பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30 செப்
2013
00:00

ஆட்டோ கம்ப்ளீட் தான், நம் மின்னஞ்சல் மற்றும் பிற தகவல்களைத் தானாக நிரப்புவதற்கான காரணி என்பதைப் புரிய வைத்ததற்கு நன்றி.
என். கோகிலா, சிதம்பரம்.

பொதுவாக கம்ப்யூட்டர் செயல்பாட்டினை விளக்கும் அருமையான படங்களை பதிவு செய்வீர்கள். இந்த முறை, கிராமத்து மண்ணில், எழுதப்படிக்கத் தெரியாத பெண் ஒருவருக்குக் கம்ப்யூட்டர் பயன்படுத்தச் சொல்லிக் கொடுக்கும் பெண்ணின் படம் போட்டு, நாம் எந்த திசையை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதைக் காட்டியுள்ளீர்கள். ஹேட்ஸ் ஆப் டு யு.
ஆர். லோகநாதன், கோயம்புத்தூர்.

விண்டோஸ் எக்ஸ்பியை விட்டுவிடத்தான் வேண்டும் என்பது சரியான முடிவாக இருக்கும் என்று வலுவாகக் கூறியுள்ளீர்கள். அதே நேரத்தில், எந்த சிஸ்டத்திற்கு மாற வேண்டும் என்பதனையும் தெளிவாகக் காட்டியுள்ளீர்கள். எக்ஸ்பியில் தான் இருப்பேன் என்று கூறி, தொடர்ந்து வரும் ஆபத்தினை அறியாமல் இருப்பவர்களுக்கு உங்கள் கட்டுரை அருமையான பாடமாக உள்ளது.
டாக்டர். எஸ். சீத்தாராமன், கும்பகோணம்.

எக்ஸ்பி சிஸ்டத்தால், புதிய தேவைகளை நிறைவேற்ற முடியாது என்பதனை விளக்கியது அருமையாக உள்ளது. இதனைப் படித்த பின்னராவது, எக்ஸ்பி வாடிக்கையாளர்கள், மாறுவார்கள் என எதிர்பார்ப்போம்.
பேரா. சி.எஸ். உதயன், விருதுநகர்.

விண்டோஸ் 8 சிஸ்டம் தரும் டாஸ்க் மானேஜர், கூடுதல் வசதிகளுடன் இருப்பது, பல வகைகளில் நமக்குப் பயன் தருவதாக உள்ளது. நீங்கள் தந்துள்ள டிப்ஸ் அதனை அருமையாக விளக்குகிறது.
என். கார்த்திகேயன், சென்னை.

எக்ஸெல் பில் ஹேண்டில் பயன்பாட்டில் சிறு சிறு சிக்கல்கள் இருந்தன. குறிப்பாக நாட்கள், எண்கள் இணையும் போது பிரச்னை தெரிந்தது. அவை குறித்த தங்களின் டிப்ஸ், குழப்பத்தினை நிவர்த்தி செய்தது.
என்.சூர்ய கலா, பொள்ளாச்சி.

விண்டோஸ் 8 சிஸ்டம் பயன்பாடு பரவலானதற்கு முன்பே, நம் ரயில்வே, விழித்துக் கொண்டு, அதற்கான டிக்கட் புக்கிங் தளத்தினை வழங்கியது மிக அருமை. இப்படியே அனைத்து அரசு நிறுவனங்களும் இயங்கினால், நாம் எங்கோ போய்விடுவோம் -- கணினிப் பயன்பாட்டில்தான்.
ஆர். இளங்குமரன், காரைக்கால்.

புதிய வேர்ட் தொகுப்பில், லைன் ஸ்பேசிங் அமைப்பது, சற்றுப் புரியாத புதிராக இருந்தது. நீங்கள் அளித்துள்ள டிப்ஸ், படிப்படியாக இதனை விளக்கி, சந்தேகத்தை நிவர்த்தி செய்கிறது. நன்றி.
என். பாரதி செல்வன், கம்பம்.

வேர்ட் புரோகிராமிற்கான கிளிக் டிப்ஸ் படித்தேன். இது மிகவும் கொஞ்சம். மவுஸ் மற்றும் கிளிக் செயல்பாடு, மவுஸுடன் இணைந்த கீ போர்ட் செயல்பாடு குறித்து விரிவாக எழுதவும். ஒவ்வொன்றாக அவ்வப்போது அறிவதைக் காட்டிலும், மொத்தமாக அறிய, உங்களை விட்டால், எங்களுக்கு யார் இருக்கிறார்கள். தயவு செய்து, கட்டுரை ஒன்று இது குறித்து வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ஆ. சரவணக் குமார், திண்டுக்கல்.

கூகுளின் யு ட்யூப் மட்டுமல்ல. அதன் அனைத்து இணையப் பிரிவுகளும், ஆக்டோபஸ் போல பரந்து விரிந்து தங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கையை வளர்த்து வருகின்றன. வர்த்தக நிறுவனங்களுக்குக் கூட பல சலுகைகளை அளிப்பதாகக் கேள்விப் பட்டேன். நல்லதுதானே!
எஸ். புண்ணிய மூர்த்தி, மதுரை.

மிக நன்றாக, நெத்தியடி போல, ஐபோனின் விலை ஏன் இந்தியாவில் குறைக்கப்பட வேண்டும் என விளக்கியது அருமை. ஆப்பிள் நிறுவனம் செவி சாய்க்குமா?
எஸ். விஜய் ஆனந்த், சென்னை.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X