எக்ஸெல்: திருத்தியபின் கணக்கிடும்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 செப்
2013
00:00

எக்ஸெல் ஒர்க் புக்கில், பார்முலாக்களை அமைப்பது அதன் முக்கிய செயல்பாடாகும். பார்முலாக்களை அமைத்த பின்னர், அவை இயங்கத் தேவையான டேட்டாக்களை, அவற்றிற்கான செல்களில் அமைக்கிறோம். உடனே, அந்த பார்முலாக்கள், டேட்டாக்களைக் கையாண்டு, விடைகளைக் குறிப்பிட்ட செல்களில் ஏற்படுத்தும். ஏற்கனவே, அமைக்கப்பட்ட டேட்டாக்களில் மாற்றங்களை ஏற்படுத்தினால், என்ன நடக்கும்? உடனடியாக, பார்முலாக்கள் செயல்பட்டு, முடிவுகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். அதாவது, நாம் மேற்கொள்ளும் மாற்றங்களின் அடிப்படையில் எக்ஸெல் எப்போதும் அப்டேட்டாகவே இருக்கும். இது பல வழிகளில் நமக்கு உதவுகிறது. பெரிய ஒர்க்ஷீட்டுகளில் செயல்படுகையில் நாம் ஒவ்வொரு செல்லிலும் சென்று நாமாக திருத்தப்படும் டேட்டாவிற்கேற்ற வகையில் முடிவுகளை மாற்ற முடியாது.
ஆனால், ஒரு சிலர் தாங்களாகவே சில டேட்டாக்களையும், அது சார்ந்த முடிவுகளையும் மாற்ற விரும்புவார்கள். எக்ஸெல் இந்த முடிவுகளைக் கணக்கிட அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்று சொல்பவர்களும் உண்டு. மெதுவாகச் செயல்படும் கம்ப்யூட்டர்களில் இவ்வாறு அமையலாம். அவ்வாறு தாங்களாகவே கணக்கிட்டு அமைக்க விரும்புபவர்கள், எக்ஸெல் தொகுப்பில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். அவற்றை இங்கு பார்க்கலாம்.
1. Tools மெனுவிலிருந்து Options தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் உங்களுக்கு Options Options Dialogue Box காட்டும்.
2. இந்த விண்டோவில் உள்ள Calculation என்னும் டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை உறுதி செய்திடவும்.
3. அதில் Manual என்னும் ரேடியோ பட்டன் தேர்ந்தெடுக்கவும்.
பின் OK கிளிக் செய்திடவும்.

உங்களிடம் எக்ஸெல் 2007 இருந்தால் கீழ்க்காணும் மாற்றங்களை ஏற்படுத்தவும்.
1. Office பட்டனில் கிளிக் செய்திடவும்.
2. பின் Excel Options என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது எக்ஸெல் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்.
3. இதன் இடது பக்கத்தில் உள்ள Formulas என்ற ஏரியாவில் கிளிக் செய்திடவும்.
4. டயலாக் பாக்ஸின் Calculation Options என்ற பிரிவில் உள்ள Manual ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுக்கவும்.
பின் OK கிளிக் செய்திடவும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X