ஐபோன் விலை இந்தியாவில் குறைக்கப்பட வேண்டும்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 செப்
2013
00:00

ஸ்மார்ட் போன் பயன்பாட்டிலும், விற்பனைச் சந்தையிலும், இந்தியா, வேகமாக வளர்ந்து வரும் நாடாக உள்ளது. புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் நுட்ப வசதிகளுக்கு நம் நாட்டவர் எப்போதும் தீராப் பசியோடுதான் இருப்பார்கள் என்பதனை, வெளிநாட்டு மொபைல் போன் தயாரிப்பாளர்கள் அறிந்து வைத்துள்ளனர். அதனாலேயே, மொபைல் போன் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து முடிவெடுக்கையில், இந்தியர்களின் எண்ணங்களுக்கு அதிக மதிப்பு கொடுத்து வருகின்றனர்.
ஆனால், தற்போது ஒரு சின்ன பிரச்னை இதில் எழுந்துள்ளது. இந்தியாவில் மொபைல் போன் தயாரிப்பில் ஈடுபடும் இந்திய நிறுவனங்கள், பட்ஜெட் விலையில், மிகவும் குறைவான விலையில், போன்களைத் தயாரித்து வழங்கத் தொடங்கி உள்ளனர். இதனால், பல பன்னாட்டு நிறுவனங்களும், தங்கள் போன்களை குறைந்த விலையிட்டு விற்பனை செய்யத் தொடங்கி உள்ளனர். குறைந்த விலையிட்டு விற்பனை செய்வதற்காகவே, போன்களின் வடிவமப்பையும், இந்தியாவில் விற்பனை செய்வதற்கென மாற்றி வருகின்றனர்.

உயர்ரக போன்களின் கதி?
இத்தகைய சூழ்நிலையில், ஆப்பிள் போன்ற உயர் ரக போன்களைத் தயாரித்து, உயர்ந்த விலையிட்டு விற்பனை செய்திடும் ஆப்பிள் போன்ற நிறுவனங்களின் நிலை என்ன? இதன் போனின் சராசரி குறைந்த விலை ரூ.40,000 ஆக உள்ளது. இது உயர்நிலையில், ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவரின், ஒரு மாத கால ஊதியமாக உள்ளது. இதனாலேயே, ஆப்பிள் நிறுவனம் அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கும் ஐபோன் 5 எஸ் மற்றும் ஐபோன் 5 சி ஆகியவை உயர் மத்திய வகுப்பினர் மட்டும் செல்வந்தருக்குக் கூட கிடைக்காத நிலையை உருவாக்கியுள்ளன.
சாம்சங் மற்றும் எல்.ஜி. போன்ற நிறுவனங்கள், இந்த வகையில் அதே வசதிகள் கொண்ட போன்களை வடிவமைத்து விற்பனை செய்தாலும், அவை அனைவரும் வாங்கும் நிலையிலேயே விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. ஆனால், ஆப்பிள் நிறுவனம் இந்த மத்திய தர வகுப்பினர் வாங்கும் நிலையில் எந்த போனும் கொண்டிருக்கவில்லை. முன்பு வெளியான பழைய போன்களைத்தான் விலை குறைத்து விற்பனை செய்கிறது.

ஐபோன் 5 சி - இந்தியாவிற்கு இல்லை?
ஆப்பிள் அண்மையில் அறிமுகப்படுத்திய இரண்டு போன்களில், ஐபோன் 5 சி, பட்ஜெட் விலை போன் எனத் தெரிவிக்கப்பட்டது. ஐபோன் 5 எஸ் போனுடன் ஒப்பிடுகையில், இதன் விலை குறைவாக இருக்கலாம். ஆனால், ஐபோன் 5 சி இந்தியாவிற்கான பட்ஜெட் விலை போனாக இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், வெளிநாடுகளில், மொபைல் சேவை நிறுவன ஒப்பந்தத்தில் இல்லாத ஐபோன் 5 சி போன் ஒன்றின் விலை 549 டாலர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நியச் செலவாணி மாற்றத்தின் படி பார்த்தால், இதன் இந்திய விலை ரூ. 35 ஆயிரமாக இருக்க வாய்ப்புண்டு. மேலும், ஐபோன் 5 மற்றும் ஐபோன் 5 எஸ் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில், ஐபோன் 5 சியின் பிளாஸ்டிக் கவர் சற்றாக இதன் தரத்தினைக் குறைக்கிறது. எனவே, மக்கள் இதே வசதிகளைத் தரும், பிற நிறுவனங்களின் குறைந்த விலை போன்களை நாடிச் செல்லும் வாய்ப்புண்டு.
எனவே, ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 5 சி, இந்தியாவில் அதிகம் விற்பனை ஆக வேண்டும் எனில், அதன் விலை ரூ.15,000 முதல் ரூ.25,000க்குள் இருக்க வேண்டும். பழைய மாடல் ஐபோன்4, 8 ஜிபி திறன் கொண்டதாக இருந்தால், ரூ.22,000 எனத் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. எனவே, புதிய போனின் விலை இந்த அளவைக் காட்டிலும் சற்று அதிகமாக இருப்பதே நல்லது.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X