இணையத்தில் இலவசமாக உங்கள் வர்த்தகம்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 செப்
2013
00:00

கூகுள் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு, இந்திய வர்த்தகர்களை, தங்கள் செயல்பாட்டினை இணையம் வழியே மேற்கொள்ளுமாறு அழைத்துள்ளது. இந்த வகையில், 2014 ஆம் ஆண்டுக்குள், குஜராத் மாநிலத்தில், 50,000 சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களைக் கொண்டு வர, இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கென,இலவச இணைய தளங்களை வழங்குகிறது. வணிகத் தளங்களை, இணையத்தில் அமைத்திடும் செயல்பாட்டில், தொழில் நுட்ப ரீதியாக உதவி செய்திட, குஜராத்தில் 200க்கு மேற்பட்ட கூகுள் பொறியாளர்கள் செயல்படுவார்கள். இந்த நிறுவனங்கள், கூகுள் மேப்பிலும் மக்கள் அறியும் வகையில் இடம் பெறும். இவை அனைத்தும் முதல் ஆண்டுக்கு முற்றிலும் இலவசமே. பின்னர், இந்த நிறுவனங்கள், தாங்கள் விரும்பினால், கூகுள் நிறுவனத்திடமே தொடர்ந்து இந்த சேவையைப் பெறலாம். இதற்கு மாதம் ரூ.1,000 கட்டணமாகச் செலுத்த வேண்டும். அல்லது வேறு நிறுவனங்களின் சர்வர்களில், தங்கள் வர்த்தக நிறுவன இணைய தளத்தை அமைக்கலாம்.
இந்தியப் பொருளாதார வளர்ச்சியில், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களே பெரும் பங்கு வகிக்கின்றன. ஆனால், இணையம் வழி வர்த்தகத்தை மேற்கொள்வதில், மிகச் சில நிறுவனங்களே, ஆர்வம் காட்டி வருகின்றன. குஜராத் மாநிலத்தில் தான், அதிக எண்ணிக்கையில், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவை, இணையத்தில், வர்த்தக செயல்பாட்டினை மேற்கொள்ளும் பட்சத்தில், இவற்றின் வர்த்தக வாய்ப்புகள் பெரிய அளவில் விரியும் வாய்ப்புகள் உள்ளன. புதிய விற்பனைச் சந்தையினை இவை பெற முடியும். மொத்த வருமானம் 51 சதவீதம் உயரும். கூடுதல் லாபம் 49 சதவீதம் அதிகரிக்கும் என ஓர் ஆய்வு தெரிவித்துள்ளது. இந்தியாவின் 15 கோடி இணையப் பயனாளர்களில், பத்து சதவீதம் பேர், குஜராத் மாநிலத்தில் உள்ளனர்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X