வெப்சைட் செக்யூரிட்டி சர்டிபிகேட் பிரச்னை அடிக்கடி என் பிரவுசிங் போது ஏற்படுகிறது. ஒருவரின் உதவியுடன் சீமாஸ் பேட்டரி மாற்றினேன். இனி பிரச்னை வராது என்றே நினைக்கிறேன்.
கா. மருதநாயகம், செங்கல்பட்டு.

விண்டோஸ் எக்ஸ்பியை நாம் கைவிட்டே ஆக வேண்டும். இது குறித்து ஒவ்வொரு வாரமும் நீங்கள் தரும் குறிப்புகள் மற்றும் தகவல்கள் நல்ல முடிவெடுக்க உதவுகின்றன. நன்றி.
சி. உதயகுமார், விழுப்புரம்.

புதிய ஆண்ட்ராய்ட் சிஸ்டம் கிட்கேட் போல இனிக்கும் வகையில் புதிய வசதிகளைத் தரும் என எதிர்பார்க்கலாம். கூடுதல் தகவல்களுடன் மிகச் சிறப்பாக கட்டுரையினைத் தந்த உங்கள் துணை ஆசிரியர் பாராட்டுக்குரியவர்.
சி. மோகனா ராஜ்குமார், பழநி.

ஆண்ட்ராய்ட் கிட்கேட் கட்டுரையைப் படித்த பின்னரே, ஆண்ட்ராய்ட் எப்படி உலகளாவிய அளவில் பரந்து விரிந்து பயன்படுத்தப்படுகிறது என்பதனை உணர்ந்து தெரிந்து கொண்டேன். நானும் ஒரு ஆண்ட்ராய்ட் பயனாளர் தான்.
எஸ். ஆர். ரங்கநாதன், புதுச்சேரி.

ஒரு பக்கம் ஆடம்பரமாக இருந்தாலும், அறிவியல் உலகின் அடையாளமாக வந்திருக்கும் காலக்ஸி ஸ்மார்ட் வாட்ச் பயனுள்ள ஒரு சாதனம் தான். விரைவில் தனியாகவே பயன்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
பழ.செல்லப்பன், காரைக்குடி.

கிடைக்கும் தகவல்கள் மற்றும் செய்திகள் அனைத்தும், இனி ஸ்மார்ட் போன்கள் தான், தொடக்க நிலை போனாக அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். நீங்கள் கொடுத்துள்ள தகவல்களும் இதனை உறுதி செய்கின்றன.
ஆர்.எஸ்.புஷ்பவனம், கடலூர்.

விண்டோஸ் 7 சிஸ்டத்தில், மவுஸ் பாய்ண்ட்டர் மாற்றுவது குறித்து என் கேள்விக்கு நீங்கள் அளித்துள்ள விளக்கம் தெளிவாக இருந்தது. மிக்க நன்றி.
என். மெர்சி கிருபா ராணி, புதுச்சேரி.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X